Profile picture
கவி தா @kavitha129
, 53 tweets, 9 min read Read on Twitter
எத்தனை பேருக்கு தெரியும் #தினேஸ் யாரென்று

தனது பதினேழாம் வயதில்... தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்

பிரபாகரன் ஈழம் செல்லும் முன் கள நிலவரத் தகவல்களைத் தானே நேரில் சென்று சேகரித்தவர்
1987ல் யாழ் தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளர்

இந்தியப் படைகளுக்கு எதிராக தென்மராட்சி பகுதியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்

1991ல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்

1993ல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்
தச்சங்காடு ஸ்ரீலங்கா படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் ஸ்ரீலங்கா படையினர் மீதான தாக்குதல்

மன்னார் சிலாபத்துறை ஸ்ரீ லங்கா படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதி

பூநகரி ஸ்ரீ லங்கா படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையில் காலிலே விழுப்புண் பெற்றார்

#ஓயாத_அலைகள்3 ன் கட்டளைத் தளபதி
அவர் தீவிரமாகக் களமாடிய போது கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது
விழுப்புண் பெற்றவர் முடங்கவில்லை
👉விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது
👉மக்களை அணிதிரட்டுவது
👉விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுப்பது
👉மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது
என்று இருந்தார்
யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனை
பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார்
"பட்டினி போட்டு சரணடைய வைக்க முடியாது!’’ -#சுப்பையா_பரமு_தமிழ்ச்செல்வன்

அனுராதபுரம் விமானப் படை முகாம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் “எல்லாளன் நடவடிக்கை” ஆல் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருன்த சிங்கள ஆட்சி பீடம் அரங்கேற்றிய மிலேச்ச தனமான தாக்குதலில் (உறக்கத்தில்)இறந்தார்
பகலவன் கவிதை 👇
#சுப_தமிழ்ச்செல்வ‌ன்
இவ‌னை பெற்றெடுக்க‌
முடிய‌வில்லையே யென்று
த‌மிழ்த் தாய்க‌ளால்
த‌த்தெடுக்க‌ப் பெற்று
தால‌ட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ன்....

த‌ன் புன்சிரிப்பை
ஈழ‌த்தின் அடையாள‌மென‌
அகில‌த்திற்கும் ப‌றைசாற்றிய‌வ‌ன்..
ஊன்றுகோலின் உத‌வியுட‌ன்
உல‌க‌த்தை வ‌ல‌ம் வந்து 
சிங்க‌ள‌த்தின் ஊண‌த்தை
உல‌கிற்கு காட்டிய‌வ‌ன்....

தேசியத் த‌லைவ‌ரின்
சிந்த‌னைக்கு ஒப்பாய்
ஈழ‌த்தின் இன்ன‌ல்க‌ளை
மேடைப் பேச்சுக்க‌ளில்
நேர்மையுட‌ன் முழ‌ங்கிய‌வ‌ன்...
ஆயுத‌மேந்தி பின்பு
அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌வ‌ன்
அன்புட‌ன் ப‌ழ‌கி
எதிரியின் இத‌ய‌த்தையும்
வென்ற‌வ‌ன்...

அன்னை பால‌சிங்க‌த்திட‌ம்
ப‌யின்ற‌ மாண‌வ‌ன்
அகில‌த்திட‌ம் த‌ன் ஆற்ற‌லை
வெளிக் காட்டிய‌ ஈழ‌ காவ‌ல‌ன்...

எதிரிக‌ளின் கூற்றுக்கு
சிற‌ப்பாய் ப‌தில்க‌ளை த‌ந்த‌வ‌ன்
த‌மிழீழ‌ தாக‌மே தீர்வென‌
உர‌க்க‌மாய் சொன்ன‌வ‌ன்...

இது 
த‌மிழ்ச்செல்வ‌னின் சிறப்பு
த‌ர‌ணியில் வாழும் த‌மிழ‌ருக்கெல்லாம்
அவ‌ன் மீது ம‌திப்பு...

இவ‌ன் சிரிப்புக்கு முன்னால்
எம‌னே வ‌ந்தாலும் ஏமாந்திடுவான்..
இந்த‌ புன்ன‌கைப் பூவை ப‌றித்திட‌
உற‌ங்கிய‌ வேலையில்
வானுர்தியை அனுப்பின‌ர்
வ‌ஞ்ச‌க‌த்துட‌ன்
க‌ருகிய‌து எம் கார்த்திகைப் பூக்க‌ள்
பெருகிய‌து எம் க‌ண்க‌ளில் நீர் அலைக‌ள்...

முன்பு ஈழ‌நில‌த்தை மீட்டிட‌
த‌ன் கால்க‌ளை கொடுத்த‌வ‌ன்
அன்று ஈழ‌ விடுத‌லைக்கு
த‌ன் உயிரையே த‌ந்துவிட்டான்....
என் ஈழ‌த் தேச‌த்தின் புன்ன‌கை பூவே
நீ இற‌க்க‌வில்லை
எங்க‌ளுட‌னேயே இருக்கின்றாய்...
ஈழ‌ விடுத‌லையில் யாரும் புதைக்க‌ப்ப‌டுவ‌தில்லை
விதைக்க‌ப‌டுகிறார்க‌ள்
"ஒரு பதினாறு வயதுச் சிறுவனை இராணுவம் படுகொலை செய்கிறபோது அவனது சகோதரனிடம் போய் 'உனக்கு பதினெட்டு வயது ஆகவில்லை என்பதால் வன்முறைப் பாதைக்கு போகாதே' என்று சொல்ல முடியாது" - #சுப_தமிழ்ச்செல்வன் (இவர் பதினேழு வயதில் இயக்கத்தில் சேர்ந்தவர்)
#அலைமகள் (18)
#ஒளிவேந்தன் (13)
#சுப_தமிழ்ச்செல்வன் வாரிசுகள்...

தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா(இசைச்செல்வி - போராளி-- அரசியல்களத்தில் இப்ப இல்ல) தனது மகள் மற்றும்  மகனுடன் 2014ல் பிரான்சு போய்ச் சேர்ந்தார்
(விடுதலைப் புலிகளின் திருமண திட்டப்படி நடந்த முதல் திருமணம் இவர்களுடையது)
ஸ்ரீலங்கா முகாமில் இருந்து இந்தியாவுக்கு தான் வந்தனர்

நெடுமாறன், வைகோ, சீமான், மற்றும் கொளத்தூர் மணி போன்றவர்கள் தங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இந்தக் குடும்பம் தங்களைப் பற்றிய சுயவிபரங்களை அதிகம் வெளிக்காட்டாமலே நடந்து கொண்டார்கள்
தனது பிள்ளைகளை  இயல்பான நிலையில் வளர்ப்பதற்கு இந்தியாவின் சூழ்நிலை பொருத்தப்படாது என்பதைக் கண்ட சசிரேகா பிரான்ஸ் போய் விட்டார்

அரசியலில் ஈடுபடாததால்... இலங்கை அரசு இவரை விடுவித்ததை தவறாக பரப்புரை செய்வோருமுண்டு
"என்னை இலங்கை ராணுவம் பிடித்த செய்தி பிபிசி ஊடகத்தில் வந்த காரணத்தால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை
ஆனால், என்னை வைத்து தமிழ் மக்களை வதைக்கலாம் என்பதால் என்னை உயிரோடு வைத்திருந்தார்கள்" - சசிரேகா
"என்னை மே மாதம் 16ஆம் தேதி, 2009ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பில் இனம் காண்கிறார்கள். பிறகு என்னையும் என் பிள்ளைகளையும் ரூபன் என்கிற போராளி ஆகியோரை மூன்று மணிநேரம் ஒரிடத்தில் அடைத்து வைத்தனர்" - சசிரேகா
பிறகு, தமிழ்செல்வனின் குடும்பத்தார் பிடிபட்டுவிட்டார்கள் அவர்களை என்னசெய்வது என ராணுவகாமண்டருக்குத் தெரிவித்தார்கள்
நாங்கள்பிடிபடுவ்தற்கு மிகமுக்கிய காரணமாகஇருந்தது போராளியாகஇருந்து பிடிபட்டவர்களும்,பொதுமக்களும் என்னசெய்வது என்று தெரியாமல் திகைப்புடன் எங்களைப் பார்த்ததே- சசிரேகா
ஆனால் அந்த இடத்திலும் போராளிகள் சாதுர்யமாக செயல்பட்டு கமாண்டருக்கு எங்களைக் குறித்து தகவல் கூறினர். இல்லாவிட்டால் நாங்களும் இசைப்பிரியாவைப் போல் சிதைக்கப்பட்டிருப்போம்.

