நாடு எங்கபோகுது? Profile picture
பக்தனாக இருப்பதை விட, யோக்கியனாக இருப்பதையே விரும்புகிறேன்!!!
Mar 15, 2021 11 tweets 2 min read
ஒரு இன்ட்ரஸ்டிங் ட்வீட்.
2009ல மார்க்கெட்டிங் ஜாப் மதுரைல கிடைச்சு, பீல்டு ப்ராடக்ட் ட்ரெய்னிங்காக சென்னைல இருக்க சேல்ஸ் ஆபிசரோட 1 வாரம் ஒர்க் பன்ன சொன்னாங்க.சென்னை எனக்கு புதுசு. போய்ட்டேன். 3 நாள் எக்மோர் ஸ்டேசன்ட்ட நிப்பேன்.அவர் பைக்ல வந்து கூப்ட்டு போவாப்ல. 1/1 ஈவ்னிங் வந்து அங்கயே ட்ராப் பன்னுவாப்ல. எந்த ஏரியா எங்க, எந்த பஸ்ல ஏறனும், இந்த ஏரியால இருந்து இன்னொரு இடம் எவ்வளவுதூரம் இப்டிஏதும் தெரியாது. 3நாள் கழிச்சு, நா பாண்டி போறேன், இன்னொரு சேல்ஸ் ஆபீசர் உங்களை ட்ராப் பன்னுவாப்ல. உங்கநம்பர் குடுத்திருக்கேனு சொல்லிட்டு கிளம்பிட்டாப்ல1/2
Oct 18, 2020 28 tweets 4 min read
#கொரானா த்ரட்...

மார்க்கெட்டிங் விசயமா திருப்பூர் போய்ட்டு நாலு வாரம் முன்னாடி,சனிக்கிழமை சாயங்காலம் பைக்ல வந்தேன். வரும்போதே லைட்டா மழைல நனஞ்சிட்டேன். வீட்டுக்கு வந்தா, ஒடம்பு லைட்டா கன கன ன்னு இருக்கு , பீவரிஷா..மூக்கு நமநமன்னு இருக்கு.1/1 சரி, மழைல நனஞ்சதாலதான்னு கேசுவலா விட்டுட்டேன். வீட்ல, தெர்மா மீட்டர் இருக்கு , செக் பன்னா...98+ காமிக்குது. விட்டுட்டேன். பட், மறுநாள் காலை காய்ச்சல் பீலிங் குறையல. 8-9 மணிக்கு டெம்ப்ரேச்சர் செக் பன்னா, 99+ போய்ருச்சு.
சரி, வெளாட்டா இருக்க வேண்டாம்னு டெஸ்ட்க்கு போனேன்.1/2
Jun 21, 2020 15 tweets 2 min read
கிராமத்தில,படிக்காத குடும்பத்தில பெறந்து, மழையை நம்பி வெவசாயம் பாக்கிற மானாவாரி விவசாயிதான் எங்கப்பா.
வருசம் முச்சூடும் வெள்ளாமை பன்னி, ஒரு மாசம் மழையில்லனா, மொத்தமும் சர்வநாசம்.பஞ்சம் பொழைக்க வெளியூர்தான் போகனும்
1/1
ஏதோ, கெடைக்கிறத வச்சு குடும்பத்த ஓட்டுவார். வீட்டுல வாரிசுக்கு ஆம்பள பிள்ள வேணும்னு எனக்கு முன்னாடி 5 அக்காவையும் , துணைக்கு ஒரு பய இருந்தா நல்லாருக்கும்னு ஒரு தங்கச்சியும் ஆய்ருச்சு.
1/2