அன்பெழில் Profile picture
Aug 12 31 tweets 8 min read Twitter logo Read on Twitter
#தலவிருட்ச_வழிபாடு
ஆலயம் தோறும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி, அதை புனிதமாக கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. சங்க காலத்துக்கும் முந்தைய தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் மரங்கள், மனிதர்களின் வாழ்வில் பின்னி பிணைந்து Image
இருப்பதுதான். மரங்கள் இல்லாவிட்டால் நாம் இல்லை. மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. மரங்கள் காற்றில் உள்ள கரியமல வாயுவை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. இந்த ஆக்ஜிசன் தான் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களை தொடர்ந்து உயிர்த் துடிப்புடன் வாழச் செய்கின்றன. இதை உணர்ந்தே நம் Image
முன்னோர்கள் தலங்கள் தோறும் மரத்தை வைத்து போற்றினார்கள். ஒவ்வொரு தல விருட்சத்துக்கும் பின்னணியில் நிச்சயம் ஏதாவது ஒரு கதை இருக்கும். இதன் மூலம் மரங்களை சிவரூபமாகவும், விஷ்ணு ரூபமாகவும், சக்தி ரூபமாகவும் வழிபடும் வழக்கம் தோன்றியது. அரச மரம் சிவ ரூபம் வேப்ப மரம் சக்தி வடிவம். அதனால் Image
தான் அரசும், வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றொடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவசக்தி உறையும் இடமாக கருதி வழிபாடு செய்கிறோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வேப்ப மரத்தை மாரியம்மன் ஆகவே கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் ஏற்பட்டதே இதனால் தான் Image
இதே போல ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆற்றல் உண்டு. குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம், வன்னி, மகிழ் போன்ற மரங்களை தற்காலத்தில் கோவிலைத் தவிர வேறு இடங்களில் பார்ப்பதே அரிதாக உள்ளது. தமிழ் இலக்கியங்கள் போற்றும் கொன்றையும், மருதமும் எத்தனை மகத்துவம் நிறைந்தவை! தெய்வாம்சமும் Image
பேரருளும் பெற்ற கொன்றை மரங்களும், மருத மரங்களும் நம் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். கோவில்களில் தல விருட்சங்களாக விளங்கி சகல துன்பங்களை நீக்கி, எந்த நோயும் வராமல் காப்பவை. பிள்ளையார்பட்டியிலும் திருவிடைமருதூரிலும் தலமரமாக விளங்குவது மருத மரம். கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் Image
ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். வில்வ இலைகளால் சிவபெருமானைப் பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும். பந்தநல்லூர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களின் தலமரம் கொன்றை. ஸ்ரீரங்கத்தில் மஹாலட்சுமியின் சந்நிதிக்கு அருகில் வில்வம் Image
உள்ளது. திருவையாறு, தஞ்சை ராமேஸ்வரம், திருவெண்காடு, திருவைகாவூர் இன்னும் பல சிவ தலங்களின் தலமரம் வில்வம். பெரும்பான்மையான கோவில்களில் வில்வம் முதலிடம் பெற்று விளங்குகிறது. திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆலமரம் உள்ளது. திருப்பூந்துருத்தி Image
திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் வன்னி. வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது வன்னியே. குளிர்ந்த நிழலையும் மணம் கமழும் மலர்களையும் உடையது மகிழ் மரம். இது வகுளம் எனவும் புகழப்படுகிறது. திருவண்ணாமலை, திருவொற்றியூர், தஞ்சை ஆகிய தலங்களில் மகிழ மரம் Image
தல விருட்சமாக விளங்குகின்றது. சந்தன மரம், அத்தி மரம் - விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது! சந்தன மரத்திலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்கின்றனர். ஸ்ரீ வாஞ்சியத்தில் தலமரமாக சந்தனமரம் உள்ளது. காஞ்சி வரதர் அத்தி மரத்தினால் ஆனவர்.
மயிலாடுதுறையை அடுத்த கோழி குத்தி வானமுட்டிப் பெருமாளும் அத்தி மரத்தில் விளங்குபவரே! வீடுகளில் சுபகாரியங்கள் நிகழும் போது கட்டப்படும் மாவிலைத் தோரணங்களின் அழகே அழகு! மா மரம் காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருத்தலங்களின் தலமரமாக திகழ்கிறது. நெல்லி மரத்தின் கீழிருந்து Image
தானம் செய்தால், தானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும் என்பார்கள். நெல்லி திருநெல்லிகா, திருநெல்வாயில், பழையாறை முதலிய திருத்தலங்களின் தலமரமாகும். மாதுளை மரத்தின் கீழ் விளக்கேற்றி வைத்து இளம் தம்பதியர் வலம் வந்து வணங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு அகலாது இருப்பர். Image
திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களின் தலமரம் -அரசு. அரச மரத்தின் வேர்களில் மஞ்சள் நீர் ஊற்றி நெய்தீபம் ஏற்றி வர புத்ர தோஷம் நீங்கும். இலுப்பை எண்ணெய் கொண்டு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் காரிய சித்திகள் பல கைவரப் பெறும் என்பது அசைக்க முடியாத உண்மை. இலுப்பை மரம் Image
தலமரமாக விளங்கும் திருத்தலம் - திருச்செங்கோடு ஆகும். புளிய மரம், கருவேல மரம், எட்டி மரம் ஆகியன தீய அதிர்வுகளை வெளிபடுத்தக்கூடியன. இவற்றின் நிழல் உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனாலேயே இந்த மரங்களை வீட்டுக்கு எதிரில் வளர்ப்பதில்லை. இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள்
இருப்பினும் காய் மற்றும் வேர்களை தவறான காரியங்களுக்கு பயன் படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகளுக்கு இம்மரங்களே அடைக்கலம் கொடுக்கும் என்பர். லிங்கத்தின் மீது நாகம் குடை பிடித்தாற்போல அற்புத வடிவம் கொண்டு திகழ்வது நாகலிங்கப் பூவாகும். இந்த நாகலிங்க மரம் சுற்றுப்புற காற்றில் Image
உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புலியூர் பரத்வாஜேஸ்வரர் ஆலய தல விருட்சமாக நாகலிங்க மரம் உள்ளது. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனும் நால்வருக்கும் சிவபெருமான் யோக நிலையில் குருமூர்த்தியாக வீற்றிருந்து ஞானோபதேசம் செய்வித்தது
ஆலமர நிழலில்! அந்த எம்பெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு 32 அறங்களையும் வழுவாது இயற்றியவளாய் அம்பிகை தவமிருந்தது மாமர நிழலில்! திருத்தலம் மாங்காடு! அம்பிகை கம்பை ஆற்றின் கரையில் மாமர நிழலில் மணலில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்ட திருத்தலம் காஞ்சி அம்பிகை மயில் வடிவாக
எம்பெருமானைப் பூஜித்தது புன்னை வனத்தில்! அந்த புன்னை வனமே திருமயிலை! அம்பிகை ஐயனை வழிபட்ட தலங்களுள் சிறப்பானது திருவானைக்காவல் ஆகும். இங்கே தல விருட்சமாக நாவல் மரம் உள்ளது. விக்னங்களைத் தீர்த்தருளும் விநாயகப் பெருமானுக்கு உகந்தவை அருகம் புல்லும் எருக்கம்பூவும்! சுந்தரர்
சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் வாக்களித்தது திருவொற்றியூர் மகிழ மரத்தின் கீழாகும். சீர்காழியில் பாரிஜாதம், திருநெல்வேலியில் மூங்கில் தலமரங்களாக உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் தமது அஞ்ஞாத வாசத்தின் போது ஆயுதங்களையும் மந்த்ர அஸ்திரங்களையும்
பொதிந்து வைத்த மரம் வன்னி மரமாகும். எமதர்மன் பணி செய்து வணங்கும் திருப்பைஞ்ஞீலியில் தலமரமாக வாழை உள்ளது. இந்த வாழை மரம் திருமண தோஷத்தை விரட்டக் கூடியது.
பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை Image
கிராமத்தில் ஆல மரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையில் இருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு. இந்த கிராமத்தில் ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது. பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே. மற்றபடி மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் ஒற்றைப்
பனைக்கே! இந்த ஒற்றைப் பனையில் சத்தியத்தின் வடிவாக குடிகொண்டு அருள்பவர் ஸ்ரீவைரவர். நம் பக்கம் நியாயம் இருந்து, வைரவா! நீ கேள்! என்று முறையிட்டால் போதும் தலவிருட்சம் உதவும் என்கிறார்கள். மதுக்கூரில் புகழ் பெற்ற பெரமையா சுவாமி கொலு இருப்பது மரக் கூட்டங்களில் தான்! அருகில் உள்ள ஒரு
கிராமத்தில் ஸ்ரீ காளி குடி கொண்டிருப்பது உடை மரம் எனும் ஒருவகை அபூர்வ மரத்திலாகும். திருமழபாடியில் பனை, ஆடுதுறையில் தென்னை மரம் தல விருட்சகமாக உள்ளன. அபிராம வல்லியும் அமிர்தகடேஸ்வ உறையும் திருக்கடவூரில் தலவிருட்சம் முல்லைக் கொடியாகும். முருகன் பாதங்கள் பதிய நடந்தருளிய திருத்தலம்
திருவிடைக்கழி. இங்கே, தல விருட்சம் குரா மரம். தல விருட்சம் இருந்த இடங்கள் ஒரு காலத்தில் அந்தந்த மரங்களுக்குரிய வனமாக இருந்ததாக சொல்வார்கள். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் பஞ்ச வனதலங்கள் உள்ளன. அவை #திருக்கருகாவூர் -முல்லை வனம் #திருஅவளிவநல்லூர் -பாதிரி வனம் திருஅரதைப் பெரும்பாழி
(ஹரித்வார மங்கலம்) - வன்னி வனம் #திருஇரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம் #திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்.
சைவ வைணவ சமயங்களும், புத்த சமயமும் அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இது பிப்பலாச விருட்சம், அரணி, அஷ்வதா என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இது ஆலமரம், அத்திமரம் போன்று
புனிதத் தன்மை கொண்டது. சரஸ்வதி நதியானது நான்முகனின் கமண்டலத்தில் இருந்து தோன்றி பலாசம் எனும் அரச மரத்தினுள் ஊடுருவி வெளிப்பட்டு இமாசல மலையில் வழிந்து ஓடிவருகின்றது என கந்த புராணம் குறிப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர். வாழ்வின் அர்த்தம் தேடி அரண்மனையின் சுக போகங்களைத் துறந்து ஞானம்
தேடிப் புறப்பட்ட சித்தார்த்தர் ஒருநிலையில் ஞானம் எய்தி, கவுதம புத்தர் ஆனார் என்பது வரலாறு. சித்தார்த்தர் அமர்ந்து தியானம் செய்தது அரச மரத்தின் நிழலில் தான். சைவத்தில் அரச மரம், ஞான விருட்சம் எனக் குறிக்கப்படுகின்றது. நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் திருமூலர் மூலன் எனும் இடையனின் Image
உடம்பிற் புகுந்த சிவயோகியார். இவர் கயிலை மாமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். இவரே மகத்தான திருமந்திரம் அருளியவர். திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள அரசமரத்தின் நீழலில் பல்லாண்டுகள் இவர் சிவயோகத்தில் அமர்ந்திருந்தவராவார். புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த Image
அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பர். அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும். ஞானம் கிட்டும். ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் அவதரித்து பதினாறு ஆண்டு காலம் சடகோபன் என தவமிருந்து நம்மாழ்வார் என ஞானப் பேரொளியாக Image
வெளிப்பட்டது புளியமரத்தின் அடியிலாகும். இப்படி தல விருட்சத்தின் மகிமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image
@threadreaderapp unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 14
#குலதெய்வம்_தெரியாதவர்கள்_வணங்க_வேண்டிய_துர்க்கை
குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே பணிகளைத் தொடங்க வேண்டும். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தி. சிலருக்குக் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் Image
இருக்கும். இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதுண்டு. இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள #கதிராமங்கலத்தில் உள்ளது. கதிர் வேய்ந்த மங்கலம் என்று
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இங்கிருந்து காசிக்கு தினமும் சென்று கங்கையில் நீராடிவிட்டு மீண்டும் இங்கு வந்து தவம் மேற்கொள்கிறாள் மாதவச்செல்வி. அதனால் தான் இன்றும் அம்பிகையின் மேலிருக்கும்
Read 10 tweets
Aug 14
#நற்சிந்தனை
தவத்தில் இருந்த மகரிஷி மார்க்கண்டயன், கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென Image
கருதினர். ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி மார்க்கண்டயன் கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் மணிமாறன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார். மன்னன் சிரித்தபடியே
போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! மணிமாறா நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என சொல்லி விட்டு
Read 10 tweets
Aug 14
#மகாபெரியவா
கட்டுரை ஆசிரியர்-ரா.கணபதி
கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.

நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப் பள்ளியா என்று சரியாக நினைவில்லை. ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை Image
நடந்ததை முன்னிட்டு வெளியே தரிசன Q சிறிது நேரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. Qவிலே ஒரு பாட்டி. நூறுக்கு மேல் பிராயம் ஆகி இருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவர் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறார்.

“சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே
போயிடுவேனான்னு தவிச்சிண்டு இருந்தேன். ஊரைத் தேடி வந்தே! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா!” என்று ஆவி சோரக் கூவிக் கொண்டிருந்தார். வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க் கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத்
Read 14 tweets
Aug 13
#மகாபெரியவா
பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை அப்பா என்றும் நீ என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர் நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம் சதாராவில் போய் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டு அன்றுதான் Image
திரும்பியிருந்தார். அவரைத் தேடிக்கொண்டு ஒரு நண்பர் வந்தார்.
முகத்தில் அப்படியொரு சோகம். "மஹாலிங்கம் ஸார் எம்பிள்ளை மெட்ராஸ்ல படிச்சிண்டு இருக்கான். திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல்லா எடத்லையும் விஜாரிச்சாச்சு! ஒண்ணுமே தெரியலை நீங்கதான் பெரியவாளோட பரம பக்தராச்சே! பெரியவா
கிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேற கதி இல்லே. என்னை சதாராவுக்கு அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார். மகாலிங்கத்திற்கோ என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அவர் மனைவி சொன்னாள் "பாவம் அழைச்சிண்டு போங்கோ! பிள்ளையைக் காணாம தவிக்கறார்" என்று பரிந்தாள். இருவரும்
Read 11 tweets
Aug 13
#ஶ்ரீமத்ராமாயண_பாத்திரங்கள்_அகர_வரிசையில்
1. அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.

2. அகத்தியர் - ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.

3. அகம்பனன் - இராவணனிடம் இராமனை பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்குத் தப்பிப் பிழைத்த அதிசய ராட்சசன். Image
4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.

5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.

6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.

7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள்.
ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.

8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப் பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்.

9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி. இராமனுக்கு உடன்பிறவா சகோதரர்!

10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி,
Read 19 tweets
Aug 13
#மகாபெரியவா
காஞ்சி மகான் அருளுரை.
மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, 'நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனால், பிரச்சினைகள் தீரவே இல்லை. பகவான் இன்னும் கண்திறந்து பார்க்கலை' என்று வருத்தப்பட்டார்.

அதைக் கேட்ட மகாபெரியவர், "ஸ்லோகம் சொல்லும்போது சுவாமி முன்னே உட்கார்ந்து, சுவாமியை மனசிலே Image
நிறுத்திதானே பாராயணம் பண்றேளா?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பெண்மணி, "வேற வேலை பார்த்துக்கிட்டே தான் சொல்றேன். அந்த அளவுக்கு மனப்பாடம் பண்ணியிருக்கேன் எல்லாமே" என்றார் பெருமையுடன். அதற்கு மகா பெரியவர் சொன்னார்:

"காய் நறுக்கணும்னா அரிவாள்மணை, கத்தியை கிட்டே வெச்சுக்கறோம்.
சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர்ப் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினாதான் ஓடறது. ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்டே போக வேண்டாமா? ஸர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா, பக்கத்துல உட்கார்ந்து
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(