Prince Profile picture
Sep 21, 2023 5 tweets 3 min read
Mr @annamalai_k

Media Reporters குறை சொல்வதற்கு முன் நீங்க Research பண்ணிட்டு வந்த Data வை cross check பண்ணுவோமா?

Annama"LIE" 1:
Total No of PG Seats 1,80,000

உண்மை என்னன்னா 2022 PG Seats எண்ணிக்கையே 64,059

Source:
LS QN 248 dated 21/07/2023
sansad.in/getFile/loksab…

Image Annama"LIE" 2:
மிக அதிகமான இடங்கள் நிரப்பபடவில்லை.

உண்மை என்னன்னா 2022 PG Seats vacant எண்ணிக்கை 4,400 அதாவது மொத்த எண்ணிக்கையில் 6.86% இடங்கள் காலி இடங்களாக இருந்தது.

Source:
LS QN 248 dated 21/07/2023
sansad.in/getFile/loksab…
Image
Jul 22, 2023 8 tweets 3 min read
திரு @annamalai_k அவர்களுக்கு,

The National Education Policy 2020 படி எல்லாம் தமிழ் கட்டாயம் என்பது அமலுக்கு வரவில்லை

திமுக மற்றும் அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களின் உழைப்பு இது.

1999 முதல் இன்று வரை படித்து தெரிந்து கொள்ளுங்கள். Tamil in Primary School:

திமுக ஆட்சியில் G.O. Ms No 324 (School Education C2 Department), dated 19.11.1999 படி, முதலில் 1 முதல் 5 வரை உள்ள Nursary and Primary School Education ல் தமிழ் கட்டாயம் என்று கொண்டு வரப்பட்டது

மாநில பாடத்திட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமலானது.
Dec 28, 2021 14 tweets 5 min read
அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு,

கடந்த சில வாரங்களாக இஸ்லாமியர் என்பதால் அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது திமுக என்று போகிற இடமெல்லாம் பொய் பேசி வருகிறீர்கள்.

திமுக 2006 முதல் 2011 வரை ஆட்சி காலத்தில் மட்டும் சுமார் 130 இஸ்லாமியர்களை விடுதலை செய்துள்ளது. முதன் முதலில் சிறை தண்டனை பெற்ற கைதிகள் முன்விடுதலை 1994 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

அப்போது 20 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் முன்விடுதலை செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் (Letter (FS) No.1358 Home, Dated 10.11.94) வெளியிடப்பட்டது.
Dec 26, 2021 5 tweets 2 min read
திரு @annamalai_k அவர்களுக்கு,

நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை 2018 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பே இரண்டு மாநிலங்கள் இதை செயல்படுத்தி வந்தது

1. தமிழ்நாடு - 2009 ஜூலை மாதம் கலைஞர் காப்பீடு திட்டம் என்று தொடங்கி அதற்கான பிரீமியம் அரசு செலுத்தியது. 2. ஆந்திரா - இங்கும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்ற மருத்துவ காப்பீடு உண்டு. ஆனால் அதற்கான பிரீமியம் பயனாளர்கள் (மக்கள்) செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடி மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்தி வருகிறது.
Sep 15, 2021 10 tweets 5 min read
அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ்நாட்டுக்கு தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் அறிஞர் அண்ணா

ஆனால் அது ஒன்றும் வெறும் பெயர் சூட்டு விழா, கிடா விருந்து என்று ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்பதை உங்கள் தம்பிகள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கையை வலியுறுத்தி, ஐயா சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27ம் தேதி முதல் 75நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபர் 13ம் நாள் உயிர் துறந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அன்றைய முதல்வர் ஐயா காமராஜர் தான்.
Sep 13, 2021 5 tweets 2 min read
அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு, நேற்று நடந்த கருத்தரங்கில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பற்றிய உங்கள் உரையை கேட்டேன்.

