Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS
Sep 21, 2022 • 4 tweets • 2 min read
ஈரானில் பெண்கள் ஹிஜபை எரித்து போராடுகின்றனர். இந்தியாவில் ஹிஜப் தடையை எதிர்த்து போராடுகின்றனர். இரண்டு போராட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை, ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது. அணிந்தே தீரவேண்டும், அணியவே கூடாது எனும் இரண்டு கட்டுப்பாடுகளும் ஆதிக்கமே. #Hijab
பெண் என்ன அணிய வேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்க வேண்டும். ஆண்களோ மதமோ தீர்மானிக்க கூடாது. சீக்கியர்களின் டர்பனை, ஹிந்துக்களின் திருநீரு குங்குமத்தை, தாலி எனும் பெண்னடிமை சின்னத்தை எப்படி தடை செய்ய முடியாதோ அப்படி ஹிஜபையும் தடை செய்ய முடியாது.
Jun 3, 2021 • 11 tweets • 4 min read
என் அப்பா, திரு.முகமதலி அவர்களின் நினைவுநாள் இன்று. அதற்கான ஒரு நீண்ட thread இது. என் சிறு வயதிலேயே மகேந்திரன் பாரதிராஜா பாலுமகேந்திரா பாலசந்தர் போன்ற பெயர்களை எனக்கு அறிமுகம் செய்தது அப்பா அம்மாவின் உரையாடல்கள்தான். அந்த ரசனமிக்க காதல் ஜோடிக்கு என் முதல் நன்றி
என் அப்பா!
அரை டவுசர் போட்ட காலத்தில், அதிலும் அவரிடமிருந்த ஒரே அரை டவுசர் அவருடைய பள்ளி சீருடையான அந்த ஓட்ட காக்கி டவுசர்தான், அந்த கஞ்சிக்கு வழியில்லாத காலத்திலேயே எப்படியோ ஒரு ‘Click-3’ கேமிரா வாங்கி, போட்டோக்கள் பல எடுத்தவர்.
Jul 2, 2020 • 4 tweets • 2 min read
மரணதண்டனை விதித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்று நம்புவது சரியா? கோவையில் இப்படி ஒரு குற்றவாளியை போலிசே சுட்டுக் கொன்றது நாம் அறிந்ததே. அதற்கு பிறகு கொடூரங்கள் நடக்கவில்லையா என்ன?
பெண்ணை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணின் மனநிலை மாற்றம் பெர வேண்டும் #JusticeforJayapriya#JusticeForJayarajandBennicks என்று போராடிக்கொண்டிருந்த நாம், இப்பொழுது மீண்டும் என்கவுண்டர் கேட்கிறோம். சட்டத்தை நம் வசதிக்கு வளைக்க நினைப்பதே ஒரு குற்றம்தான். கொலைக்கு தண்டனை கொலை என்பது கண்டிப்பாக தீர்வல்ல. இதன் #RootCause என்னவென்று ஆராய வேண்டும். பயத்தை விதைப்பது தீர்வல்ல