எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு/ /உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ /தமிழ் நாடு /இந்திய ஒன்றியம்
Oct 31, 2022 • 25 tweets • 6 min read
யார் இந்த ஹரேன் பாண்டியா?
பாரதீய ஜனதா கட்சியின் (BJP) சட்டமன்ற உறுப்பினராக அகமதாபாத் நகரின் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் ஹரேன் பாண்டியா . அவர் தனது சிறு வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தார், மேலும் அகமதாபாத் நகரத்தின் பால்டி பகுதியில் இருந்து
முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்தார் பாண்டியா ஜேசுபாய் படேலின் வலுவான ஆதரவாளராக இருந்தார் 1998ல், ஜேசுபாய் முதலமைச்சராக குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பாண்டியா உள்துறை அமைச்சரானார் நரேந்திர மோடி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்
Sep 3, 2021 • 25 tweets • 2 min read
*தாலிபன்கள் யாரும் எதிர்பாராத மின்னல் வேகத்தில் ஆப்கானிஸ்தானின் பல முக்கியமான பகுதிகளை கைப்பற்றினர்.ஆனால் அவர்கள் காபூலில் இருந்து புதிய அரசு அமைப்பதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது,*
*அந்த நகருக்கு அருகிலேயே அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. காபூலுக்கு வடகிழக்கே தாலிபன்களை எதிர்க்கும் ஒரு சிறிய பள்ளத்தாக்கு பகுதி விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் பஞ்ஷிர்.*