நீங்கள் சொல்வதே @idumbaikarthi @packiarajan போன்ற தம்பிகளுக்கு வரலாறு என்பதால் பிழையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்களும் உங்கள் ஐயா அவர்களும் போராடிய பின்னர் தான், 2021ல் திமுக செய்ததாக பேசி உள்ளீர்கள்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை என்று 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி, உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு உரையில் கலைஞர் அறிவித்தார்.
Sep 11, 2021 8 tweets 3 min read
தோழர் திருமுருகன் காந்தி என்பவர் கதை சொல்லி சீமான் அல்ல. எனவே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் முன், குறைந்தபட்சம் தரவுகளை சரிபார்த்து இருக்க வேண்டும்.

ஒருவேளை குடந்தையரசன் மேல் உள்ள நம்பிக்கையில் தெரிவித்து விட்டார் போல.! 1 தனி பட்ஜெட் கோரிக்கை வரவேற்க வேண்டிய ஒன்று தான். அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் தெலுங்கானா தனிபட்ஜெட் வைத்து அள்ளி கொடுப்பது போலவும், தமிழ்நாடு வஞ்சிப்பது போலவும் சொல்வது தவறு.

தெலுங்கானா அரசின் ஆதிதிராவிட பங்குடியினர் நலத்துறை நிதி ஒதுக்கீடு 21,306 கோடி Image
Aug 1, 2021 4 tweets 2 min read
தோழர் தொல். திருமாவளவன் MP அவர்களே 21 வாடகை வீட்டில் குடியிருந்த நபர்களுக்கு தான் வீடுகள் ஒதுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை இங்குள்ள போராளிகள் திமுக மொத்தமாக தலித் விரோதிகள் போல் சித்தரித்தது எல்லாம் பொய் என்ற வேசம் கலைந்த பின்னர் யாரையும் காணவில்லை கோயம்புத்தூரில் தீண்டாமை சுவர் இடிக்கப்படும் நிகழ்வு பற்றியும் எந்த ஒரு போராளியும் பதிவு செய்யவில்லை.

ஒருவேளை அவர்கள் போராட காரணம் கொடுக்காமல் திமுக அரசு இடிக்க நடவடிக்கை எடுத்துவிட்டார்கள் என்ற வருத்தமோ என்னவோ தெரியவில்லை 😔
Jul 31, 2021 10 tweets 2 min read
Thread: OBC இட ஒதுக்கீடு:

இப்போது வழங்கப்பட்டுள்ள மத்திய தொகுப்பில் உள்ள இடங்களுக்கான OBC இட ஒதுக்கீடு 27% என்பது நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி ஆகும்.

மத்திய தொகுப்பு என்பது1986 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி உருவாக்கப்பட்டது. இதன் படி அனைத்து மாநிலங்களும் தங்கள் வசம் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15% வரை மத்திய தொகுப்பில் கொடுக்க வேண்டும்.

இதற்கு காரணம் அந்த காலத்தில் வட கிழக்கு மாநில வளர்ச்சி மிக குறைவு. அங்கு மருத்துவ கல்லூரி போன்றவை அந்த மாநிலத்துக்கு தேவையான அளவில் இல்லை
Jul 30, 2021 5 tweets 2 min read
நேற்று முதல் கூவம் நதி ஓரம் தங்கி இருந்த மக்களை அரசு திட்டமிட்டு காலி செய்து வருவது போல் சித்தரித்து வருகின்றனர்.

இது 2020 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை ஆகும்.

அங்கு இருப்பவர்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, மாற்று இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது முதலில் அவர்களை பெரும்பாகத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு அரசு KP பார்க் அருகில் புளியந்தோப்பு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி உள்ளது. Image
Jun 25, 2021 7 tweets 2 min read
வி.பி.சிங்.. அவரின் பிறப்பு குறித்த விவரம் தேவை இல்லை. ஆனால் அரசியலில் செய்த செயல், பல முறை அடக்குமுறை நடவடிக்கை சந்திக்க செய்தது.
#HBD_VPSingh 27% பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்றம், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது இவரின் சாதனைகள்.