அதன்பிறகு, நான் போராளி ரூபனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக சில விஷயங்களைச் செய்தார்கள்- சசிரேகா
வவுனியாவில் இருந்த ராணுவத்திடமும் வெளியே இருந்த ராணுவத்திடம் ரூபனின் மனைவி என்றே சொல்லுங்கள், தமிழ்செல்வனின் மனைவி என்று சொன்னால் ஆபத்து என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள். அதன்பிறகு ரூபன் எங்களுடன் சேர்ந்து நிறைய விசாரணைகளை எதிர்கொண்டார் - சசிரேகா
ஜோசப் கேம்ப்-(சித்திரவதை முகாம்)ல விசாரணை தொடங்கியது

நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னேன். தெரியாதவற்றை, தெரியாது என்றே சொன்னேன். அவர்கள் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்த பிறகு, மற்ற மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அனுப்பினார்கள்- சசிரேகா
எநத இடத்திலும் நாங்கள் ஜோசப் கேம்புக்கு அழைத்துச் செல்லப்பட்டோம் என்பதற்காக எந்த ஆவணத்தையும் அவர்கள் உருவாக்கவில்லை. வவுனியால் ஒரு தனியிடத்தில் என்னையும், பிள்ளைகளையும் ரூபனையும் ஒரு ஆர்மிக்காரர் பார்வையில் இருக்கும்படி வைத்தார்கள் - சசிரேகா
அப்போது வெள்ளைவேனில் வந்த ஒரு ராணுவ கும்பல் என்னையும் என் குழந்தைகளையும் தாக்க முற்பட்டார்கள். ஆனால், ஆர்மிக்காரர் அவர்களிடம் ஏதோ சொல்ல எங்களை விட்டுவிட்டு சென்றார்கள்
பிறகு, மக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள் - சசிரேகா
அதில் முதலில் ஒருவரிடம் நான் தமிழ்செல்வனின் மனைவி, இது எங்கள் குழந்தைகள் என பதிவு செய்தோம்

