🙏🙏🙏சிவாய நம ஓம்🙏🙏🙏
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
Nov 9, 2021 • 5 tweets • 2 min read
ஓம் சரவணபவ 🦚🐓✡️
அறுபடை வீடுகளில் திருத்தனியில் மட்டும் சூரசம்ஹாரம்
நடைபெறுவதில்லை ஏன்?..
கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை
மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
Oct 4, 2021 • 13 tweets • 4 min read
பசுபதிநாத் கோவில் 🔱🔥🙏
(நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்
இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர் நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார் இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே
Oct 3, 2021 • 11 tweets • 5 min read
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சிவாயநம 🔱🔱🔱
🔥 நம் தந்தை சிவனாரை பற்றி சில தகவல்கள்* 😍🔱🙏
● சிவபெருமான் தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக நின்ற திருத்தலம் ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்’ ஆகும்.
திருநீறு, ருத்ராட்சம், ‘நமசிவாய’ மந்திரம் போன்றவை, சிவச் சின்னங்களாக போற்றப்படுகின்றன.
● சிவபெருமான் யோகியாக இருந்து அருள்பாலிக்கும் கோலத்தை ‘தட்சிணாமூர்த்தி’ என்கிறார்கள்.
● எமதர்மனை வதம் செய்து, காலசம்ஹார மூர்த்தியாக அருளும் ஈசனை, திருக்கடையூரில் தரிசிக்கலாம்.
Aug 31, 2021 • 22 tweets • 6 min read
அரபிக் கடலுக்குள் சிவாலயம்
உலகிலேயே கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைப் பற்றியும், அதில் உறைந்து திருவருள் புரிந்து வரும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் பற்றியும் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். பல இயற்கைப் பேரிடர்களால் நிலம், கடலாகவும், கடல் நிலமாகவும், மலை மடுவாகவும்,
மடு மலையாகவும் மாறியுள்ளன. அவற்றில் அமைந்திருந்த திருக்கோயில்களும் அந்த மாற்றத்தில் மறைந்துபோய் உள்ளன. ஆனால் நிஷ்களங்க மகாதேவர் திருவிடம் மட்டும் எந்தவிதமான பேரிடர்பாடுகளாலும் மாறவில்லை, மறையவில்லை. எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்? யாரால், எப்பொழுது கட்டப்பட்டது? நிலை இல்லாத
#உடலில்_உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும். #மந்திரங்களையும், உணர்வுகளையும்
சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது
Aug 15, 2021 • 8 tweets • 3 min read
சிவ சிவ 🙏
முழுவதும் படியுங்கள் நண்பர்களே
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார்.
அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார்.
தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட