இடதுசாரிய அரசியல் இந்தியாவில் அடைந்த மாற்றங்களும் கொள்கை முரண்களும் இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளை தாண்டி இடதுசாரிய கட்சிகள் இருந்தன என்றோ தமிழ்நாடுக்கென ஓர் இடதுசாரி கட்சி இருந்தது என்றோ புலிகளை ஆதரித்து வர்க்கப் புரட்சியுடன் தேசிய இன விடுதலையையும் செயல்திட்டமாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது என்றோ அவர்கள் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.
ஆயுதங்கள் இன்றிதான் ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடி வந்தன என்ற நம்பிக்கையும் பரவலாக இன்று உண்டு.
இவை யாவும் இன்று இருக்கிற அரசியல் சூழலில், நேர்ந்திருக்கும் சிந்தனைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் மட்டும்தான்.
இந்திய இடதுசாரிய இயக்கத்தின் வரலாறு இதைக் காட்டிலும் நெடிது. அதை சிதைத்து அழிக்க முயன்ற இந்திய அரசின் வரலாறு அதைக் காட்டிலும் நெடிது. இந்த வரலாற்றைத்தான் விடுதலை 2 சொல்கிறது.
இப்படம் கையாளும் வரலாற்று பின்புலம் பெரியது என்பதால், இப்படத்தின் பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் ஆகியவற்றை பற்றிய குறிப்புகளை சில நாட்களுக்கு கொடுக்கலாம் என்ற ஒரு முயற்சியின் தொடக்கம்தான் இது.
முக்கிய குறிப்பு: இன்ன கட்சி, இன்ன அரசியல் என்பதெல்லாம் தாண்டி இந்திய இடதுசாரிய அரசியல் சார்ந்து தமிழ்நாட்டில் இருந்த போக்குகள், இந்திய அரசின் போக்குகளுடனும் சர்வதேச அரசியல் போக்குகளுடனும் ஊடாடி எப்படி மாற்றங்களுக்குள்ளாகின என்பதற்கான வரலாற்று பார்வை இது. வழமையான அரசியல் கட்சி சிந்தையுடன் அணுகாமல் வரலாறு மற்றும் இந்திய அரசின் தன்மை, இந்திய சமூகத்தின் முரணியக்கம் ஆகியவற்றோடு, இக்குறிப்புகளை அவதானிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Thread 2/7
1925ம் ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் இந்திய பொதுவுடமை கட்சி உருவானது.
உக்கிரமான தொழிலாளர் போராட்டங்களை இந்தியாவின் தொழில் மையங்களான பம்பாய், கல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் அக்கட்சி நடத்தியது. எண்ணற்ற தியாகங்களினூடாக உரிமைகள் வென்றெடுக்கப்பட்டன.
தெலங்கானா ஆயுதப்புரட்சியும், கீழத்தஞ்சைப் போராட்டமும் விவசாயப் போராட்டங்களில் அடங்கும். இத்தகையப் போராட்டங்கள்தான் விவசாயக் கூலிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோருக்கான உரிமைகளை பெற்றுத் தந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தத்தை அரசு கொண்டு வரும் கட்டாயத்தை உருவாக்கின.
1952ம் ஆண்டில் ஆயுதப் புரட்சியை கைவிடுவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. தேர்தலில் பங்கெடுத்து அரசை அம்பலப்படுத்துவது என்ற உத்தியை கையில் எடுத்தது.
கேரள மாநிலம் உருவானதும் 1957ம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. எனினும் இரண்டு ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அப்போதிலிருந்து வெளிநாட்டு உறவுகளிலும் பொருளாதாரக் கொள்கைகளிலும் இந்திய அரசை ஆதரிக்கும் நிலைக்கு மாறிக் கொண்டது.
மறுபக்கத்தில் சோவியத் யூனியனில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த குருஷேவ் ஒரு ரகசிய உரையாற்றி, ஸ்டாலின் மீது பல அவதூறுகளை வைத்தார். (அவையனைத்தும் பொய் என்று குரோவர் பர் போன்ற ஆய்வாளர்களால் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன).
வர்க்கப் போராட்டத்துக்கு பதில் சமாதான சகவாழ்வு என்ற அரசியலை கடைப்பிடித்தார் குருஷேவ். எனவே சோவியத்தின் நட்பு நாடான இந்திய நாட்டில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தியது சோவியத். அதனால் கட்சியில் பல அதிருப்தியும் சித்தாந்த மோதலும் உருவெடுத்தன.
