Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி Profile picture
Journalist with BBC Tamil @bbctamil | Writes on Gender Justice, Social Justice, Nature Justice, Art | nandhinimagesh.93@gmail.com | Tweets and RTs are personal
Jun 21, 2021 35 tweets 4 min read
ஷெர்னியும் ஆவ்னியும்!

2018 நவம்பரில் மகாராஷ்டிராவின் பந்தர்காவாடா வனப்பகுதியில் பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான ஆவ்னி புலி கொல்லப்பட்டது. அப்போது 'ஆவ்னியை கொன்றது யார்?' என்ற தலைப்பில் வெளிவந்த முக்கியமான கட்டுரையை மொழிபெயர்த்திருந்தேன். அதன் மீள்பதிவு... பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள் கேட்கலாம். எந்தவொரு அனுமதியும், உரிமையும் இன்றி வனத்திற்குள் நுழைந்து, நம் ரத்தம் மொத்தமும் உறைவது போன்று அந்த புலியை வேட்டையாடியவர்.
Jan 2, 2019 9 tweets 2 min read
பொக்கிஷம் கிடைத்தது 😍😍
சானிட்டரி நாப்கின்கள் சென்னை மேயராக 2006-11 காலகட்டத்தில் மா.சுப்பிரமணியன் இருந்தபோது மாநகராட்சி பள்ளிகளில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என காலையில் ட்வீட் செய்தேன். மாணவியாக நானும் இதனால் பயனடைந்திருக்கிறேன். திட்டம் பற்றி அறிய இணையத்தில் தேடினேன் அதில் The Hindu இணையத்தில் அக்டோபர் 23, 2008 இல் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.. அதிலுள்ள புகைப்படத்தை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகிடுச்சு...
Nov 16, 2018 28 tweets 3 min read
சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ்-சுவாதி குறித்த பத்திரிகையாளர் இரா.வினோத்தின் பதிவை thread-ஆக பதிவிடுகிறேன்... #சாதிக்கு_முடிவு_கட்டுவோம் புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?-இரா.வினோத்
திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.