#திருவண்ணாமலை_அஷ்ட_லிங்கங்கள்
சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இந்திர லிங்கத்தில் தொடங்கி அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், எம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என 8
லிங்கங்கள் இங்குள்ளன
இந்த எட்டு லிங்கங்களுமே 12 ராசிகளோடு நெருங்கிய தொடர்பு உடையவை. இந்த அஷ்ட லிங்கங்களும் மனித வாழ்வின் 8 கட்டங்களை பிரதிபலிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. அஷ்ட லிங்கங்கள் இங்கு இருப்பதால் எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களை எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாகவே அதிக அளவில்
சித்தர்களையும், யோகிகளையும் மகான்களையும், மலை தன்பக்கம் இழுத்து வருகிறது. பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேண்டுதலோடு இந்த அஷ்ட லிங்கங்களையும் வேண்டிக் கொண்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள்.
#இந்திர_லிங்கம்
கிரிவலம் வரும் பாதையில் முதலில் உள்ளது இந்திர லிங்கம்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்திற்கு வெகு அருகில், கிழக்கு திசையில் உள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரனே நேரடியாக இங்கு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டு செல்வதாக ஐதீகம். நவக்கிரகங்களின் நாயகனான சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சி பெற்ற இந்த லிங்கத்தை வணங்கினால் நீண்ட ஆயுளும்,
பெருத்த செல்வமும், அரச போக வாழ்வும் கிடைக்கும். ரிஷபம் மற்றம் துலாம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய லிங்கமாகும்.
#அக்னி_லிங்கம்
கிரிவலப் பாதையில் தென் கிழக்கு திசையில் அக்னி லிங்கம் உள்ளது. சந்திரனுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்த லிங்கமே, குளிர்ந்து அக்னி லிங்கமாக காட்சியளிக்கிறது.
சேஷாத்திரி சுவாமிகளின் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தை வழிபட்டு கிரிவலம் வந்தால், சஞ்சலங்கள் நீங்க மனம் தெளிவு பிறக்கும் என்பது ஐதீகம். சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.
#எம_லிங்கம்
கிரிவலப் பாதையில் தென் திசையில் மூன்றாவதாக அமைந்துள்ளது எம லிங்கம். தென்
திசையின் அதிபதியான எமனுக்கு சிவபெருமான் தாமரை மலரில் லிங்க வடிவில் தோன்றினார். எம லிங்கத்தை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். தேவையற்ற வீண் செலவுகள் குறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய லிங்கம்.
#நிருதி_லிங்கம்
கிரிவலம் வரும்
பாதையில் அடுத்ததாக உள்ளது நிருதி லிங்கம். இது தென் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக தோன்றி காட்சி கொடுத்த இடமாகும். நந்தி தரிசனம் நிருதி லிங்கம் அருகில் இருந்து. சனி தீர்த்தம் என்ற குளம் இதன் அருகில் அமைந்துள்ளது
இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தலமாகும்.
#வருண_லிங்கம்
கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவில் லிங்கமாக தரிசனம் தந்தருளிய தலமாகும். இந்த லிங்கத்தை வணங்கினால்
மேற்கு திசைக்கு அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத வினைகளையு தீர்த்து வைக்கும் தலமாகும். மேலும், இங்கு வருண தீர்த்தம் என்ற குளம் உள்ளது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.
#வாயு_லிங்கம்
கிரிவலப் பாதையில் அடுத்ததாக வரும் லிங்கம் வாயு லிங்கம்.
இது வடமேற்கு திசையில் உள்ளது. வாயு பகவானால் உருவாக்கப்பட்டது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு தான் ஆட்கொண்டார். கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய லிங்கமாகும். இந்த லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவோர்க்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது
பகவானின் பரிபூரண ஆசியும் சகல யோகங்களும் கிட்டும்.
#குபேர_லிங்கம்
கிரிவலப் பாதையில் ஏழாவதாக அமைந்துள்ள லிங்கம் குபேர லிங்கமாகும். வட திசையின் அதிபதியான குபேரன், இந்த இடத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசித்து வணங்கிய பிறகு, தான் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பவும் பெற்றார்.
பக்தர்கள் செல்வச் செழிப்புடன் வாழ குபேர லிங்கத்தை வழிபடவேண்டியது அவசியமாகும். இது குருபகவானின் ஆட்சி செய்யும் லிங்கமாகும். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.
#ஈசான்ய_லிங்கம்
சுமார் 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள
லிங்கமாகும். நந்தீஸ்வரர் வணங்கிய லிங்கம். எம்பெருமான் ஈசனைத் தவிர அனைத்துமே நிலையற்றது என்பதை உணர்த்தும் ஞான சன்னிதி இதுவாகும். புதன் கிரகம் ஈசான்ய லிங்கத்தை ஆட்சி செய்வதால், அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கலாம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய லிங்கம்.
பௌர்ணமி நாள் அன்று அஷ்ட லிங்கங்களை வழிபடுவது வழக்கம்
ஓம் சிவாய நம 🙏
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻
@threadreaderapp unroll
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி_ஸ்பெஷல்
மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி). அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.
செப்டம்பர் 6/7 தேதிகள் #கோகுலாஷ்டமி #ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி பண்டிகை. பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்,
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம்
தோறும் அவதரிப்பேன்.
கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது. அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும், பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம்,
#நற்சிந்தனை
பொதுவாக இரட்டையர்களை நாம் ராம லட்சுமணன் எனக் குறிப்பிடுவது உண்டென்றாலும், உண்மையில் இரட்டையராக லட்சுமணனுடன் பிறந்தது சத்ருக்கனன் தான். புத்திர பாக்கியம் வேண்டி யாகம் மேற்கொண்ட தசரதன், தன் மூன்று மனைவியருக்கும் யாக பிரசாதத்தைப்
பகிர்ந்தளிக்க, கௌசல்யைக்கு இராமபிரானும்
கையேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையர்களாக லக்ஷ்மண- சத்ருக்கனன் அவதரிக்க, உலகிற்கே
வழிகாட்டிய இந்த 4 உன்னத சகோதரர்களும் ஒன்றாக வளர்ந்து வந்தனர். பிறவி தான் இரட்டை என்றாலும் லக்ஷ்மணன் குணத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டவன்
சத்ருக்கனன். அதே போல, எப்படி ஒரு கணமும்
பிரியாமல் இராமனுக்கு லட்சுமணன் சேவை செய்தானோ, அப்படி பரதனுக்குப் பணிபுரிந்தவன் சத்ருக்கனன். சத்ருக்கனன் என்றால் சத்ருக்களை அதாவது எதிரிகளை துவம்சம் செய்பவன் என்று பொருள். இப்படி பெயரிலேயே வீரத்தைக் கொண்ட சத்ருக்கனன், வில்வித்தை, வாள் பயிற்சியில் மட்டுமின்றி, கலைகளிலும் அதீத
கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம் தானே அது?
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகி
விட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது, அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்
தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற
பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு
#மகாபெரியவா
#ஆவணி_அவிட்டம்
யஜுர் வேத வேதாரம்பம்- மஹேஸ்வர ஸூத்ரம். மற்றும் இட்லி சாப்பிடுவது - மகா பெரியவாளின் சில முக்கிய கருத்துக்கள்- தெய்வத்தின் குரலிலும், வலையிலும்-குறிப்பு எடுக்கப்பட்டது -வரகூரான்
யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம். ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ
(மஹேஸ்வர ஸூத்ரம்) வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!- (‘காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி,
பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல)
ஆவணி அவிட்டத்தில் தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட உபாகர்மாகளைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும். இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை