Aravindakshan B R Profile picture
Journalist,RTI Activist -Views are 💯 % personal
Nov 10, 2023 4 tweets 7 min read
சென்ற வருடம் எழுதியது

அட்வைஸ் செய்ய அருகதை வேண்டாமா ?
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஒரு கடிதம் !
====

அன்புள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு வணக்கம் !
துக்ளக் இதழின் 52-வது ஆண்டுவிழாவில் நீங்கள் பேசிய முழு உரையைக்கேட்டேன்.
மேடைக்கு எதிரில் முன்வரிசையில் அமர்ந்திருந்த பல முக்கிய மனிதர்களோடு எனக்கு நேரடி அறிமுகம் இருக்கிறது.
அதனால் கடுமையான கோபம் இருந்தாலும்,மிகுந்த கவனத்தோடு இதை குறிப்பிடுகிறேன்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் மத்திய அரசு சிப் வைத்திருக்கிறது என்ற ஒரு அபத்தமான தகவலை பரப்பிய ஒரு மனிதனின் பேச்சை கேட்க ஏதோ கடவுளின் முன்பு பயபக்தியுடன் உட்கார்ந்திருப்பது போல அவர்கள் மெய்மறந்து அமர்ந்திருந்தது ஆச்சரியமளிக்கிறது.

வாய்க்கு வந்ததை எல்லாம் போகும் போக்கில் பேசிவிட்டு போகும் உங்களை..
எப்படி..இந்த சமூகம் இவ்வளவு உயர்வான இடத்தில வைத்துள்ளது என்பது உண்மையிலேயே புரியாத புதிர் தான்.

இதை நான் சொல்வது ஏதோ உள்நோக்கத்திலோ அல்லது வெறுப்பு,காழ்புணர்ச்சியாலோ நிச்சயம் கிடையாது.

2018-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நடந்த துக்ளக் விழாவில் நீங்கள் பேசிய ஒரு விஷயத்தை கேட்டு எனக்கு மயக்கமே வந்து விட்டது.

அதற்கு பின் துக்ளக் படிப்பதையும் நிறுத்திவிட்டேன்.உங்களது உரையை கேட்பதையும் தவிர்த்தே வந்தேன்.
பின்பு,எதற்காக இந்த கடிதம் என்றுகூட உங்களுக்கு தோணலாம்.
என்ன சார் செய்வது,இந்த பாழாப்போன சமூக வலைதளத்தில் நீங்கள் பேசிய பேச்சை நண்பர்கள் பலர் பதிவு செய்தது.
கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது.
எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வது.அதனால் தான் இந்த கடிதம் கண்றாவி எல்லாம்..

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பேசிய பேச்சை கேட்டுவிட்டு
எனக்கு தெரிந்த சில பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம்
நீங்கள் தெரிவித்த விஷயம் குறித்து விசாரித்துக்கொண்டு இருந்தேன்.
ஒரே வரியில் அவர் புரூடா விட்டிருக்கிறார்-அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு நேர்லயே வந்துட்டீங்களேன்னு விழுந்து விழுந்து சிரித்தனர்.

அப்படி… நீங்கள் விட்ட டுபாக்கூர் என்னவென்று தெரியுமா ?

கடந்த 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில், சீன அரசாங்கம் சாலை விரிவாக்கம் செய்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்தது.
அதைப்பற்றி நீங்கள் அந்த 48-ம் ஆண்டு விழாவில் பேசினீர்கள்.

அப்போது..
டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் என்ன நடந்ததென எனக்கு தெரியும்.ஆனால் அதை இங்கு சொல்லமுடியாததென தெரிவித்தீர்களே நினைவிருக்கிறதா ?

140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 8 கோடி மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
தமிழ் மொழியில் வெளியாகும் துக்ளக் இதழ் அதிகபட்சம் 25 ஆயிரம் விற்பனையானால் ஆச்சர்யம்.

ஆனால்,நீங்கள் மேடையில் பேசுகிறீர்கள் இந்தியாவின் வெளியுறவு விவகாரம் குறித்து இரண்டு நாட்டின் அதி உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயம் குறித்து எனக்கு தெரியும்,ஆனால் அதை சொல்லமுடியாது என்கிறீர்கள்.
அதையும் கேட்டு ஒரு கூட்டம் கைதட்டுகிறது.
எங்கே போய் முட்டிக்கொள்வது…

அப்போது நீங்கள் வெளிப்படுத்திய உடல்மொழியும்-பேச்சின் பாவனையும் இருக்கிறதே.
பிரமாதம்..
ஒருவேளை நீங்கள் ஆடிட்டர் ஆகாமல், நடிகராகி இருந்தால்...
மிகசிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகியிருப்பீர்கள்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சீனாவின் அதிபர் முன்பு 45 டிகிரி வளைந்து நின்று நாட்டிற்கே இழிவை ஏற்படுத்தினார்.
ஆனால்..
அந்த நிலை இப்போது மாறி ,அமெரிக்க அரசாங்கமே
நீங்கள் சீனாவை எப்படி டீல் செய்தீர்கள் என்ற ரகசியத்தை கூறுங்கள் என நம் அரசாங்கத்திடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாக கூறினீர்கள்.

ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா திரு.குருமூர்த்தி அவர்களே...

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி மக்களவையில்
அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு தொகுதியின் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் Tapir Gao என்ன பேசினார் என்று தெரியுமா ?

சுருக்கமாக சொல்கிறேன்.. கேளுங்கள்..

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே..
இந்த பிரச்னையை நான் இப்போது பேசவில்லை என்றால்,,
இந்த நாடும் அடுத்துவரக்கூடிய தலைமுறையும் என்னை ஒருபோதும் மன்னிக்காது..

14 நவம்பர் 2019 பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசம் சென்றார்.
சீனா அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்தியா அமைதியாக இருந்தது.
குடியரசு தலைவர்,பிரதமர்,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் அருணாச்சலப்பிரதேசம் சென்றார்கள்.
அப்போதும்.. ஒவ்வொரு முறையும் சீனா கடுமையாக எதிர்த்தது.

ஆனால் நம்முடைய தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.
நான் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்
1
Image தயவு செய்து அருணாச்சலப்பிரதேசத்தில் நடக்கும் சீன ஆக்ரமிப்பு குறித்து பேசுங்கள்.எழுதுங்கள்..
ஏன் ஊடகங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது ..

60 கிலோ மீட்டர் பரப்பளவில் சீனா அருணாச்சல பிரதேச பகுதிகளை ஆக்ரமித்துவிட்டது.
நான் நாடாளுமன்ற அவையின் சபாநாயகராகிய உங்கள் மூலமாக இந்தியாவில் இருக்கும் ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறேன் பாகிஸ்தான் குறித்த பிரச்சனை என்றால் கொடுக்கும் முக்கியத்துவத்தில்,,ஏன் சிறிய அளவு முக்கியத்துவம் கூட அருணாச்சல பிரதேசத்திற்கு கொடுக்க மறுக்கிறீர்கள்.

பத்திரிகை-தொலைக்காட்சிகள்-எதிர்க்கட்சிகள்,
இந்த அவையில் கூட ஏன் யாருமே பேச தயங்குகிறீர்கள்..
தயவு செய்து பேசுங்கள்.. என்று கதறினார்..

பத்திரிகை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களே தயவு செய்து பேசுங்கள்..எழுதுங்கள்..
இல்லையென்றால் அருணாச்சல பிரதேசம் மற்றொரு டோக்லாமாக மாறிவிடுமென கூறி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்..

ஆனால் இந்தியாவில் இருக்கும் எந்த ஊடகமும் பத்திரிகையும் அவர் குறிப்பிட்ட அருணாச்சல பிரதேச பிரச்னை குறித்து பேசவில்லை.

அவ்வளவு ஏன்...
அப்பழுக்கற்ற தேசியவாதியான நீங்களாவது துக்ளக்கில் எழுதியிருக்கலாம்.ஆனால் நீங்களும் எழுதவில்லை.

பத்திரிகை துறையின் சாபக்கேடு பாருங்கள்..
நீங்கள் எல்லாம் பத்திரிகைகளுக்கு உபதேசம் செய்கிறீர்கள்..

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை மிகவும் பெருமையாக பேசியிருக்கிறீர்கள்.
தவறில்லை.உண்மையிலேயே அது சாதனை தான்.

கிட்டத்தட்ட ஒரு கோடியே 36 லட்சம் மக்கள் வாழும் மாநிலமான ஜம்மு காஷ்மீர்
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஆனால் அங்கு எவ்வளவு நாட்களாக குடியரசு தலைவர் ஆட்சி நடக்கிறதென தெரியுமா உங்களுக்கு ?

மிகப்பெரும் மேதாவியான உங்களுக்கு தெரிந்திருக்கலாம்..
ஆனாலும் நினைவூட்டுவதற்காக சொல்கிறேன்..

ஜம்மு காஷ்மீரில் 2018-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
ஆனால் அதற்கு முன்பாக 6 மாத காலம் ஆளுநர் ஆட்சி நடந்தது.

கிட்டத்தட்ட 1435 நாட்களாக,அதாவது 4 ஆண்டுகளாக மத்திய அரசின் நேரடி பார்வையில் அங்கு ஆட்சி நடந்து வருகிறது.

இது ஜனநாயகத்திற்கும்-மக்களாட்சி தத்துவத்திற்கும் நல்லதென்று நீங்கள் நினைக்கிறீர்களா குருமூர்த்தி ?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அங்கு,,
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடந்த புல்வாமா தாக்குதல் நினைவிருக்கிறதா உங்களுக்கு ?

உங்களோடு மேடையில் அமர்ந்திருந்த மரியாதைக்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,புல்வாமா தாக்குதல் நடந்தபோது ராணுவ அமைச்சர் பதவியில் இருந்தார்.

மேடைக்கு மேடை நாட்டில் வெடிகுண்டு சம்பவங்களே நடக்கவில்லை என அவர் பிரச்சார மேடைகளில் பேசிக்கொண்டிருந்த நேரமது.
அப்போது தான் புல்வாமா தாக்குதல் நடந்தது.

நான் சொல்ல வரும் விஷயம் தாக்குதல் பற்றியல்ல..
புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த 15 தினங்களில் உலகில் எந்த நாட்டிலும் நிகழாத ஒரு அநியாயம் நம்நாட்டில் நடந்தது.அறிவீர்களா ?

ஞானக்கடலான நீங்கள் அதைப்பற்றி ஏதாவது எழுதியோ பேசியோ இருக்கிறீர்களா என்பதை யோசித்துப்பாருங்கள்

2019-பிப்ரவரி 26 ம் தேதி இந்தியாவின் வான் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்ட்டர்,ஏவுகணை மூலமாக சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதில் இரண்டு விமானிகள் உட்பட 6 விமானப்படையினர் உயிரிழந்தனர்.

சொந்த நாட்டு எல்லைக்குள் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரை அந்த நாட்டு விமானப்படையே ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்திய வரலாறு எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா குருமூர்த்தி ?
ஆனால் இந்தியாவில் நடந்தது.
கிட்டத்தட்ட 8 மாத காலம் அந்த அநியாயத்தை மறைத்து வைத்திருந்தது இந்திய அரசாங்கம்.

அப்பழுக்கற்ற தேசியவாதியான நீங்கள் இதைப்பற்றி எப்போதாவது பேசி இருக்கிறீர்களா ? இல்லை இந்த விஷயம் குறித்து தான் ஏதாவது தெரியுமா ?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து விட்டதென மேடையில் கூசாமல் பொய் பேசுகிறீர்கள்..
எப்படி உங்களால் முடிகிறது ?