1962ம் ஆண்டு நடந்த சீனப்போரில் இந்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்ததும் மோதல் முற்றி கட்சி உடைந்தது.
Jan 6, 2023 • 9 tweets • 1 min read
க்வாஜா எந்தன் க்வாஜா ❤ :
2019ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தன்னுடைய விமான டிக்கெட்டை ட்வீட்டிட்டிருந்தார் ரஹ்மான். டிக்கெட்டில் அவரின் முழுப்பெயர் இருந்தது. Allah Rakka Rahman!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்திய ஒன்றியமே குலுங்கிக் கொண்டிரும்போது தான் யார் என்பதையும் தான் கொண்டிருக்கும் அரசியல் என்னவென்பதையும் தெளிவாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படுத்தியப் புகைப்படம் அது.
Nov 7, 2022 • 12 tweets • 2 min read
ஒரு ஜென் கதை உண்டு.
ஒரு மலை உச்சியில் ஒரு மனிதன் நிற்கிறான். அடிவாரத்தில் நிற்கும் மூவர் அவனைப் பார்க்கின்றனர். அவனைப் பற்றி பேசுகின்றனர்.
"அந்த மனிதன் மாடு தேட அங்கு போயிருக்க வேண்டும்!"
"எனக்கு அப்படி தோன்றவில்லை. அவன் அசையாமல் நிற்பதைப் பார்த்தால், யாருக்காகவோ அவன் காத்திருப்பது போல் தெரிகிறது."
"காத்திருக்கிறான் எனில் அவ்வப்போது வேறு பக்கம் திரும்பியிருக்க வேண்டும். அவன் திரும்பக் கூட இல்லை. அவன் தியானம் செய்கிறானென நினைக்கிறேன்!"
Nov 5, 2022 • 6 tweets • 1 min read
ஜான் லென்னான் வாழ்க்கையை விளக்கும்போது இப்படி குறிப்பிட்டார்:
Life is what happens when you're busy making other plans.
‘வாழ்க்கை பற்றிய முக்கியமான திட்டங்களை நீங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்போது நேர்கிறதே, அதுதான் உங்களின் வாழ்க்கை’ என மொழிபெயர்க்கலாம்.
இன்றையச் சூழலில் அந்த மேற்கோளில் சிறு திருத்தத்தைச் செய்ய வேண்டியிருக்கும்.
‘வாழ்க்கை பற்றிய முக்கியமான திட்டங்களை நீங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்போது நேர்கிறதே, அதுதான் உங்களின் அழிவு’
Oct 31, 2022 • 16 tweets • 2 min read
உங்களின் பேச்சு அடுத்தவரை பாதிக்குமா என சிந்திக்க empathy வேண்டும். அடுத்தவரை பாதித்துவிடக் கூடாது என்பதற்கு compassion வேண்டும். அடுத்தவரை பாதித்தால் அதை உணர்ந்து சரி செய்வதற்கு sympathy வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு integrity-யும் introspection-ம் வேண்டும்.
இதுவரையிலான பிக் பாஸ் தொடர்களிலேயே, கையாள முடியாத போட்டியாளர்களை கமல் இம்முறைதான் எதிர்கொள்கிறார் எனத் தோன்றுகிறது.
அசீம், எல்லா தவறுகளையும் செய்துவிட்டு சனிக்கிழமை எபிசோட் வந்ததும் அரசியல்வாதியின் அறிக்கை போன்று நியாய உணர்வுடன் பேசுவதாக காண்பித்து நடிப்பார்.
Oct 26, 2022 • 23 tweets • 3 min read
'தமிழை பிரத்யேகமாக மொழிப்பாடமாக எடுத்து படிக்க வேண்டியதில்லையே.. வீட்டில் நாங்கள் தமிழ்தானே பேசுகிறோம். அதற்குப் பதில் குழந்தைக்கு இன்னொரு மொழி அல்லது ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாமே?’
எனத் தோழர் கேட்டார். குழந்தை வளர்க்கும் பலருக்கு இந்தப் பார்வை இருக்கிறது.
அடிப்படையில் மூன்று கேள்விகள்தான்.