#மகாபெரியவா
காஞ்சி மகான் மீது அபார பக்தி உள்ள ஒரு தம்பதியர் இருந்தார்கள். இத்தனைக்கும் ஒரு முறை கூட மகானை அவர்கள் நேரில் தரிசித்தது கிடையாது. தொலைதூர கிராமம் ஒன்றில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு சமயம் அந்தத் தம்பதியரில் கணவர் மட்டும் ஏதோ ஒரு பணி காரணமாக பட்டணத்துக்குச் செல்ல
வேண்டிய சூழல் வந்தது. அந்தப் பணியைத் தந்தவரே அவருக்கான போக்குவரத்து வசதியையும் செய்து தந்திருந்தார். அதனால், பட்டணம் வந்தவர், அப்படியே காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசித்துவிட்டு வந்தார். அதன் பிறகு தான் ஒரு பிரச்னை ஆரம்பமானது. கணவர் ஊருக்குத் திரும்பிய நாள் முதல் மனைவியின்
மனதுக்குள் மாபெரும் ஏக்கம் ஒன்று புகுந்து கொண்டது. மகானை தரிசிக்கும் பாக்யம் தனக்குக் கிடைக்க வில்லையே என்பது தான். அதனால், சாப்பாடு, தூக்கம் கூட மறந்து சதா சர்வ காலமும் மகானின் திருப் பெயரையே சொல்லிக் கொண்டு இருந்தாள். இது நடந்து ஒரு மாதம் இருக்கும். ஒரு நாள் அதிகாலை நேரம், அந்த
பெண்மணிக்கு ஒரு கனவு வந்தது. "என்னைப் பார்க்க வரமுடியலைன்னு ஏன் ஏங்கறே? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ நானே உன்னைப் பார்க்க வரேன்!" மகாபெரியவர் இப்படிச் சொல்வது போன்ற அந்தக் கனவைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தார். கணவரை எழுப்பி தான் கண்ட கனவைச் சொன்னார். அன்று முதல் அவர் மனைவியின்
செயல்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் மகான் இன்றைக்கு வருவார். நாளைக்கு வருவார் என்று தினம் தினம் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொண்டு மகான் திருப்பெயரையே சொல்லிக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள் அவள். ஒவ்வொரு நாளும் பெரியவா வரவில்லை என்றதும் அவளுடைய அங்கம் அதிகரிக்க
தொடங்கியது. மனைவியின் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்வத்தைப் பார்த்து மனம் நொந்து வருந்தினார், கணவர். இந்த சமயத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. ஒருநாள் அதிகாலை நேரம். நீராடிவிட்டு வழக்கம்போல் மகான் படத்தின் முன் சாம்பிராணி தூபத்தைப் போட்டுவிட்டு, பக்தியோடு அவர் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. திடீரென்று யாரோ கதவைத் தட்டுவது கேட்டு அவசர அவசரமாகக் கதவைத் திறந்தார். வாசலில் மடத்துத் தொண்டர்கள் போல யாரோ இருவர் நிற்க, எதுவும் புரியாமல் திகைத்தவர், கணவரை அவசரமாக அழைத்தார். அவரும் எழுந்து வந்து பார்க்க, வந்தவர்கள் பேசத் தொடங்கினார்கள்.
"மகாபெரியவா, க்ஷேத்ர யாத்திரை செய்து கொண்டிருக்கிறார். உங்கள் ஊர் வழியாகத்தான் போவதாக தீர்மானித்திருக்கிறார். இந்த ஊரில் இரண்டு நாட்கள் தங்குவதாக ஏற்பாடு. எங்கே எந்த இடத்தில் ஜாகை என்று தீர்மானிக்க இடம் தேடி வந்தோம். ‘எந்த வீட்டின் வாசலுக்குச் செல்லும் போது பசுமாடு கத்துகிறதோ,
அங்கே இருந்து சாம்பிராணி வாசனை வருகிறதா என்று பாருங்கள். அப்படி வந்தால் அந்த வீட்டில் தங்க ஏற்பாடு செய்யுங்கள்!’ என்று மகான் சொல்லி அனுப்பினார். உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தபோதுதான் பசுவின் குரல் கேட்டது. இதோ இப்போது சாம்பிராணி வாசனையும் வருகிறது. அப்படியானால் இது தான் மகான்
சொன்ன வீடு என்று தெரிகிறது. இங்கே மகான் எழுந்தருள நினைக்கிறார். 2 நாட்கள் உங்கள் வீட்டை ஒதுக்கிக் கொடுக்க முடியுமா?"
வந்தவர்கள் சொல்லச் சொல்ல மனதுக்குள் மலர்ந்த பரவசத்தில் வார்த்தை ஏதும் வராமல், உடல் சிலிர்க்க அப்படியே நின்றார்கள் தம்பதியர். சில நிமிடத்துக்குப் பிறகு பரிபூரண
சம்மதத்தைச் சொன்னார்கள். மளமளவென்று ஊருக்குள் விஷயம் பரவியது. மகானை வரவேற்க ஊரே திரண்டு வந்தது. ஏழ்மையில் இருந்த அந்தத் தம்பதியரின் வீட்டை போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு சீரமைத்தார்கள். தோரணங்கள் பூக்கள் என்று ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. அடுத்த இரண்டாவது நாள் அவர்கள் வீட்டு
வாசலுக்கு வந்து நின்றார், மகான். உடல் நடுங்க, மனம் சிலிர்க்க பூரண கும்பத்தோடு வரவேற்றார்கள், தம்பதியர்.
உள்ளே நுழையும் போது, மெதுவாகத் திருவாய் மலர்ந்தார் மகான். "என்ன, உன் அகத்துக்காரிகிட்ட கனவுல சொன்ன மாதிரியே வந்துட்டேனா? எல்லாத்துக்கும் அவ வைச்சிருந்த நம்பிக்கைதான் காரணம்"
மகான் சொல்லச் சொல்ல அப்படியே திகைத்து நின்றார் அந்த பக்தர். மனைவி கனவாகச் சொன்னது அவளது கற்பனை அல்ல. உண்மையிலேயே மகான்தான் அவள் கனவில் வந்திருக்கிறார். உண்மையான நம்பிக்கை இருந்தால், தெய்வம் தேடிவந்து அருளும் என்பது சத்தியமான உண்மை. அதற்கு மகான் நம் வீடு தேடி வந்திருப்பதே சாட்சி என்பதை பரிபூரணமாக உணர்ந்தவர், மகான் திருவடியில் சரணாகதியாக விழுந்து நமஸ்கரித்தார்.
#பகவானுக்கு_என்ன_கொடுத்து_வணங்க_வேண்டும்
பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்து அருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து வீட்டு வாசலுக்கே வந்து சேவை சாதிக்கிறார். அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும் போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியில் காத்து
இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை. ஆனால் அவர் ரொம்ப கெட்டிக்காரர். பகவானிடம் போய் நின்று கொண்டு, அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று
சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும் என்றார். உடனே பரமாத்மா கேட்டானாம், இவ்வளவு கேட்கிறீரே, நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?
உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி என்றார் பக்தர்.
என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத்
#ராம்லல்லா #அயோத்தி_தீர்ப்பு #பராசரன்
உச்சநீதிமன்றத்தில், தினமும் அயோத்தி வழக்கு காலை 10.30 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். ராமரை குறித்துப் பேசுகிறோம் என்ற காரணத்தினால், வாதத்தை துவக்கும் முன், பக்தியுடன் எழுந்து நின்று தனது செருப்புகளை கழற்றி வைத்து, ஶ்ரீராமனை
மனதில் தியானித்து, கைகளைக் குவித்து, கண்களை மூடி, தலை குனிந்து வணங்கி, பின்னர் வெறும் காலுடன் 4 அல்லது 5 மணி நேரம் நின்று கொண்டே ராமர் கோவில் தரப்பு வாதங்களை வைப்பார் 93 வயதான வழக்கறிஞர் பராசரன். இது போல ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல 40 நாட்கள் தொடர்ந்து வாதம் செய்தார் பராசரன்.
இந்து கோவிலில், மூர்த்தியாக நாம் வழிபடும் இறைவனுக்கு சட்டபூர்வமாக ஒரு அங்கீகாரம் உள்ளது. அயோத்தி வழக்கில் "ராம் லல்லா" என்று அன்புடன் அழைக்கப் படும் ஸ்ரீ ராமனும் ஒரு வாதிதான் என்று சட்ட நுணுக்கத்தை எடுத்துக்கூறி வழக்கின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் பராசரன். ராமர் பிறந்த இடம்
#நற்சிந்தனை
ஒவ்வொரு மனிதனும் தனிப்பிறவி. தனி ஆத்மா. அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும்,
கணவன், மனைவியாக இருந்தாலும்,
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், எந்த உறவாக
இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதான் அவர்களின் விதி. இதை நாம் மாற்றி அமைக்க முடியாது. அவர்களுக்கு அனுபவம் தான் குரு. அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக்
கொள்வார்கள். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்து இருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன், என்னை
#மகாபெரியவா
(தெய்வத்தின் குரல்)
"அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் #ராஜராஜசோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக் கொண்டிருந்தார்கள். சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது
எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து ப்ரகாசப் படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது. 'எப்படியாவது' என்றால் நடைமுறையில் எப்படி? அதுதான் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒரு நல்ல சேதி வந்தது.' சிதம்பரத்துக்குக் கிட்டே திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார்
நம்பி என்று ஒரு மஹான் இருக்கிறார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம். அவர் ஆதி சைவர். அதாவது குருக்கள் ஜாதி. அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, தான் பூஜை பண்ணும் பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னாராம். இவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்யம்
#மகாபலிபுரம்_ஸ்தல_சயன_பெருமாள்_கோவில்
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது இத்திருக்கோவில். இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமும் #பூதத்தாழ்வார் அவதரித்த தலமும் ஆகும். 700 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று
வரலாறு கூறுகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். நான்கு கரங்களுடன் உள்ள மூலவர்
பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக் கிழமைகளில் வழிபட குருவருளும்,
#Kanchi_Kamakshi
Kanchi Kamakshi temple is at the heart of Kanchipuram. The city surrounds the temple. Devi Parvati, in one of her playful moods, closed the eyes of Lord Shiva and darkness enveloped the whole universe. Shiva got angry with His consort and said that Her otherwise
golden complexion of hers to turn dark, proceed to the Earth and do penance till He came and married Her again. Meanwhile, a sage by name Karthyayana was doing tapas in the Himalayas. Devi Parvati came to the sage as a small child. The sage named her Karthyayani and was bringing
Her up. At the age of 8, she realised the secret of her birth and proceeded to the Satyavrata Kshetra, the present Kanchi.
The girl dressed like a tapaswini carried along with Her a Yoga Dhanda, Akshamaala, Kamandala, Ganga water and sand scooped from the holy river and other