உங்களுடைய வாழ்க்கையில் என்றைக்காவது உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையை படித்திருக்கிறீர்களா குருமூர்த்தி அவர்களே ?

2014-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 222...

அதற்கு பிறகு தீவிரவாத தாக்குதல் எப்படி அதிகரித்துள்ளதென தெரியுமா ?

2015-208
2016-322
2017-342
2018-614
2019-594
2020-244
இப்படி உயர்ந்திருக்கிறது..இது ஏதோ நான் சொல்லும் புள்ளி விபரங்கள் அல்ல.

இவையெல்லாம் உள்துறை அமைச்சகத்தின் 2020 ஆண்டு அறிக்கையில் கூறியிருப்பது.

அத்துமீறி நடக்கும் ஊடுருவல் கூட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட அதிகமாவே நடந்திருக்கிறது என்பதை உள்துறை அமைச்சக அறிக்கை தெளிவு படுத்துகிறது.

2
Apr 28, 2023 24 tweets 9 min read
In The Name of Love என்ற பெயரில் Love Jihad குறித்து கேரளாவை மையமாக வைத்து படமெடுத்தவர் தான் @sudiptoSENtlm
அரசியல்,பொது மேடைகளில் சிலர் பேசியதை ஆதாரமாக கொண்டு படமெடுத்து,உள்நோக்கத்தோடு JNU-லும் திரையிட்டார்
ஆனால்,அவர் கூறியவை அரசாங்கத்தில் ஆவணமாகியிருக்க வேண்டுமென அறியவில்லை
1 Image அப்பட்டமான மதவெறுப்பை
பரப்பும் திரைப்படமென அறிந்த JNU மாணவர்களால் அடித்து விரட்டப்பட்ட சுதிப்தோ சென்,
அந்த ஆத்திரத்தை,வன்மத்தை தீர்க்க The Kerala Story என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தியாவில் கேரளாவைத் தவிர வேறு எங்குமே முஸ்லிம்கள் வாழவில்லை என்பது போல..
2
Apr 26, 2023 5 tweets 2 min read
2017 ம் ஆண்டு இறுதியில் திருமதி.சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை மிகப்பெரிய வருமானவரித்துறை சோதனை நடந்தது.
துக்ளக் 48- வது ஆண்டுவிழாவில் அது தொடர்பாக பேசிய @sgurumurthy ரூ.5000 கோடி பணம் சோதனையில் சிக்கியுள்ளதாக Ex.நிதியமைச்சர் அருண்ஜெட்லீயை வைத்துக்கொண்டே பேசினார்
1 தோண்டத்தோண்ட பணம் வருவதாக குருமூர்த்தி வகையறாக்கள் விட்ட புருடாவை நம்பி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமிருக்கும் ஊடகங்கள் அதிமுக என்ற கட்சியை சர்வ நாசம் செய்ய,அதிமுக தலைவர்களை அச்சறுத்த உதவியது.
ஆனால், மத்திய அரசின் வருமான வரித்துறை சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில்
2
Apr 26, 2023 13 tweets 4 min read
இந்தியாவின் மிகப்பெரிய போதை மருந்து ஊழல்-விசாரணையை வேகப்படுத்திய உள்துறை அமைச்சகம் @HMOIndia

இந்தியாவில் பறிமுதல் செய்யப்படும் ஹெராயின் குறித்து @sathiyamnews -29-08-22
ம் தேதி 2018 & 2020 ம் ஆண்டில் மட்டும்,
70772 kg ஹெராயின் மாயமான விபரத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது
1 அதாவது,
சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 2018 மற்றும் 2020 -ல் பறிமுதல் 65,000 கிலோ ஹெராயினும்,
மணிப்பூர் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறிய 3200 கிலோவும் இந்தியாவின் எந்த ஒரு புலனாய்வு ஏஜென்சிகளின் பறிமுதல் கணக்கிலும் காட்டப்படவில்லை
2
Apr 26, 2023 9 tweets 4 min read
India's Biggest Drug Scam -Ministry of Home Affairs Speeds Up Probe

Regarding the seizure of heroin in India
Last August 29, @sathiyamnews investigated and revealed with evidence that 70772 kg of heroin had gone missing in 2018 and 2020 alone
1+

sathiyam.tv/5-lakh-crore-d… that is, 65,000 kg of heroin seized in 2018 and 2020 in Sikkim state alone.
The 3,200 kg that the Home Ministry said was seized in Manipur did not show up in the seizure accounts of any of India's central/state intelligence agencies.
2+
Mar 14, 2023 16 tweets 7 min read
மனித குலத்திற்கே எதிரான அரசியல் செய்கிறார்களா ?

2022 ஜனவரி மாதம் 19-ம் தேதி தஞ்சை சிறுமியின் லாவண்யா விஷமருந்தி உயிரிழந்த விவகாரத்தில் என்ன நடந்தது..
கட்டாய மத மாற்றமே தற்கொலைக்கு காரணம் என்ற புகார் உண்மையா?
மத்திய அரசு ஆவணங்கள் என்ன சொல்கிறது என பார்க்கலாமா ?
1 சிறுமி லாவண்யாவின் மரணத்தை வைத்து தமிழ்நாட்டில் பிஜேபியும்,,ஹிந்துத்துவ அமைப்புக்களும் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல
மதமாற்றமே மரணத்திற்கு காரணமெனக் கூறி அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தை நாடு முழுக்க பரப்பினார்கள்.
ஒட்டுமொத்த வடஇந்திய ஊடகங்களையும் பேச வைத்தார்கள்
2
Mar 9, 2023 18 tweets 5 min read
அவமானமாக இருக்கிறது @CMOTamilnadu

ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறேன் படியுங்கள்..
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில்
2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி
விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணி ஒன்றை நடத்தியது
1 முஸ்லீம் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் கிருஷ்ணா நகர்,பாணி சாகர்,தர்மநகர்,சந்திரபூர் போன்ற பகுதிகளில் மசூதிகள், கடைகள்,வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.பல இடங்களில் தீவைப்பு சம்பவம் கூட நடந்தது.
திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும்..
2
Mar 7, 2023 26 tweets 8 min read
தமிழ்நாட்டின் மீது ஏன் இத்தனை வன்மம் ?

23-10-22 ம் தேதி காலை 4 மணிக்கு கோவை,கோட்டை ஈஸவரன் கோவில் வாசலில் கார் ஒன்று வெடித்து சிதறுகிறது.
உடல்கருகி அங்கே இறந்து கிடந்தவர் ஜமேஷா முபீன் என அடையாளம் தெரிகிறது.
உடனடியாக @tnpoliceoffl விசாரணையை தொடங்குகிறது
1 அதே நாளில் உக்கடம் காவல் நிலையத்தில் FIR no. 207/2022 வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
பல குழுக்கள் அமைத்து விசாரணையை வேகப்படுத்துகிறது காவல்துறை.
இறந்தவருடைய வீட்டில் ISIS தீவிரவாத அமைப்பு தொடர்பான வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டதால்..
2
Mar 6, 2023 26 tweets 8 min read
தமிழ்நாட்டின் பச்சை துரோகி

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மார்ச்-1ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்பது குறித்து அதில் பல தலைவர்கள் பேசுகிறார்கள்
1 திமுக தலைவரின் பிறந்த நாள் விழா மேடையில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றதால்,,அதை வைத்து அரசியல் செய்ய பீகார் பிஜேபி முடிவெடுக்கிறது.
நல்லது..அரசியல் ரீதியாக அதை செய்வதில் எந்த தவறும் இல்லை.
ஆனால்,அவர்கள் அதற்காக கையிலெடுத்த விஷயம் 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு என்ற மாநிலத்தையே..
2
Dec 12, 2022 4 tweets 3 min read
Is fraud happening through manual bill in Union govt?

GST came into force on 1st July 2017.
Since then, manual bill has been completely banned in all govt departments. But for Union Govt related advertisement given on web channels, it has paid Rs Rs.63 crore through @CBC_MIB From July 1, 2015 to September 30, 2022, the Union Government has spent Rs.4777.27 crore rupees on advertising in print media, electronic media and web channels.

Rs 2187 crore has been spent on print media in the last 7 years
Dec 9, 2022 4 tweets 2 min read
#It_is_a_legal_corruption

A total of ₹ 676 crore of Electoral Bonds has been sold in the 23rd phase of sale of EBs.

Electoral Bonds worth ₹ 310 crore and ₹225 crore has been sold from Mumbai & Delhi branch respectively. Bonds worth ₹660 crore has been encashed Delhi
1 which is around 97.6% of total bonds sold thus indicating that these 97.6% of EBs has been encashed by national parties
Also 98.5% worth of Bonds sold is in the denomination of ₹1 crore
During 22nd Phase of sale of EBs (01st Oct to 10th Oct),EBs worth ₹ 545 crore were sold
2
Oct 25, 2022 4 tweets 3 min read
கடந்த ஜூலை 3ம் தேதி ஜம்முகாஷ்மீரில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட தலிப் ஹூசைன் என்ற தீவிரவாதியை கிராம மக்களே பிடித்துக்கொடுத்தனர்.

பிடிபட்டவன் LeTஅமைப்பின் கமாண்டர் மட்டுமல்ல BJP -ன் social Media incharge-ம் கூட..

ஆனால் இதைப் பற்றி நாட்டில் உள்ள எந்த மீடியாவும் பேசல 😊
1 இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தேடப்படும் நபரான Faizal Ahamad என்ற தீவிரவாதியும் கைதாகிறான்.
புல்வாமா வழக்கை NIA தான் விசாரித்து வருகிறது.
தலிப் உசேன் கைது வழக்கை விசாரணைக்கும் எடுக்கவில்லை.
ஆட்களை கஸ்டடியும் எடுக்கவில்லை.
எப்படி..சூப்பர்ல
2
Oct 23, 2022 7 tweets 1 min read
நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் இளம் பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் பலி

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

இறந்த பத்திரிகையாளார் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் பத்திரிகை ஊடகத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் முன்னேறி வந்த இளம் பத்திரிகையாளர் தென்காசி மாவட்டம் புளியங்குடி சேர்ந்த முத்துகிருஷ்ணன் விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று நிறைவு செய்து புதியதலைமுறையில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.
Oct 15, 2022 9 tweets 3 min read
1)
2022 ஏப்ரல் 12-ம் தேதி @PMOIndia நரேந்திரமோடி உலகத்திற்கே உணவு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று கூறினார்.
உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால்,,நாளையே விநியோகம் செய்யத்தொடங்குவோம் என்றும் அறிவித்தார்
2)
ஆனால்,
மே மாதம் 13-ம் தேதி வெங்காய விதைகள், கோதுமை ஏற்றுமதிக்கு தடை
மே மாதம் 25-ம் தேதி சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை
ஜூலை -6-ம் தேதி மைதா,ரவை,கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு..
செப்டம்பர் 9-ம் தேதி வேகவைத்த அரிசி மற்றும் உடைந்த அரிசியின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது
Oct 15, 2022 7 tweets 2 min read
1)
On April 12, 2022, PM @narendramodi said that India is ready to feed the world. He also announced that if the WTO gives permission, we will start distribution tomorrow
But,
Ban on export of wheat on May 13
Export of sugar was banned on May 25
2)
Ban on export of maida, semolina and wheat flour was imposed on July 17
Export of parboiled rice and broken rice was banned on September 9
For the first time in history, 20% GST has been announced on rice exports to other countries
Oct 14, 2022 4 tweets 2 min read
1)
நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் முப்படை வீரர்களுக்காக நிதி திரட்ட பாதுகாப்பு அமைச்சகம்
maabharatikesapoot.mod.gov.in என்ற Website தொடங்கியுள்ளது
திரு @rajnathsingh அறிமுகப்படுத்தினார்
மிகவும் நல்ல விஷயம்
ராணுவ வீரர்களுக்காக எவ்வளவு நிதி வேண்டுமானாலும் தரலாம்
ஆனால் ImageImage 2)
27-02-19 அன்று சொந்த நாட்டு எல்லைக்குள் Chopper-ல் பயணித்துக்கொண்டிருந்த போது, அந்த Chopper மீது Missile மூலமாக தாக்குதல் நடத்தி
Sqn Ldr Ninad
Sqn Ldr SiddharthVashisht
Sgt V Sahrawat
Sgt VK Pandey
Cpl PankajKumar
Cpl DeepakPandey என 6 IAF அதிகாரிகளை கொலை செய்தது யார்?
Sep 5, 2022 6 tweets 1 min read
மக்களின் எந்தவொரு பிரச்சனைகளுக்காகவும் எந்த காலத்திலும் ஒரே ஒரு வழக்கு கூட தொடுக்காத,நீதிமன்ற படியேறாத போலி தேசபக்தர்கள் கூட்டம்..
ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுக்க வேண்டியது தானே என்று எகத்தாளமாகவே பேசி வருகிறார்கள்..
1/
உண்மையில் ஹெராயின் பறிமுதலில் 68,200 kg காணாமல் போயிருக்கும் விவகாரம் ஒரு ஊடகவியலாளராக மக்கள் முன் வெளிப்படுத்தியதோடு என் கடமை முடிந்து விட்டது என்றே நினைத்தேன்
நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இவ் விவகாரத்தில் சமூக அக்கறையுள்ள அனைவரும் குரல் தரவேண்டும்
2/
Aug 30, 2022 51 tweets 15 min read
India's biggest drug scam
68200 kg of heroin is missing

