#மகாபெரியவா
#விநாயகர்_சதுர்த்தி
"தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி
நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் #பிள்ளையார் என்றே அன்போடு கூறுவது நம்
தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்றுசொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு. “குமாரன்” என்றால்
“பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் குமரக் கடவுள் என்கிறோம். ஆனால், அவரைக் குமரனார் என்பதில்லை. குமரன் என்று தான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப்
பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம். முதல் பிள்ளை இவர், குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம்,
வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும். குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே
போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி
ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை
அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லிவிட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி
அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்….
என்பதில் சொல்லாமல் சொல்கிறார். அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான்
பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில்
சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்."
தெய்வத்தின் குரல்- முதல் பாகம், முதல் அத்தியாயம் மகா கணபதியின் மேல்.
#நற்சிந்தனை
ராமர் காட்டில் இருக்கும்போது ஒரு ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை
எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான். துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, 6
ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க
ஒரு பக்தருக்குக் காது கேட்காது, புத்தகம் படிக்கும்படியான பார்வையில்லை. எதிரில் வரும் மனிதர்கள் நிழலுருவங்களாகத் தெரிவார்கள். வயதான காலத்தில், அவருக்கு ஒரு தீவிரமான ஆசை ஏற்பட்டது.
இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, புராணங்கள் படித்துக் கரையேற வேண்டும் என்று ஒரு வெறியே வந்துவிட்டது. ஆனால், புத்தகத்தைப் படிக்க முடியவில்லை! பெரியவாளிடம், விண்ணப்பித்துக் கொண்டார் பக்தர். அந்தச் சமயத்தில், சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களைப் பார்த்து,
"இவரோ புராணங்கள் படிக்கணும்ணு ரொம்ப ஆசைப்படறார். கண் பார்வை சரியில்லை. என்ன பண்ணலாம்?" என்று கேட்டார்கள். ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை.
"நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா?" - பெரியவா.
"தெரியும்." -பக்தர்.
"அங்கே என்ன விசேஷம்?" - பெரியவா.
Mukkuruni Vinayagar Mahatmyam As told by #MahaPeriyava
Inside the Temple of Madurai Meenakshi is the sanctum of Lord Ganesha bearing the name Mukkuruni Pillaiyar. Mukkuruni Ganesha is also found in Nagapattinam and Chidambaram. Three`kurunni' (a measure) of grains are used to
make`modaka' (a dish made of rice flour) for offering to this Ganesha. Hence, he is known as `Mukkuruni Pillaiyar'. In Madurai, this Ganesha is found on the path that lay between Meenakshi Sannidhi and Chokkanãthar Sannidhi. In Chidambaram, he is found at the head of Therkku
veedhi (South Street). In Nagapattinam, Kanchi Mahaswami Sri Chandrasekarendra Saraswati Swamiji had a single, huge `modaka' made out of the entire flour and offered it to Lord Ganesha. A sack full of rice was ground into flour and one huge `kozhukattai' was prepared out of it!
#விசேஷ_இந்து_திருத்தலங்கள்
கேரள மாநிலம் #இரிஞ்ஞாலக்குடா அருகில் உள்ள #பரதன்_கோயிலில்
பரதன் தவக்கோலத்தில் இருப்பதால், பூஜையின் போது, வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி
உணவு நிவேதிக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் #முக்குடி என்ற வயிற்று வலியை போக்கும் பிரசித்தி பெற்ற பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதம், பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கிறார்கள் என்பது விசேஷமான செய்தி.
#மனநலம்_அருளும்_மாலோலன்
கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியரோடு நரசிம்மர் அருள்புரியும் திருக்கோலத்தை, வைகுண்ட நரசிம்மர் என்று வர்ணிக்கிறார்கள். நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள #திருக்குறையலூரில், இந்த வைகுண்ட நரசிம்மர் அருள்கிறார். பார்வதியைப் பிரிந்த ஈசனுக்கு ஆறுதல் அளிக்க
#பிராா்த்தனை_செய்யும்_முறைகள்
பிறர் காதில் விழும்படி பிராா்த்தனை செய்வது #வாசிகம் எனப்படும். தனது காதில் மட்டும் விழும்படி பிராா்த்தனை செய்வது #உபாம்சு என்று அழைக்கப் படுகிறது. மனதினால் மட்டும் பிராா்த்தனை செய்வது #மானஸம் ஆகும்.
வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும்.
உபாம்சு நூறு மடங்கு
பயனளிக்கும்.
மானஸம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.
வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இருக்கும்போது கைகூப்பி வணங்க சில விதிமுறைகள் உள்ளது. இறைவனை வணங்கும் போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக் கூடாது. தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும்
வீட்டு பூஜை அறையில் வழிபாடு செய்யும் போது ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வரும். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும்.
அப்போது புத்துணர்ச்சி ஏற்படும். பூமி சக்தி சிறிய (சுண்டு)
#விநாயகர்_சதுர்த்தி
#விநாயகப்பெருமான் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார்.
தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகிறது.
விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். கும்பம் ஏந்திய கை