அன்பெழில் Profile picture
Jul 21 16 tweets 3 min read Twitter logo Read on Twitter
#மேல்மலையனூர்_ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி_அம்மன்
இவர் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர். தண்டகாருண்யம் என்ற சக்தி பீடம் இவரால் உருவாகியது. தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள். இமவான் மகளாக இருந்தவள் தன் கணவனைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். தன் Image
கணவனைப் பிரிந்து அவரைக் காப்பாற்ற அன்னை வந்து இங்கு குடி கொண்டதால் இங்கு கணவனைப் பிரிந்தவர்கள் வந்து அம்மனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். தட்சன் தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்ததால் கோபம் அடைந்த தாட்சாயணி, அந்த யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக் Image
கொண்டார். அந்த உருவமற்ற அம்சமே அங்காளி ஆகும். அங்காளியைத் தன் தோளில் சுமந்து ஆவேசமாக நடனமாடினார் ஈசன். அப்போது அம்பிகையின் கை துண்டாகி கீழே விழுந்தது. அது தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது. அதில் ஒரு பகுதியே மேல்மலையனூர். அம்பிகை யாகத்தில் சாம்பலான இடம் என்பதால் இங்கு சாம்பலே Image
பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பிகையின் அருட் திருவருள் கடலெனப் பரந்தது என்றாலும், தன்னை நம்பி வரும் அடியவரின் துயர் நீக்கும் தன்மையே பெரிதாகப் போற்றப்படுகிறது. அம்பிகையின் சக்தியாலேயே இவ்வுலகம் இயங்கினாலும் அனைத்துப் பெருமைகளையும் இறைவனுக்கு அளித்து விட்டு அமைதியாகப் புன்னகை
பூக்கிறாள் அம்பாள். தொடக்க காலத்தில் சிவனைப்போல பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என்று பிரம்மன் ஆணவம் கொண்டார். இதையடுத்து அவருடைய ஒரு தலையை கிள்ளி எடுத்தார், ஈசன். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. ஈசன்
கிள்ளிய பிரம்மனின் தலை, சிவபெருமானின் கையில் மண்டை ஓடாக மாறி ஒட்டிக்கொண்டது. அவர் ஒரு கையில் கபால திருவோடு, மற்றொரு கையில் சூலாயுதம் தாங்கியபடி, உடலெங்கும் சாம்பலை பூசிக்கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். அதன் ஒரு பகுதியாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் குடிகொண்டிருக்கும் Image
இத்தலத்துக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை
அடக்கினார். இதையடுத்து சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிக்க தேவர்கள் அனைவரும் தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்தனர். தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், Image
மாடங்களாகவும், மரப்பலகை களாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர் என்பது கோவில் வரலாறு. அமாவாசை நாட்களில்
ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க 24 மணிநேரமும் திறந்து
வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின் போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கையில் பக்தர்கள் பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து
உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்பணிக்கின்றார்கள். மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்க்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.
ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி, கார்த்திகை, தைப் பொங்கல், மாசி மாதத் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலின் நடைபெறுகின்றன. இந்தக் கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்
சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிப்பார். பின்னர் கற்பூரத்தை கொளுத்தி, அதை பேய் பிடித்தவர்களிடம் கொடுப்பார். அதை வாயில் போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் உடலும், மனதும் அமைதியாகிவிடும். அமைவிடம் விழுப்புரம்
மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் திருத்தலம் உள்ளது.
அங்காள பரமேஸ்வரியே சரணம்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image
@threadreaderapp unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 23
#NamaMahima #Foodforthought
There are everlasting benefits in chanting the Nama of God and one can never finish listing the benefits of Nama! Those who have understood this will know what is known as #Nama_ruchi! This joy cannot be explained to others. If we say sugarcane is Image
sweet, one who has not tasted sugarcane will never be able to fathom the sweetness of sugarcane. It is the easiest form of prayer to attain Mukti. No big effort is needed like doing Homa and be well versed in Shastra to chant Mantras. Just sitting or standing or walking or Image
working, our mind can continuously chant the name of God and the benefits from that are limitless. To cross the ocean of Samsara in Kaliyuga the best modus operandi is chanting Bhagavad Nama!
The greatness of Nama Smarana was elucidated by #Narada #Sukabramma #Prahalada and
Read 10 tweets
Jul 22
#Koniamman_Temple, is a historic temple located on the northern bank of the Noyyal River of #Coimbatore, Tamil Nadu. Goddess Koniamman is Parvati, who is the guardian deity of the city. This temple is one of twin historic temples in the city, the other being Perur Pateeswarar Image
Temple. The history of the temple and deity dates back to the 13th century, built by a leader of a small group known as "Irulas". The village was also named as "Covanputhur" after the leader of this group, whose name was "Covan". Koyamma, the goddess worshiped by chieftain Kovan Image
evolved into Koniamma and the name of the city Koyampuththoor derived from Covanputhur. The people in this region conduct the betrothal ceremony in this temple. In fact they decide who is to marry whom by placing flowers (red and white) in front of the deity and the flower picked Image
Read 10 tweets
Jul 22
#தக்‌ஷிணாயனம்
சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே ‘தட்சிணாயன’ காலமாகும். ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்து, தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயன புண்ணிய காலம் என்று அழைக்கிறார்கள். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய 6 மாதங்கள் Image
தட்சிணாயன காலமாகும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதங்களும் உத்தராயன காலமாகும். 'தட்சண' என்றால் வடமொழியில் 'தெற்கு' என்று பொருள். `அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே 'தட்சிணாயன' காலமாகும். #ஆடி முதல்
நாளன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான 6 மாத காலம், தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் விடிகாலை பஜனை பாடி தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.
Read 12 tweets
Jul 22
#மகாபெரியவா
கட்டுரையாளர் - பி சுவாமிநாதன்
சங்கராம்ருதம் - 580
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

அது 1991-ஆம் வருடம். மகா பெரியவா முதுமைக் காலத்தில் இருந்தார். பக்தர்களுக்கு அதிக தரிசனம் அப்போது இல்லை. அன்றைய தினம் விசேஷமாக மகா Image
பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ரொம்ப நாள் கழித்துப் பெரியவா தரிசனம் தரப் போகிறார் என்பதற்காக அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுள் நாராயணன் – வைதேகி தம்பதியர். சென்னையில் வசிப்பவர்கள். நாராயணன் இடுப்பில் அவர்களது
ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது. விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘மகா பெரியவா அருகே செல்ல வேண்டும், அந்த மகானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்’ என்பது இந்தத் தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது.
Read 19 tweets
Jul 21
#MahaPeriyava
Author: AshrImatham (Kanchi hermitage) disciple
Compiler: T.S. Kothandarama Sarma
Source: Maha PeriyavaL - Darisana AnubhavangaL vol.3, pp.067-092
Publisher: Vanathi Padhippaham (May 2005 Edition)
pp.067-068

Arrangements were on for the upanayanam ceremony of the Image
only son of Ganesan and his wife, Kumbakonam. A day before the muhurtam, the boy met with an accident when a bus crushed him dead. The couple were afflicted with endless sorrow and suffering. After a few months, they came for having darshan of shrI Periyaval. The close disciple
who arranged the darshan, informed the sage about their prayer, who were afflicted with putra-shokam to have a child to continue the progeny again. Periyaval, after keeping his hand on his nAbhi, navel for sometime, did dhyanam, closing his eyes and then gave two guava fruits to
Read 7 tweets
Jul 20
#ஶ்ரீமத்_ராமானுஜர்
#ஆதிசேஷனின்_அவதாரம்

தொண்டனூர் ஆலயத்தில் ஸ்ரீ நரசிம்மர் சன்னதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். 12,000 சமணர்கள் ஒருபுறம், ராமாநுஜரும் அவரது சீடர்களும் ஒரு புறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒருபுறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவரது பரிவாரங்களும் ஒரு புறம். Image
“12,000 பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா? சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.

"கண்டிப்பாக! எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்" என்றார்கள் சமணர்கள்.

"சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்" என்றார் ராமாநுஜர்.

திரையின் ஒருபுறம்
ராமாநுஜர் இருக்க மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.
“யார் முதல் வினாவை கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா?”

"அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(