அவர் எங்களை விட்டுவிடார். அடுத்த பதிவில் இருந்தவரிடம் இதே விவரங்களைக் கூறியபோது, தமிழ்செல்வன் எங்கே என கேட்டார். நான் அவர் 2007ல் இறந்துவிட்டர் என கூறினேன் - சசிரேகா
உடனே அவர்கள் தமிழ்செல்வன் என்ன பிரிவில் இருந்தார் என கேட்டார். அரசியல் பிரிவு என்று சொன்னதும் என்னையும் என் குழந்தைகளையும் சுற்றி எங்கிருந்தோ வந்த 500க்கும் மேற்பட்ட ஆர்மிக்காரர்கள் சூழந்துகொண்டார்கள் - சசிரேகா
அப்போது அந்தக் கூட்டத்தில் எங்கிருந்தோ ஓடிவந்த தூயவன் என்ற போராளி, அக்கா ராணுவ சிப்பாய்கள் முன்பு அழுதுவிடாதீர்கள். அவர்கள் அதை வைத்து உங்களை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனக் கூறி, போராடி அங்கிருந்து என்னையும் என் பிள்ளைகளையும் வேறொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டார் - சசிரேகா
தூயவன் மீண்டும் மீண்டும், அக்கா நீங்கள் வன்னியில் வாழ்ந்த கலத்தில் எப்படி நிமிர்ந்து வாழ்ந்தீர்களோ அப்படி இப்பவும் இருங்கள். உங்களை எதற்கோ பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஆகையால் அழாமல், மூளையை பயன்படுத்துங்கள் எனக் கூறினார்- சசிரேகா
அங்கிருந்து ராம்நாதன் கேம்ப் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். எங்களை ஒரு டெண்டில் பத்து பேர் இருக்கும் இடத்தில் இருக்கச் சொன்னார்கள். ஆனால் எங்களால் மற்ற மக்களுக்கு துன்பம் வந்துவிடக் கூடாது என நினைத்து பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாகவே இருந்தோம் - சசிரேகா
அந்த சமயத்தில் அங்கு வந்த கமாண்டர் ஒருவர், நீங்கள் இயக்கத்தைச் சார்ந்த குடும்பமா என கேட்க ஆம் என்றேன். பிறகு யாருடைய மனைவி நீ என்றார். நான் தமிழ்செல்வனின் மனைவி என்றதும், உன் புருஷனால் தான் இத்தனையும் நடந்தது...1/
...நாங்கள் வன்னியிலிருந்து 50000 மக்கள்தான் வருவார்கள் எனபார்த்தால் இப்போது ஒன்றரைலட்சத்துக்கும் மேல் வந்துள்ளார்கள்
இவர்களை வன்னியில் இருக்கவைத்து தமிழீழத்துக்காக போராடவைத்தது உன் புருஷன் தான். இனி தமிழ்ச்செல்வன் குடும்பம் உயிருடன் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கத்தினான்-சசிரேகா
அப்போது இயக்கத்திலிருந்த போராளிஒருவர் அங்கிருந்தோடி ராணுவபோலீசைக் கூட்டிவந்தார்
அந்தஇடத்தில் அந்தபோலீஸுக்கும் கமாண்டருக்கும் கால்மணிநேரமாக சண்டை கமாண்டர் எங்களைக்கொல்லவேண்டும் என்கிறார் ஆனால் ராணுவபோலீஸோ அவர்களைகொல்வதற்கு இப்போது உத்தரவில்லை அதனால் அனுமதிக்கமுடியாதென்றது- சசிரேகா
பிறகு ராணுவ போலீஸ், எங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு எங்களுடன் யாரும் பேசக் கூடாது என மக்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு நான்கு நாட்கள் அங்கு இருந்த போது யாரையுமே பார்க்கவில்லை - சசிரேகா
ஒருநாள், போராளி ஒருவர் வந்து நீங்கள் இங்கிருந்து தப்பிப் போய்விடுங்கள். அதற்கு நாங்கள் உதவுகிறோம் என கூறினார். நான் தப்பித்து போய்விட்டால் மக்களுக்கு பிரச்சனை வரும். ஆகையால் போக இயலாது என கூறினேன் - சசிரேகா
இதைக் கவனித்த ஆர்மிக்காரர் வந்து, நீங்கள் தப்பித்து போனாலும் நாங்கள் உங்களைப் பிடித்துவிடுவோம் என எச்சரித்து சென்றார்.
நாங்கள் கேம்பில் இருந்தவரை மிருகக்காட்சியில் இருக்கும் விலங்குகளைப் பார்த்து செல்வது போல் தான் ராணுவத்தினர் எங்களைப் பார்த்து சென்றனர் - சசிரேகா
அப்போது ஒருநாள் எங்கள் இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டுப் போன கருணா என்னை வந்து பார்த்தார். ஒரு பதினைந்து நிமிடம் தான் பார்த்தார். ஆனால், அது காலம் பூராவும் எனக்கு பழியாக விழும் என நினைக்கவில்லை - சசிரேகா
ராமநாதன்முகாமில் நான்குநாள் இருந்தபிறகு அருணாச்சலம் முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கும் தமிழ்ச்செல்வனின் மனைவி என்று கேள்விப்பட்டவுடன் மக்கள் வந்து என்னைபார்த்தார்கள். பிறகு அங்கிருந்து நான் மாற்றப்பட்டு பெண்போராளிகள் இருந்த பம்பைமேடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டோம்- சசிரேகா
அங்கு ஒரு சின்ன கட்டடத்தில் 500 பேர் அடைக்கபப்ட்டிருந்தோம். ஒருவருக்கு ஒரு பக்கெட் தண்னீர் தான். அதைத்தான் நாள் முழுக்க பயன்படுத்த வேண்டும். 500 பேருக்கு 7 கழிவறைகள் தான் அங்கு இருந்தது. பெண்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என யோசித்துப் பாருங்கள்- சசிரேகா
அங்கு என்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. டாக்டர் இறந்துவிடும் எனகூறிவிட்டார். அப்போது அங்கிருந்த பெண்போராளிகள், நாங்கள் போராடினோம் எங்களை அடைத்து வைத்துள்ளீர்கள். ஆனால் இந்தக்குழந்தைகள் என்னசெய்தது எனக்கேட்க அங்கிருந்த பெண்ஆர்மிக்காரர் எங்களை அடிக்கவந்தார்- சசிரேகா
அவர் உன் புருஷனால் தான் என் அண்ணன் இறந்தான் என கூறினார். அப்போது அவரிடம் நாங்கள் எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ்ந்த்துகொள்கிறோம் என தானே போராடினோம். உங்கள் இடத்துக்கு நாங்கள் வந்தோமா எனக் கேட்க அவர் என்னை அடித்தார்- சசிரேகா
என்னை அங்கிருந்து கொழும்பு அனுராதாபுரம் கேம்புக்கு அழைத்து வந்தார்கள். அப்போது தான் தெரியும் நாங்கள் கோத்தபய ராஜபக்‌ஷேவின் கஸ்டடியில் இருந்தோம் என - சசிரேகா
என் தாயார் எங்கள் நிலை என்ன என்று கேட்டு மகிந்த ராஜபக்‌ஷேவுக்கு கடிதம் எழுத, அவர் உங்கள் மகன் பற்றி தெரியாது. உங்கள் மகளை விரைவில் விடுவிக்கிறோம் எனக் கூறி கடிதம் எழுதினார் -சசிரேகா
என் குழந்தைகளை வைத்து என்னை அச்சுறுத்தி ரூப வாகினி என்ற ஊடகம் என்னிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியை வற்புறுத்தல் காரணமாக சொன்னேன் - சசிரேகா
(பெண் புலி) சசிரேகா சொன்ன அந்தப் பேட்டி👇
பெண் புலியாய் இருந்து #சுப_தமிழ்செல்வன் எனும் தினேஸை மணந்து குழந்தைகளுக்காக தாய் என்ற அளவில் தன் செயல்பாடுகளை சுருக்கிக் கொண்ட சசிரேகா வாழ்வில் அமைதி நிலவட்டும்

