Arappor Iyakkam Profile picture
Official Twitter id of Arappor Iyakkam
Kanagarajan Profile picture 1 subscribed
Sep 25, 2021 9 tweets 3 min read
மீண்டும் செட்டிங் டெண்டர் !
கடந்த ஆட்சியில் 4 வருடங்கள் ரேஷன் டெண்டர்களை செட்டிங் செய்து  2028 கோடி முறைகேடு செய்த கிறிஸ்டி நிறுவனம் மீண்டும் செட்டிங் செய்ய செய்த முயற்சி அறப்போர் இயக்கத்தின் புகாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இனியாவது கிறிஸ்டி தடை செய்யப்படுமா?  @r_sakkarapani 1) 4 வருடங்களாக ரேஷன் டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனங்கள் 2028 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் DVACல் ஆதாரங்களுடன் புகார் அளித்து, கிறிஸ்டி நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
Sep 1, 2021 19 tweets 3 min read
மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கும் சேவை உரிமை சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் அரசின் சேவைகளுக்காக பொது மக்கள் கெஞ்சி காத்திருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். இவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த மாதிரி சட்ட வரைவு.
முழுமையாக படிக்க: arappor.org/RTS

இந்த மாதிரி சட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே விளக்கி உள்ளோம்.
Jul 22, 2021 5 tweets 3 min read
#PunishTheCorrupt #Tangedco #Viswanathan #Thangamani
1) தமிழ்நாடு அரசாங்கத்தின் மின் உற்பத்தியை குறைத்து, மத்திய பங்கீட்டில் இருந்து மாநிலத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தை முறையாக பயன்படுத்தாமல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க 2013ம் வருடம் ஜெயலலிதா தலைமையிலான 2) அதிமுக அரசு 15 வருட காலத்திற்கு டெண்டர் போடுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை ரூபாய் 2.50 முதல் ரூபாய் 3.50 என்று இருக்க அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூபாய் 4.90 முதல் ரூபாய் 6.00 வரை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடுகிறார்.
Jul 16, 2021 4 tweets 2 min read
1) கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க.. 2) EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Jul 15, 2021 4 tweets 2 min read
#PunishTheCorrupt #Viswanathan
1 தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். Image 2 வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய
May 11, 2020 4 tweets 1 min read
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவர்களும், ஊழியர்களும் கடந்த 8ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கல்லூரி வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.

2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.