ஏன் மற்ற மாநிலங்களை போல் தழிகத்தில் பட்டியலினத்தை சார்ந்த MLA வுக்கு முக்கிய பதவி வழங்கவில்லை
கேரளாவில் இப்போது கம்யூ.கட்சியின் பிரனாயி விஜயன் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கே.ராதாகிருஷ்ணன் என்கிற அட்டவணைப் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி உள்ளார்கள். 1/n
கர்நாடகாவில் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் பாஜக ஆட்சியில் இப்போது கோவிந்த கார்ஜோல் என்ற பட்டியலினத்தவர் தான் துணை முதலமைச்சர்.- கூடவே பொதுப்பணி துறையும். தவிர பிரபு சவண், வால்மீகி (மலைவாழ் )சமூகத்தைச் சேர்ந்த நாகேஷ் ஸ்ரீராமுலு ஆகிய இரண்டு பட்டியலினத்தவர்களும் அமைச்சர்கள். 2/n
அண்ணா அவர்கள் கட்சியில் பட்டியலின மக்களுக்கு பதவி என்பதை பெயருக்காகவோ கணக்கிற்காகவோ செய்யவில்லை.எல்லா விடுதலையும் அவர்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் செய்தார்.1/n
அதனால்தான் அந்த மக்கள் அண்ணாவோடு ஒன்றி இருந்தார்கள்.
கட்சிக்கான முதல் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தபோது குமரி மாவட்டத்திற்கு வி.எம். ஜான் என்ற துடிப்பான பட்டியலின இளைஞரை தான் நியமித்தார் அண்ணா. அன்று ஜானைவிட இன்னும் முக்கிய தம்பிகள் எல்லாம் அண்ணாவிடம் இருந்தார்கள். 2/n