The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight terrorism and prevent drug trafficking.
1 With regard to India,the MHA is taking various measures to prevent illegal drug trafficking under the slogan Drug Free India.NCB is the nodal agency for matters related to drug law enforcement in India, which takes action against drug trafficking.
NCB is the nodal agency
2
Jul 29, 2022 29 tweets 7 min read
Annamalai seeks NIA investigation in Fake passport issue: who is the target?

On April 19, 2022, one Sureskumar approached the Madurai Bench of Madras High Court (W.P.(MD)No.13544 of 2022) which Justice G R Swaminathan took it on file.
1 Image In the issue of fake passports, police had already confiscated the passport of Sureshkumar.
As his passport lapsed, he approached the Madurai branch of Passport office for renewal on April 19, 2022. Since police verification was denied..
2
Jul 27, 2022 42 tweets 7 min read
அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?

FAKE Passport விவாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் Passport போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்க வேண்டி காலக்கெடு நெருங்கியதால் இருந்ததால் 19.04.22 ம் தேதி Renewal-க்காக விண்ணப்பிக்கிறார்.
1 வழக்கு நிலுவையில் இருப்பதால் காவல்துறை Verification கோரிக்கையை நிராகரிக்கிறது.
அதன் காரணமாக சுரேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (W.P.(MD)No.13544 of 2022) ஒன்றை தொடர்கிறார்.
அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு நீதிபதி.G.R.S 27-07-2022 ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறார்
2
Jul 24, 2022 35 tweets 6 min read
டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?

தமிழக BJP தலைவர் அண்ணாமலை போலி Passport விவகாரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார்.

ஆனால் உண்மை நிலவரங்கள் என்ன ?
1/ ஆடைகளைப்பார்த்து அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் எனக்கூறும் ஒரு கட்சியின் மாநிலத்தலைவரான அண்ணாமலை,
தமிழக உளவுத்துறை தலைவர் மீது முன்வைத்திருக்கும் குற்றசாட்டு,
ஏன் அந்த அதிகாரியின் பெயர் ஏற்படுத்தும் எரிச்சலாக இருக்கக்கூடாது யோசித்துப்பாருங்கள் !
2/