சிரித்துக்கொண்டே கடக்க பழகுங்கள்
எவ்விடயமும் சிரமமாக தோற்றமளிக்காது. இயற்கை மற்றும் சினிமாவை நேசிப்பவன்..
Jun 4, 2022 • 18 tweets • 10 min read
ரோலக்ஸ் கை கடிகாரம் பற்றிய சிறு குறிப்பு ⌚⌚🕦🕦
1. ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும். ஒவ்வொரு கடிகாரமும் சுவிட்சர்லாந்தில் மிகவும் சிரமப்பட்டு கையால் தயாரிக்கப்படுகிறது.ரோலக்ஸ் வாட்ச்சின் அனைத்து பாகங்களும் முடிந்ததும், (1/16)
அவை பெரும்பாலும் கையால் அசெம்பிள் செய்யப்பட்டு சோதிக்கப்படுகின்றன. தர உறுதி செயல்முறை மிகவும் தீவிரமானது.
2. ஒவ்வொரு ரோலக்ஸும் ஆலையை விட்டு வெளியேறும் முன் அழுத்தம் சோதனை செய்யப்படுகிறது. (2/16)
May 29, 2022 • 17 tweets • 10 min read
நாம் தினம்தோறும் வாங்கும் ஆவின் பால் பச்சை, நீலம், மெஜந்தா, ஆரஞ்சு, மற்றும் கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் வரும்.
முதலில் பால் பற்றி கொஞ்சம் அடிப்படையை தெரிந்து கொண்டு பல வண்ண பால் பாக்கெட்களைப் பற்றிப் பார்ப்போம். (1/15)
கறந்த பசும்பாலில் நாம் தண்ணீர் கலக்கும் முன்னேரே கிட்டத்தட்ட 87% சதவீதம் வரை தண்ணீர் இருக்கும். மீதி 13 சதவீதம்தான் பாலுக்கும் நமக்கும் தேவையான சத்துப் பொருட்கள் கலந்திருக்கும்.
அந்த 13 சதவீதத்திலும் கிட்டத்தட்ட 3.7% வரை கொழுப்பு பாலில் கலந்து இருக்கும். (2/15)
Apr 12, 2022 • 17 tweets • 10 min read
திரைப்படத்தை விடவும் அதிகம் மெனக்கெட்டு எடுத்த
ஒரு அற்புதமான ஆவணப்படம்
பற்றி தெரியாதவர்கள்!! தெரிந்து கொள்ளுங்கள்.
ஆம்!! அது ஒரு Documentary படம். தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி பிரபலமான Discovery channel, "Lost Temples of India" என்றொரு அற்புதமான ஆவணப்படம் தயாரித்தார்கள். (1/15)
அதை நான் முதன்முதலில் தொலைக்காட்சியில் பார்த்தபோது வியந்து போனேன்.
நம்மிடம் இருக்கும் தஞ்சாவூர் கோவில் பற்றி நாம் இப்படி ஒரு படம் தயாரிக்க முடியவில்லை, ஆனால் அமெரிக்காவில் இருந்து Discovery Channel ஆங்கிலத்தில் ஒரு டாக்குமெண்ட்ரி, (2/15)
Apr 10, 2022 • 18 tweets • 9 min read
சினிமா தவிர வேறு ஏதும் புதியதாக செய்யலாம் என்று சற்றே மாறுபட்ட கோணத்தில்.
சரி நம் பயணத்திற்கு கிளம்புவோம ட சகோதர சகோதரிகளே நம் மற்றும் நண்பர்களே..
கேட்டாம்பாரு ஒரு கேள்வி....கடவுளிடம் !
அதற்கு கடவுள் குடுத்தாரு பாருங்க ஒரு பதில்👇👇(1/16)
உருகி உருகி பிரார்த்திக்கும் நபர் ( உங்களுக்கு விருப்பமான பெயர் வைத்துக்கொள்ளவும் ), கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.
நபர்: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?🙂
கடவுள் : தாராளமாகக் கேள் மகனே.. (2/16)
Apr 6, 2022 • 13 tweets • 9 min read
*மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா...?
கீழுள்ளவை கவிஞர் வாலி அவர்கள் பதிந்த சில சம்பவங்கள்.
"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் .
# 1 "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!’ (1/11)
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்...?
# 2 ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். (2/11)
Apr 3, 2022 • 23 tweets • 10 min read
இது ஒரு மீள்பதிவு
( A Long Thread )
இளையராஜா அவர்களின் இசையே சுவாரஸ்யமானது தான்…
கிராமங்களில் பட்டித் தொட்டியெல்லாம் மச்சானைப் பார்த்தீங்களா என்று ஜானகி அவர்களின் குரல் கேட்க வைத்த அதே படத்தில் அமைதியாக சொந்தமில்லை பந்தமில்லை என்று சுசீலாவின் குரலையும் ஒலிக்க செய்தார். (1/21)
படத்துக்கு பாட்டு போடும்போது எது ஹிட் அடிக்கும் என்று தெரியாது. சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் என்ற பாடல் இருந்த வேகம் அந்த காலத்துக்கு வேற லெவல் தான். நேட்டிவிட்டி மாறாமல் போடப்படும் இசை காலத்தால் அழிவதில்லை.
முதல் படமே அப்படி.. (2/21)
Mar 26, 2022 • 17 tweets • 10 min read
இவர் தான் வாரன் பபேட் உலகிலேயே மூன்றாவது பெரிய பணக்காரர். பணக்கடவுள் என்றே சொல்லலாம். பில் கேட்ஸ் முதல் டிம் குக் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கும் வல்லமை படைத்தவர். அவர் வாசிக்கும் பழக்கத்தை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். (1/1)
ஒரு கல்லூரி மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரை
நாளொன்றிற்கு 500 பக்கங்களை படிக்க தொடங்குங்கள். அறிவு என்பது கூட்டு வட்டி போல மெதுவாக தான் வேலை செய்யும். இதை தினமும் பின்பற்றினால் நீங்கள் அனைவரும் பெரிய இடத்தை அடைய முடியும், (2/2)
Dec 19, 2021 • 20 tweets • 11 min read
கிரிக்கெட் விளையாட்டில் உள்ள பலருக்கும் தெரிந்த (அ) தெரியாத விதிமுறைகள் பற்றி விரிவாக காண்போம் 🏏🏏🏏🏏
கிரிக்கெட் விளையாட்டு "Gentlemen Game" என்று அழைக்கப்படுவதற்கு காரணம் விதிகள் மிகவும் கடுமையாகவும் அதேசமயம் விளையாட்டு தர்மத்தை மீறாமலும் இருப்பதுவே காரணமாகும். (1/20)
கிரிக்கெட் விளையாட்டில் பல விதிகள் உள்ளது எல்லாருக்கும் பரவலாக நிறைய தெரிந்தாலும் பல விதிகள் அடிக்கடி ஆட்டத்தில் பயன்படுத்தாமல் இருப்பதால் வெகுஜன ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. அவற்றுள் சில எனக்கு தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். (2/20)
Aug 29, 2021 • 13 tweets • 11 min read
ஒரு திரைப்பட பாடலில் இடம்பெற்ற வரிகளில் குறிப்பிட்ட ஒரு வரியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றால் உங்களின் தேர்வு எந்த பாடலாக இருக்கும்? ஏன்?
நம்பலாம் பாட்டு வரிய மாத்துனா, பாட்டு ரீச் ஆகாது. அதனாலே ஏற்கனவே என் தலைவன் மாத்துன வரிகள சொல்றேன். (1/12)
நான் சொல்ல போற பாடல் வரிகள படிச்சாலே, உங்களுக்கு ஒரிஜினல் வெர்ஷனே மறந்து போயி தலைவன் பாடுனது தான் மனசுக்குள்ள படமா ஓடும்.
1) உயிரே !! உயிரே !! : (2/12)
Aug 19, 2021 • 12 tweets • 11 min read
உடுமலை வல்லகுண்டாபுரம் பகுதியை சார்ந்தவர். நல்ல குணசித்திர நடிகர்களில் அவரும் ஒருவர், செந்தில் அவர்கள் இல்லாமல் சோலோ வாக கலக்கிய படங்கள் நிறைய உண்டு. 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு சுமார் 400 படங்களில் இருவரும் இணைந்தே நடித்திருப்பார். (1/12)
1979 - சுவரில்லா சித்திரங்கள் படத்தில் காளியண்ணன் டெய்லர் பாத்திரம் அற்புதமாக படைத்திருப்பார் பாக்கியராஜ்.
கள்ளாபெட்டி சிங்காரம் அவர்களுடன் சேர்ந்து 100 -க்கு 100 ஸ்கோர் செய்திருப்பார் தலைவர். ( அப்படி சொல்றதல தப்பில்லையே !!) (2/12)
May 20, 2021 • 13 tweets • 10 min read
AC காரில் பயணிக்கும்போது, மறுசுழற்சி பயன்முறையை (Recirculation Mode) எப்போது இயக்க வேண்டும் மற்றும் அணைக்க வேண்டும்? என்பதை பற்றியே இன்றைய பதிவில் காண்போம்., (1/11)
மறுசுழற்சி பயன்முறை (Recirculation Mode):
காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன் செய்தவுடனே ஏசி சுவிட்சுக்கு அருகில் இருக்கும் கேபின் காற்றை மறுசுழற்சி செய்து தரும் பட்டனை ஆஃப் செய்துவிடவும்.
இதனால், கேபினில் உள்ள சூடான காற்று, பிளாஸ்டிக் பாகங்களால் வரும் நெடி (2/11)
May 10, 2021 • 16 tweets • 11 min read
“ ஜம் ஜம் தண்ணீர் “
ஒரு கிணற்றின் நீரைக் கொண்டு இந்த உலகத்திற்கே தாகம் தணிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சாத்தியமே !!! என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஓர் ஆச்சரியம் ஜம் ஜம் தண்ணீர். (1/15)
ஒரு நொடியில் 10லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டால் அடுத்த நொடியில் 25 லிட்டர் தண்ணீர் ஊற்றெடுக்கும்.
5000 வருடங்களாக தண்ணீர் எடுக்கிறார்கள். ஆனால், அக்கிணற்றின் ஆழம் வெறும் 30 மீட்டர்.
2019 ல் முப்பது அடியில் தண்ணீர் அதுவும் நன்னீர் என்றால் ஆச்சரியம் தானே !! (2/15)
Apr 8, 2021 • 11 tweets • 10 min read
Flicker Fusion Rate என்றால் என்ன? எந்த விலங்கிற்கு இது அதிகமாக உள்ளது?
"Flicker Fusion Rate" என்பது உயிரினங்களின் பார்வை சார்ந்த ஒரு அளவீடு.
வெளிச்சம் இருந்தால் தான் நாம் ஒன்றை பார்க்க முடியும், நம் கண்களால் ஒரு அழகான மரத்தை பார்க்கிறோம் என்றால் (1/9)
அது எவ்வாறு சாத்தியமாகிறது, அந்த மரத்தை அடைந்த வெளிச்சம், சிதறி பிரதிபலிப்பதை தான், நாம் மரமாக பார்க்கிறோம். எனவே, அந்த வெளிச்சம் நம் கண்களை அடைந்து, மின் சமிக்ஞைகளாக நம் மூளையை அடைகிறது. நம் மூளையில் ஏற்கனவே மரங்களை பற்றிய சேமித்த தகவல்கள் இருப்பதால், (2/9)
Feb 11, 2021 • 29 tweets • 16 min read
💪 இது ஒரு மீள்பதிவு ✍️
சில பயனுள்ள Google செயலிகள் குறித்தும் அதனை பற்றிய சில தகவல்களுடன் பார்ப்போம்:- 👇👇
1.Google Assistant : இந்தியர்களிடம் மாட்டிக்கொண்டு ரொம்பவே சிரமப்படும் ஒரு செயலி. அதிகம் பேர் லவ் புரபோஷ் செய்த ஒரு பெண் (Sorry செயலி). (1/Cont)
ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்ட மாதிரி iphone சிரி இல்லாதவர்களுக்கு Google Assistant. கண் பார்வை அற்றவர்கள் சிலர் உபயோகிப்பதை பார்த்து இருக்கிறேன். (2/Cont)
Jan 30, 2021 • 9 tweets • 11 min read
LTE மற்றும் VoLTE இரண்டிற்குமான வித்தியாசம் என்ன?
LTE Long Term Evolution LTE என்பதை 4G என்றும் கூறலாம். 3G காட்டிலும் 10 மடங்கு இன்டர்நெட் ஸ்பீட் கொண்டது. ஆனால், இதில் உள்ள ஓர் பின்னடைவு நம் இன்டர்நெட் உபயோகிக்கும்போது யாராவது voice call செய்தால், (1/9)
இன்டர்நெட் இணைப்பு தானாக துண்டித்து விடும் அல்லது தடங்கல் ஏற்படும்.
இதனை Overcome செய்ய வந்ததே VOLTE. VOLTE Voice Over Long Term Evolution LTE இல் உள்ளதை போலவே இதிலும் 4G நெட்ஒர்க்கை பயன்படுத்தலாம். மற்றும் அதில் இல்லாத மற்றும் ஒன்றான இன்டர்நெட் வசதியையும், (2/9)
Jan 19, 2021 • 5 tweets • 6 min read
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா(93) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா இன்று அதிகாலையில் உயிரிழந்தார். சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.(1/5)
தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு வி.சாந்தா அர்ப்பணித்தவர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றி ருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர்(2/5)
Jan 18, 2021 • 15 tweets • 6 min read
தேசிங்கு ராஜா அரசவையில் மூச்சை நிறுத்தி வீர மரணம் அடைந்த தமிழச்சி கதை தெரியுமா?
'முதல் நாள் ஒரு கையை வெட்டுங்கள், மறுநாள் மற்றொரு கை, அடுத்து மார்பு, அதன் பின் முதுகு சதையை கிழி, பிறகு மூக்கறு, பின்னர் காதுகள், இடையிடையே வெந்நீரை ஊற்று, (1/15)
பின் குதிகாலை கொளுத்துக'இப்படி ஒரு தீர்ப்பைச் சொன்னது செஞ்சியை ஆண்ட விரத்திற்கும் தீரத்திற்கும் பேர் போன ராஜா தேசிங்கு...
'மன்னராட்சியில் குற்றவாளிகளுக்கு கொடும் தண்டனை கொடுப்பது வழக்கம்தானே..!' என்கிறீர்களா..! அதுதான் இல்லை... டெல்லியில் பாதுஷா ஷா ஆலம் ஆட்சி (2/15)
Oct 24, 2020 • 11 tweets • 3 min read
பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?
இந்த பங்கு மார்க்கெட் தொழிலில் என்ன செய்யலாம் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்....
1. அத்தியாவசிய தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை கொண்டு இங்கே முதலீடு செய்யாதீர்கள்..(1/11)
2. நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணம் சில பல நாட்களுக்கு உங்களிடம் சும்மாவேதான் இருக்கிறது (surplus fund) என்றால் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம்.
3. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஓரளவுக்கு நியாயமான லாபத்தை (resonable returns) எதிர்பாருங்கள்..(2/11)
Oct 18, 2020 • 9 tweets • 3 min read
மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?