வாழ்க்கையே போர்க்களம்...
வாழ்ந்து தான் காட்டணும் 💪

கோத்தபய யார் என்று அறியாதவர்களுக்கு...
ஜார்ஜ் நந்தசேனா கோத்தபய ராஜபக்ஷே என்று அவரது முழுப் பெயர் சொன்னா தெரிந்து விடும்
ஆம் மஹிந்த ராஜபக்ஷவின் தம்பி தான் அவர்

கோத்தபாய மே 1972ல் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை லெஃப்டினன்டாக வேலைக்குச் சேர்ந்தவர்
1980 ல் ரெஜிமெண்டின் தளபதியாக உயர்ந்தவர்

ஓய்வு பெற வேண்டிய இறுதி காலத்தில் ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இளம் இராணுவ வீரர்களை உருவாக்கிக் கொண்டுருந்தவர்

1992ல் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தவர் #கோத்தபாய
2005 ல் ஆட்சிக்கு வந்த அண்ணணுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவரை மகிந்தா பாதுகாப்புச் செயலாளராக அமர வைத்தார்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல ஆட்சியின் தொடக்கத்திலேயே அட்டகாசமாக ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கினர்
மகிந்த ராஜபக்ஷே, கோத்தபயா ராஜபக்ஷே, சரத்பொன்சேகா

பிரபாகரன் இதுவரையில் எதிர்பார்க்காத தந்திரம், முரட்டுத்தனம், களமாடிய அனுபவ பெற்ற இந்த புதிய மூவர் கூட்டணி உருவானது

வேட்டை நாய் போல வேட்டையாடத் தொடங்கினர்
கோத்தபயாவின் தத்துவம் மிக எளிமையானது
எதிரிகள் முக்கியம்
அதைவிட எதிரிகளுக்கு உதவிக் கொண்டுருப்பவர்கள் அதை விட முக்கியம்

அதையே தொடக்கத்திலேயே கோத்தபயா தெளிவாக செய்ய மனித உரிமைக் கழகம் அறிக்கை விடும் அளவிற்கு வந்து நின்றது
தனது முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல தன்னுடைய கடமைகளை ஒவ்வொன்றாக ரசித்து ருசித்து கோத்தபயா செய்து கொண்டுவர உள்ளேயிருந்த பத்திரிக்கைகள் கூட மௌனிக்கத் தொடங்கின

இம் என்றால் சிறைவாசம்
ஏன் என்றால் சிவலோக பதவி- இதான் கோத்தபாய சென்ற பாதை
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கவி தா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($3.00/month or $30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!