Prabhakar Profile picture
My wings are not clipped. But well groomed. Proud to call myself an ancient dravidian stock.
Nov 15, 2021 12 tweets 2 min read
பூமா தேவி வாயப்பொளக்கப் போறா - வாங்க 70 ஆண்டுகளுக்குப் பின்னாள் போகலாம் என்கிற டூபாக்கூர் அபாய மணி...

டெக்னிகலி பார்த்தா நானும் ஒரு சூழலியர்தான். டைனோசார்கள் வாழ்ந்த காலளவு கூட இந்தப் பூமியில் மனிதன் ஓர் உயிரினமாக வாழ வழியில்லை என்று எழுதி வந்திருக்கிறேன். - 1 டைனோசார்களுக்கு அதன் அகோரப்பசியும், போட்டியின்மையும் அதன் மாண்டழிவிற்கு காரணிகள் என்றால், நமக்கு நம்முடைய அதீத அறிவும், பேராசையும் விரைவில் நமக்கான அழிவை தேடித்தரும் என்று ஒரு முடிவிற்கு வந்தடைந்தேன்.

ஆனால், வயது ஏற ஏற என்னுடைய பார்வையில் சில மாற்றங்கள் வந்திருக்கிறது. - 2
Nov 14, 2021 5 tweets 3 min read
நேரு பற்றி கட்டியெழுப்பட்ட பொதுப்புத்தி என்ற சிறையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமா?

படிங்க...

இந்தப் புகைப்படத்தில் நேரு தனது வாழ்க்கையை ஒரு செய்தியாக வெளிப்படுத்தி வாழ்ந்ததை அறிய முடியவில்லையா?

#NehruTheJewelOfIndia வெளிப்படைத் தன்மையுடன் ஆண்களையும், பெண்களையும் ஒரே தட்டில் வைத்து பழகுவதை எப்படி நாம் நம் வளர்ந்த கட்டமைப்பில் வைத்து ஒருவரை நமது சட்டத்திற்குள் (frame) வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்.

அவர் தன்னுடைய மகளான இந்திராவிடம் எப்படி தோழமையுடன் பழகினாரோ - 2

#NehruFacts
Oct 13, 2021 10 tweets 3 min read
ஆமாம், ஆர் எஸ் எஸ் பின்னணியிலிருந்துதான் அதிகாரிகள் வருகிறார்கள். இப்போ என்ன? - பிஜேபி வானதி சீனிவாசன்.

என்ன கொடுமையிது சரவணா!!!

காலனிய ஆட்சி அகற்றப்பட்டு இந்த நிலப்பரப்பின் பல நாடுகளை ஒன்றித்து ஒன்றியமாக்கி, எல்லா நிலையிலும் நவீன வாழ்விலிருந்து - 1 பின் தங்கிக் கிடந்த குகைவாழ்விகளின் தர்மா வாழ்விலிருந்து மீட்டெடுக்க ஜவஹர்லால் நேரு மட்டும் அன்றைய முதல் பிரதமராக பதவியேற்காமல் போயிருந்தால், இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல விசயங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படாமலேயே போயிருக்கும். - 2
Jun 4, 2021 5 tweets 2 min read
பி•டி•ஆர் நம்மிடையே மாறி வந்திருக்கிற திராவிட சிந்தனைக் கொண்ட இளையோர்களுக்கான ஓர் அடையாள மனிதர்.

எப்படி?

ஒரு காலத்தில வெகுஜன ஊடகங்களின் வழியாக நமது பொது புத்தியில் சமூகநீதி, ஜாதியம், இடஒதுக்கீடு, பகுத்தறிவு, திராவிடம் என்று பேசினால், - 1/n @ptrmadurai ஓரளவிற்கு படித்து விட்டோம் என்பவர்களிடையே, அது போன்ற சாய்வு நிலை "மேட்டிமை தனத்திற்கு" கீழே உள்ள வளர்ச்சியாக நம்ப வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த ஏழாண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் இறுக்கமும், கள அரசியலும் புரிந்து அந்த மனச்சிக்கலை உடைத்துக் - 2/n
May 1, 2020 10 tweets 2 min read
இந்த ஊட்டி, கொடைக்கானல், தேராதூன் அப்படின்னு மலைப்பாங்கான இடங்களில் தங்கிப் படிச்சு (boarding school) வளர்ந்த பிள்ளைங்கதான் தனக்கு எப்படி அந்த வசதி வாய்ப்பு கிடைச்சிச்சின்னு தெரியாம மரம் மாதிரி சமூக உணர்வே இல்லாம வளர்ந்து நிற்பானுங்கன்னு நினைச்சேன்... contd ஆனா பாரு அரசு பள்ளிகளிலேயே படிச்சு, அரசு பாடப் புத்தகங்களையும், நோட்டுக்களையும் வாங்கி எழுதப் படிக்க கற்றுக்கொண்டவிங்கக் கூட என்னமோ தானும் அந்த ஷெப்ஃபெர்ட் சர்வ தேச பள்ளியில படிச்சு வளர்ந்தவிங்க மாதிரி நட்டுக்கிட்டு பேசித் திரியாறனுங்களே அதெப்படிடா?
Mar 29, 2020 12 tweets 3 min read
வேட்டையாடிகளாக இருந்த பொழுது, நம்முடைய புலம்பெயர்வு என்பது விலங்குகளுடனும், அந்த நிலப்பரப்பின் தட்பவெப்ப நிலையையும் சுற்றியே இருந்தது. பிறகு சரியான நிலப்பரப்பு நீண்ட நெடிய தங்குதலுக்கு உகந்ததாக அமைந்த பொழுது மெல்ல வேளாண்குடிகளாக ஓரிடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தோம். - 2 அதனையொட்டி வாழ்வும், சமூகமும் மொல்ல மெல்ல பல சிக்கலான கட்டமைப்பிற்குள் நகர்ந்து நாகரீகங்களாக எழுவதும், வீழ்வதுமென இந்த மனிதகுலம் கடந்து இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது.

இந்த சிக்கலான கட்டமைப்பில் ஒரு பரந்த நிலப்பரப்பின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவும், - 3