Mansura Beebi Profile picture
Oct 16, 2020 14 tweets 2 min read
'உண்ணுங்கள் , பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்‌' இதனை இறை வாக்கென நம்புவர்களும்‌ சரி இயற்கையே இறை என்பவரும் சரி அனைவரும் இதைப் பேண வேண்டும்.
'அன்னத்தை முன் படைத்து அகமது நபியைப் பின் படைத்தான் இறைவன்' என்று என் அம்மா கூறுவார்கள். பூமியில் புல் பூண்டுகள் முளைத்த பின்னரே மற்ற உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உணவாக படைக்கப் பட்டுள்ளன. பச்சை உணவுகளைத் தின்ற ஆதி மனிதன் நெருப்பில் சுட்டவற்றின் சுவையறிந்த பின் புதுப்புது சுவையில் கிடைத்த உணவைச் சமைத்து இன்று வரை உண்கிறான். உண்டு கொழுப்பவரும் பட்டினியில் சுருண்டு விழுபவரும் பாரினில் சரிசமமாய் உண்டு.
Oct 10, 2020 9 tweets 2 min read
இன்றைய இளையோருக்கு அஞ்சல் துறையுடன் இணைந்திருந்த தந்தித் துறையைப் பற்றியும் அது காணாமல் போன வரலாறு பற்றியும் தெரிய வாய்ப்பில்லை. அதில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது நினைவலைகளில் சில . .
பதினோராம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்தேன். செலவு ரூ5/ நேர் காணலுக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை அதிகாரி வாசித்தார். தவறின்றி எழுதினேன் . அவ்வளவுதான். வேலை கிடைத்து விட்டது. சென்னையில் ஒன்பது மாதப் பயிற்சி. சிட்டுக் குருவிகள் போல் ஆணும் பெண்ணுமாய் தொண்ணூறு‌ பேர். மோர்ஸ் கோட் எனும் தந்தி மொழி, டெலிபிரிண்டர் எனும் தட்டச்சுக் கருவி.
May 24, 2020 46 tweets 4 min read
பிறை பாத்தாச்சு...

ஊரடங்கு இன்னும் முடியவில்லை. நாளை பெருநாளா நாளைக்கழிச்சுப் பெருநாளா தெரியவில்லை.

மாலை ஆறு மணிக்கு வீட்டிலுள்ள பிள்ளைகள் மொட்டை‌ மாடியேறி பிறை‌ தெரிகிறதா எனப் பார்த்தார்கள். இது‌வரை‌‌ தெரியவில்லை. நோன்பு இருபத்தி ஒன்பது முடிந்து விட்டது. பெரியவர்களும் பிள்ளைகளும் எங்காவது பிறை தென்படுகிறதா என்று மேற்குப்‌ பக்கம் நின்று கழுத்தைத் திருப்பியும் அண்ணாந்தும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
அந்த சிற்றூரின் ஐந்தாவது தெருவிலுள்ள மூன்றாவது வீட்டின் பாரூக் மட்டும் இன்று பிறை தெரியக்கூடாது என்று துவா செய்து கொண்டிருந்தான்.
May 10, 2020 27 tweets 3 min read
உம்மா

அது நடந்து ஐம்பத்தைந்து வருடம் ஆகி விட்டது. ஒரு இளங்காலை நேரம். நாகர்கோவில் நகரின் முதன்மையான ஒரு தெருவில் வசிக்கும் பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். தண்ணீரெடுக்க தெருமுக்கிற்கு வர வேண்டும்.
அந்த‌ நீண்ட குறுகிய தெருவின்‌கடைசியில்‌ இடப்பக்கம்‌ ஒரு வளவு. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த வளவு.
அந்த வளசலிலிருந்து வந்த பெண்ணிடம் ஒருத்தி கேட்டாள்.
'ஏட்டி தாணம்ம ..
மாமி எப்படியிருக்கா?'
'மாமிக்கென்ன நல்லாத்தான் இருக்கா. உங்கம்ம அதத் தந்தாளா இந்தத் தந்தாளான்னு வந்ததிலயிருந்து ஒரே நொச்சரிப்பு:
போட்டி சவமே ஒங்கத்தையையா கேட்டேன்.