கவியரசர் கண்ணதாசன் Profile picture
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது.
May 18, 2023 7 tweets 2 min read
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள்
ஒரு பேட்டியில் கவிஞர் கண்ணதாசனுடனான
தன் நினைவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது,
“பாரதியாருக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான்” என்று கூறுகிறார்.

நான் சந்தித்த மனிதர்களில் கண்ணதாசன் ஒரு மேதாவி.
அவர் கடும் முயற்சி செய்து கவிதைகளை
எல்லாம் எழுதினார் + ImageImage என்று நான் சொல்ல மாட்டேன்.
எந்த முயற்சியும் எடுக்காமல் கவிதை அவருக்கு
மிக இயல்பாகவே வந்தது.

பாடல் எழுத வந்து உட்கார்ந்தாரென்றால்,
பாடல் வரிகள் அருவி மாதிரி கொட்டும்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி,
மனதில் தோன்றியதை, அற்புதமான மொழி
நடையில் எழுதக்கூடிய கவிஞர் அவர்.
சில சமயம்+
May 12, 2023 7 tweets 1 min read
பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.

சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர்.

சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.

மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கையில் கடுமையான
+ Image வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.
அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.

அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.

வெற்றிலை
+
Mar 16, 2023 5 tweets 1 min read
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான். யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி அமையும்.

பன்னிரண்டு வருஷங்களுக்கு
👇 முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.
திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.
நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன்

⤵️
Feb 5, 2023 7 tweets 2 min read
கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை .

மிகுந்த கவலையில், தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம். உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து
+ உள்ளார்.
"மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா "! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் .
அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன், ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து
+
Feb 3, 2023 5 tweets 1 min read
“பாரதியாரோடு பலர் என்னை ஒப்பிடும் போது, எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.

என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.

பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்.."

இப்படி மனம் திறந்து பாரதியாரைப் பாராட்டியவர் கவியரசர் கண்ணதாசன்!

இதோ, இன்னும் கூட

+ Image பாரதியார் பற்றி கவியரசர் கண்ணதாசன் ....

“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள், பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன்.
அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன்
+
Jul 22, 2021 4 tweets 1 min read
ஒரு கூட்டத்தில் பேசும் போது கண்ணனை புகழ்ந்தார் கண்ணதாசன்.
கண்ணன் என் மன்னன். அவனது கானம் கேட்டால் பட்டமரம் துளிர்க்கும் என்றார் அவர்.

கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் உடனே எழுந்து....
நீங்கள் சொல்லுவது நிஜமானால் கண்ணனின் கையிலிருக்கும் புல்லாங்குழல் துளிர்த்திருக்க வேண்டுமே...

+ அதுவும் பட்டமரம் தானே..? என்று கேட்டார்.

கண்ணதாசனை ஒருவர் மடக்கி விட்டதை கண்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்...

கண்ணதாசன் சற்றும் அசரவில்லை..
நிதானமாக சொன்னார்...

கண்ணன் கானத்தை கேட்டால் பட்டமரம் துளிர்க்கும்தான்...ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கைகளில் பட்டுக் கொண்டே

+