Ananda kumar Profile picture
அரசியல், தமிழ், திராவிடம், சுற்றுசூழல், கட்டற்ற பொருளாதாரம், சமூக நீதி , புத்தகங்கள் கொஞ்சம் இலக்கியம் .
Oct 18, 2020 9 tweets 4 min read
இன்று காலை நடை பயிற்சி முடித்து வீடு தரும்பும் போது , எங்கள் பின்னால் என் அம்மா வயதுடைய பெண்மணி வேகமாக கூப்பிட்டு கொண்டே வந்தார்.. நாங்கள் தமிழ் என்று தெரிந்தவுடன் தமிழிலேயே பேச ஆரம்பித்தார் ..தம்பி வீட்ல வேலை ஏதாச்சும் இருந்தா கொடுங்கப்பா என்றார்..1/n என்ன ஏது என்று விசாரித்ததில் அவர் எங்கள் ஏரியாவில் பூவிற்கும் பூக்காரம்மா.. நெறைய வீட்டிற்கு காலையில பூ போடுவேன் தம்பி..சாயங்காலம் பக்கத்துல உள்ள ஹாஸ்பிடல் ல cleaning வேலை செய்வேன். மாசம் 12 ஆயிரம் கொடுத்துகிட்டு இருந்தாங்க..இப்போ ஆறு மாசம் ஆச்சு அந்த வேலைக்கு போயி என்றார்..2/n
Mar 9, 2020 7 tweets 1 min read
இன்று தேசிய பங்கு சந்தையில் பங்குங்கள் பெரும் வீழிச்சியை கண்டுள்ளன.
நம்ம கிட்டதான் எந்த trading account உம் இல்லையே..நாம பங்கு சந்தை பக்கம் போனதே இல்லையே என்று நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு.எப்படி எல்லாம் அது உங்களை பாதிக்கும் என்று இந்த இழையில் சொல்ல விரும்புகிறேன் ..1/n 1. இன்சூரன்ஸ் : நம்மில் பெரும்பாலானோர் காப்பீடு எடுத்து உள்ளோம். காப்பீடு நிறுவனங்கள் நேரடியாகவோ , மறைமுகமாகவோ சந்தையில் முதலீடு செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் இழப்பு வாடிக்கையாளர் தலையிலேயே கட்டப்படும். நீங்கள் அதிக பிரிமியம் செலுத்த நேரிடும். சில பாலிசிகள் திவாலாகலாம்2/n