ஃபீல் குட் மூவிஸ்க்கு பேர் போன மலையாள சினிமா இண்டஸ்ட்ரி நிறைய தரமான த்ரில்லர் திரைப்படங்களையும் தயாரித்திருக்குது. அதில் எனக்கு தெரிந்தவரை நல்ல படங்களை இந்த த்ரெட்டில் சேர்த்திருக்கிறேன். சினி லவ்வர்ஸ் பயன்படுத்தி கொள்ளுங்கள் 🙂 🙌🏽
#Oxygen (2021) ~ ஒரேயொரு சேம்பருக்குள் 1.41 மணி நேரத்தில் செம த்ரில்லர், டயலாக்ஸை புரிஞ்சுக்கிட்டா அலுப்பே தெரியாது. கதை : ஒரு சேம்பருக்குள் ஹைப்பர் ஸ்லீப்பில் இருந்து விழிக்கும் ஒரு பெண் தான் யார், எவ்வாறு அதற்குள் வந்தோம் என யோசிக்க ஆரம்பிக்கிறார். (1/3)
#CineversalS_thread
அந்த சேம்பரை நிர்வகிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் திறமையாகப் பேசி தன்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்கிறார். பின் அதனிடம் கெஞ்சி, கோபபட்டு தப்பிக்க ஏதேனும் வழி கிடைக்குமா என்று பார்க்கும் பொழுது ஒரு ட்விஸ்ட். உண்மையில் அந்த பெண் யார்?, அவர் எப்படி சேம்பருக்குள் வந்தார்?, (2/3)
Dec 13, 2020 • 7 tweets • 7 min read
பிட்டு படத்தில் கூட விறுவிறுப்பை எதிர்பார்ப்பவர்களுக்கும், விறுவிறுப்பான த்ரில்லரில் இரண்டு பிட் இருந்தால் நல்லாயிருக்குமே, என ஏங்குபவர்களுக்கும் தேடி கண்டுபிடித்து Erotic Thriller எனும் ஜானரில் இருந்து எடுத்து வரப்பட்ட 24 படங்கள் கீழே.. என்ஜாய் மக்களே (Link கடைசி ட்வீட்டில் 👇🏽)
🔞 Unfaithful (2002)
#TENET - மனிதர்கள் பூமியை யாருமே வாழமுடியாதபடி மாத்துறதால எதிர்கால சந்ததி (அவங்களும் மனுஷங்கதான்) ரொம்ப பாதிக்கப்படுது. டென்ஷனான அவங்க, இறந்தகாலத்துல ஒருத்தன வச்சு எல்லோரையும் காலி பண்ண ப்ளான் போட, அத நிகழ்கால மனிதர்கள் தடுத்தாங்களா என்பதுதான் கதை. (1/4)
#CineversalS_thread
ரொம்ப ஒன்னும் குழப்பம் இல்லை, இரண்டு தடவை பார்த்தாலே நல்லா புரியுது (சிலவற்றை தவிர). என்னதான் டெக்னிகலா மிரட்டுனாலும், நோலனோட எல்லா கதையிலும் ஒரு எமோஷ்னல் டச் இருக்கும், இப்படத்தில் அது நட்பு - கம்மி எமோஷன் தான் ஆனா டச்சிங்கா இருக்கும். ஹீரோ உட்பட அத்தனை பேர் நடிப்பும் தரம் (2/4)
Aug 30, 2020 • 5 tweets • 4 min read
#TheHandmaiden 🔞 - பெரும் பணக்கார பெண்ணை, திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறான் ஒருவன். அதை நிறைவேற்ற அப்பெண்ணின் வேலைக்காரியை துரத்திவிட்டு, இவனுக்கு தெரிந்த பெண்ணை வேலைக்கு பரிந்துரைக்கிறான். அவள் அங்கு சேர்ந்து தன் வேலையை ஆரம்பிக்கிறாள் (1/4)
#CineversalS_thread
அவளது வேலையே, பணக்கார பெண்ணிற்கு இவன் மீது காதல் வர வைப்பது தான். ஆனால் அங்கு தான் ஒரு திருப்பம், கதை வேறு மாதிரி மாறும் - சரியென்று பார்க்க ஆரம்பித்தால் 20 நிமிடங்களில் இன்னொரு திருப்பம். இப்படி கடைசி வரை twists & turns தான். கதைக்கு ஏற்ற வேகம், but Gripping ஆன story. (2/4)
Aug 19, 2020 • 4 tweets • 3 min read
#WhyDontYouJustDie - காவலதிகாரியை கொல்ல, ஒருவன் பொய் சொல்லி அவர் வீட்டிற்குள் நுழைகிறான். சில நிமிடங்களில் அவர் அதை கண்டுபிடித்து, அடித்து உதைத்து காரணம் கேட்க அவனது பதில் - முதல் அதிர்ச்சி. அந்த காவலர் பற்றிய ரகசியம் தெரியும்போது இரண்டாவது அதிர்ச்சி. (1/3)
#CineversalS_thread
இப்படி அடுத்தடுத்து வர்ற ட்விஸ்ட்களும், மிரட்டலான மேக்கிங்கும் second halfல ஏற்படும் சிறு தொய்வை மறக்க வச்சிடும். உண்மையிலேயே வித்தியாசமான, ஸ்டைலிசான மேக்கிங், அதுக்கு பாப் மியூசிக்னு டேரன்டினோவை ஞாபகப்படுத்துகிறார் டைரக்டர். Future filmmakers பார்க்க வேண்டிய படம். (2/3)
Jun 17, 2020 • 13 tweets • 10 min read
#Nepotism சுஷாந்த் சிங் இறந்ததுல இருந்து நம்ம அதிகம் கேள்விப்படுற வார்த்தை. அது பாலிவுட்டில மட்டும் தான் இருக்கா? , நம்ம தமிழ் சினிமாவிலுமா?. முதல்ல Nepotism னா என்ன? - அதைப் பற்றி என் கருத்து இந்த த்ரெட்ல!
(1/11)
#CineversalS_thread#Nepotism - தம் வாரிசுகளுக்கு (மகன், மகள், அண்ணன், தங்கை) எந்த திறமையும் இல்லாத போதும், தன் செல்வாக்கை பயன்படுத்தி வாய்ப்புகள், ஆதாயங்கள் கிடைக்க செய்தல்!
#Favouritism - தனக்கு விருப்பமானவருக்கோ, தெரிந்தவருக்கோ எந்த தகுதியும் இல்லையென்றாலும் வாய்ப்புகள் கிடைக்கச் செய்வது (2/11)
Apr 15, 2020 • 9 tweets • 8 min read
ஒரு classic movie, mass audience ஆலும் அதிகம் விரும்பப்படும் என்றால் அதில் முதலிடம் #மகாநதி க்கு தான்! என்னை பொறுத்தவரை கமல் எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டத் திரைப்படம் மகாநதி. வழக்கம் போல் இதிலும் தன்னை கடவுளாக சித்தரிக்கும் காட்சிகள் வைத்திருப்பார்..! #CineversalS_thread (1/6)
இராமாயணத்தில் வரும் சபரி எனும் பக்தை, ராமனுக்கு சுவையான பழங்களை மட்டுமே தரவேண்டும் என்று, தான் சுவைத்த இனிய பழங்களையே அவனுக்கு தருவாள். அதுபோல இக்காட்சியில் - மஞ்சு சரக்கை சுவைத்து தந்து, நான் ராமாயணத்தில் வரும் சபரி போல என்பார். Indirectly கமல் = ராமர் (2/6)
Apr 5, 2020 • 7 tweets • 6 min read
"அன்பே சிவம்" - இந்த படத்த பத்தி நிறைய explanation, decoding videos பாத்திருப்போம், ஆனா நான் note பன்ன சில details வேற எதிலும் பாக்காத நால இந்த thread போட்றேன். கமல், படத்துல தன்ன நல்லா னு தான் சொல்லுவாரு, சிவம் னு சொல்லமாட்டாரு. காரணம் communism னு சொன்னாங்க. ஆனால்.. (1/4)
அவரை ராமராக காமிச்சுக்க தான்னு நினைக்கிறேன். Photos ல இருக்க scene ல, கிரண் என் studio la உங்க கால் படனும்னு சொல்றப்போ, என்ன இது அகலிகை மாதிரினு கமல் கேட்பாரு. (ராமர் கால் பட்டு, கல்லாயிருந்ந அகலிகை மீண்ட கதை - இராமாயணம்) (1 /4)