#விதுர_நீதி சில பகுதிகள்.
விதுரர் எம தர்மரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு விருப்பமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்:
நம்மை யாரும்
வசவு பாடினாலோ, நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை பிறர் வசவு பாடினால் நாம் அதற்காக வருத்தமோ, மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும். மேலும் அவர் செய்த
புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம்மீது அம்பு விடுவதாக நினைத்து ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை
தேடிக் கொள்ள வேண்டும்.
பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது.
கீழ் கண்ட 17 பேர்களும் நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.
1. ஆகாயத்தை நோக்கி வீணே முஷ்டியால் குத்துபவன். அதாவது தமக்கோ, சமூகத்திற்கோ பிரயோஜனம் இல்லாமல் வெற்று காரியம் செய்பவன்.
2. தன்னை விட வலிமை உள்ளவனிடம் விரோதம் கொண்டு அவனை முறியடிக்க முயற்சி செய்பவன். அதாவது
வானத்தை வில்லாக வளைக்க முயற்சிப்பவன்.
3. ஒரு விஷயத்தை பற்றி ஏற்றுக் கொள்ளாதவனிடம் அதைப் பற்றி சொல்பவன். ஒரு விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டுமோ அவனிடம் தான் சொல்ல வேண்டும். புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவனிடம் ஞானத்தை பற்றி உபதேசிப்பது இதற்கு உதாரணமாகும்.
4. தர்மத்தை மீறி நடந்து
விட்டு அவ்வாறு நடந்து கொண்டதை பெருமையாக சொல்லிக் கொள்பவன்.
5. விரோதியை வணங்கி அவனது வீட்டில் உணவு அருந்துபவன்.
6. யார் ஒருத்தன் பெண்களை காப்பாற்றி அவர்களை உழைக்க வைத்து அதன் வருமானத்தில் தனது வாழ்கையை நடத்துகிறானோ அவன்.
எடுப்பவன். மேலும் அவனிடம் பிச்சை பெறுவதற்காக அவனைப் பற்றி புகழ்ந்து பேசுபவன்.
8. யார் ஒருவன் சிறந்த குலத்தில் பிறந்து விட்டு அவனது குல தர்மத்தை காக்காமல் குலத்தை தாழ்த்தும் செயலை செய்பவன்.
9. நல்ல பலம் பொருந்தியவனுடன் விரோதம் கொண்டு தேவை இல்லாமல் அவனிடம் வம்புக்கு செல்பவன்.
10. செய்யும் வேலை பற்றி சிரத்தை இல்லாதவனிடம் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொள்பவன்.
11. எந்த பொருளில் ஆசை வைக்கக் கூடாதோ அந்த பொருள் மீது ஆசை கொள்பவன்.
12. மருமகளிடம் பேசக் கூடாத வார்த்தை அல்லது பரிகாசம் செய்பவன்.
13. எந்த பெண்ணிடம் கூடக் கூடாதோ அந்த பெண்ணிடம்
உறவு கொள்பவன் மற்றும் அவளை கர்ப்பம் தரிக்க வைப்பவன்.
14.பெண்களை நிந்திப்பவன்.
15. வாங்கிய பொருளை திருப்பி தர மறுப்பவன்.
16. தானம் என்று கொடுத்து விட்டு கொடுத்ததைப் பற்றி தம்பட்டம் அடிப்பவன்.
17. ஒரு பொய்யை மெய்யாக்க சாதுர்யமாக பேசுபவன்.
மேலும் அவர் கூறியது,
ஒரு குலம் நன்றாக
இருக்க வேண்டும் என்றால் ஒரு ஆளை தியாகம் செய்து விடலாம்.
ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்தை தியாகம் செய்து விடலாம்.
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்தையே தியாகம் செய்து விடலாம்.
ஒரு ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்து விடலாம்.
விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார்.
1 செருக்கோடு வாழ்தல்.
2 அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர )
3 பிறருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல்.
4 . கோபப்படுத்தல்.
5 . நண்பனுக்கு துரோகம் செய்தல்.
6 பிறரை கெடுத்தல்.
கீழ் கண்ட ஏழும் துக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே இவைகளை தவிர்க்குமாறு தெரிவிக்கிறார்.
பெண்களை அவமானப் படுத்துதல்
சூதாட்டம் ஆடுதல்
அதிகமான வேட்டை ஆடுதல்
கள் குடித்தல்
நல்ல வார்த்தை பேசாது இருத்தல்
சிறுகுற்றத்திற்கு அதிக தண்டனை கொடுத்தல்
பணத்தை விரயம் பண்ணுதல்
சொர்கத்துக்குச்
செல்லும் எட்டு பேர்கள். 1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள். 2. நீதி தெரிந்தவர்கள். 3. கொடுக்கும் குணம் உள்ளவவர்கள். 4. நைவேத்தியம் செய்யப்பட உணவையே உண்பவர்கள். அதாவது பகவானுக்கு உணவை அர்ப்பணித்து விட்டு உண்பவர்கள். 5. பிறரை மனத்தாலோ, உடம்பாலோ அல்லது சொல்லாலோ இம்சிக்காதவர்கள்.
6. உலகத்தில் ஒருவருக்கும் தீங்கு செய்யாதவர்கள். 7. செய்நன்றி மறக்காதவர்கள். 8. சத்தியமே பேசுபவர்கள்.
விதுரர் தர்மத்தின் அம்சம் ஆவார். அவர் சொன்ன கருத்துக்கள் லோக ஷேமத்திற்கு சொன்னது ஆகும். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததாக இருந்தாலும், சனாதன தர்மத்திற்கு சொன்னதாகவே
எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
@threadreaderapp unroll
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
A gentleman greatly devoted to Periyaval was very poor. His daughter’s wedding was to be held. Where could he go for money? He came to Periyaval and made a prayer.
“There is still time. Do not worry,” said Periyaval and sent the devotee away.
Later, Periyaval
sent one of His attendants to another devotee in Madras. This devotee was a wealthy man. Besides, on Periyaval’s instructions, he would also help those in need now and then. When the attendant informed him of the matter, he gave a small amount of money. “But one needs much more
for the wedding. Five hundred rupees will not be sufficient,” said the attendant.
“Look here,” said the devotee. “Do you know what I did? I wrote Rs.200, Rs.500, Rs.1000 and so on right up till Rs.5000, on little slips of paper and placed them in front of the altar. I called my
#ராமநாம_மகிமை போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித் இராமபிரானை எதிர் கொண்டான். அவனுடைய மாய மந்திரங்கள் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான். பரம்பொருளே ஆனாலும் மானிட அவதாரம் எடுத்திருந்ததால் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்தார். கூடவே
லக்ஷ்மணனும். நாரத மகரிஷி பார்த்து பதறி, வைகுண்டம் போய் கருடனிடம், “இராமபிரானை இந்திரஜித்தின் நாக பாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும். நீ உடனே சென்று இராமபிரானை காப்பாற்று” என்றார். கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்.
பரமனையே காப்பாற்றியதால் கருடனுக்கு கர்வம் ஏற்பட்டது. “என்ன நாரதரே இராமர் பரம்பொருள் அவரே எல்லாம் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இல்லாவிட்டால் இராமரை யார் காப்பாற்றியிருப்பார்கள்?” என்றார். கருடனுக்கு ஏற்பட்டுள்ள கர்வத்தை புரிந்து கொண்ட நாரதர், இந்த சந்தேகத்தை சத்தியலோகம் சென்று
"Hindu Dharma" is a book which contains English translation of certain invaluable and engrossing speeches of Sri Sri Sri Chandrasekharendra Saraswathi MahaSwamiji (at various times during the years 1907 to 1994).
“We speak of the
"Hindu religion", but the religion denoted by the term did not in fact have such a name originally. According to some, the word "Hindu" means "love"; according to some others a Hindu is one who disapproves of himsa or violence. This may be an ingenious way of explaining the word.
In none of our ancient sastras does the term "Hindu religion" occur. The name "Hindu" was given to us by foreigners. People from the West came to our land across the Sindhu river which they called "Indus" or "Hind" and the land adjacent to it by the name "India". The religion of
#மகாபெரியவா #சனாதனதர்மம் #இந்துமதம்
இந்து தர்மம் பற்றிய புத்தகத்தில், காஞ்சி மஹாஸ்வாமி (ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, காஞ்சி மடத்தின் 68 வது ஆச்சாரியார்) கூறியது:
“நமது மதத்திற்கு ஏன் பெயர் இல்லை என்று எனக்கு ஒரே நேரத்தில் தோன்றியது. பல மதங்கள் இருக்கும்போது அவை
வெவ்வேறு பெயர்களால் அடையாளம் காணப்பட்டது. ஆனால் ஒரு மதம் மட்டுமே இருக்கும் போது, அதை அடையாளம் காண்பதில் சிக்கல் எங்கே? நமது மதத்தைத் தவிர அனைத்து மதங்களும் தனி நபர்களால் நிறுவப்பட்டது. “பௌத்தம்" என்றால் கௌதம புத்தர் நிறுவிய மதம் என்று பொருள். “ஜைன மதம்” மகாவீரர் எனப்படும்
ஜினாவால் நிறுவப்பட்டது. அது போலவே கிறித்தவமும் இயேசு கிறிஸ்துவமாக தோன்றியிருக்கிறது. இவை அனைத்திற்கும் முற்பட்ட நமது மதம் உலகம் முழுவதும் பரவியது. அப்போது பேசுவதற்கு வேறு மதம் இல்லாததால் அதற்கு பெயர் வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உண்மையை நான் அங்கீகரித்தபோது, கடந்த
#ஆவணி_ஞாயிறு
ஆவணி மாததில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்தவை. ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தை தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்ததாக
கூறப்பட்டுள்ளது. ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவை புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரிய நமஸ்கார பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமானது. கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம்
அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும்
இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை
ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். ஒரேயடியாக முகஸ்துதி செய்யத் தொடங்கினால் அகங்காரம் உண்டாகி விடும்.
மனிதனைப் பாவத்தில் தள்ளுபவை காமம், கோபம் இரண்டும் தான். ஆசையில் இருந்தே இவை பிறக்கின்றன.
நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. அதை மறந்து
விட்டு மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் கவனம் செலுத்தக்கூடாது.
சவாரி முடிந்தபின் குதிரையைத் தட்டிக் கொடுப்பதுபோல, வேலை முடிந்தபின் செய்தவரைப் பாராட்டப் பழகுங்கள்.
கொடிய பாவியாக இருந்தாலும் அவர்களை வெறுப்பதோ, தண்டிப்பதோ பயன்தராது. அவர்களுடைய மனம் நல்வழியில் திரும்ப வேண்டும் என்று
கடவுளிடம் வேண்டிக் கொள்வது ஒன்றே சிறந்தது.
தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை. இதனால், வாழ்வில் ஏக்கமே உருவாகிறது. - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்