பிறந்தது- ஈரோடு. பகுத்தறிவு பகலவன் பெரியார்மண்
Suspended ID @SathyaOffcial
#பெரியார்_திராவிடப்படை
Jul 13, 2023 • 5 tweets • 1 min read
படித்ததில் பிடித்தது:
விமானத்தினுள், விமானியின் அறையை சுத்தம் செய்யும் ஒரு பணியாள், விமானியின் காபினெட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,
"விமானத்தை பறக்க வைப்பது எப்படி?(தொகுதி 1)" என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை பார்த்தார்.
அவர் முதல் பக்கத்தைத் திறந்தார்:
"என்ஜினை ஆன் செய்ய, சிவப்பு பொத்தானை அழுத்தவும்" என்று இருந்தது. அவர் அவ்வாறே செய்தார், விமான இயந்திரம் இயங்க தொடங்கியது.
அவர் மகிழ்ச்சியுடன் அடுத்த பக்கத்தைத் திறந்தார்.
"விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்... "அவர் அவ்வாறே செய்தார்,
Jun 2, 2023 • 8 tweets • 2 min read
கடைசில தான் ட்விஸ்ட்:
ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்.
ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து, கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.
அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால்...
நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும்.
எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி துறவியை நாடினான்.
அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" ...
May 27, 2023 • 12 tweets • 4 min read
ஒரு காட்டில் பரம்பரை சொத்தில் தின்னு தின்னு அலுத்துப்போன புலி 🐅 ஒன்னு ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சுது
அங்கே ஒரு எறும்பு கொறைஞ்ச சம்பளத்தில் 🐜 வேலைக்கு சேந்துது .
அதுபாட்டுக்கு தெனம் வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு, சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும்.
புலியாருக்கு 🐅 சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.
எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது
ஒரு நாள் நடு ராத்திரியில் கழிவறையில் அமர்ந்திருக்கும் போது திடீர்ன்னு புலியாருக்கு 🐅 ஒரு ஐடியா தோணிச்சு
இந்த எறும்பு 🐜 தனியாவும் தன்னிச்சையாவும் வேலை செய்யுதே...
Apr 23, 2023 • 17 tweets • 5 min read
படித்ததில் பிடித்தது:-
பின்லாந்து கல்வி முறை உலகில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணங்கள் என்ன?
உலகின் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாகவும், உலகின் மகிழ்ச்சியான நாடாகவும், மிகத் தூய்மையான காற்றையும், சிறந்த சூழலையும் கொண்ட நாடாகவும் பின்லாந்து உள்ளது.
ஆரம்பத்தில் ஸ்வீடனின் ஒரு பகுதியாகவும் பின்னர் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகவும் இருந்த பின்லாந்து 1917-ல் சுதந்திரம் பெற்றது.
1995-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து 1999-ல் யூரோவை ஏற்றுக்கொண்டது.
இயற்கையான saunas, ரெயின்டீர்கள், Nokia மொபைல், சாண்டா கிளாஸ் கிராமம்...
Apr 21, 2023 • 12 tweets • 2 min read
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது.
கோடிக்கணக்கில் விலை.
அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது.
அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.
இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை.
Apr 20, 2023 • 7 tweets • 2 min read
படித்ததில் பிடித்தது:-
மூத்த குடிமக்கள் எப்பவுமே சற்று பொதுவாகவே தொண, தொண என்று ஏதாவது செய்ய வேண்டியவைகளை நினைவுபடுத்தி பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அது நமக்கு அதனை கேட்போருக்கு சற்றே அசௌகரியம் உண்டாக்கும்.
ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ???
*வயதாகும்போது அதிகம் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்*
*மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் *நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி
மூத்த குடிமக்கள் அதிகம் பேசினால் குறைந்தது *மூன்று நன்மைகள் உள்ளன.
Apr 18, 2023 • 12 tweets • 2 min read
இப்படி ஒரு நட்பா? உறவா ?
ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு...
ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த தீவு ஒரு பாலைவனம் போல இருந்தது.
அந்த இருவரும் மிகவும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு நல்ல சக்தி இருக்கிறது பார்ப்போம் என்று முடிவு செய்தனர்.
Apr 17, 2023 • 7 tweets • 3 min read
"எல்லாரும் கொஞ்சம் கவனமாக படிங்க"
*அந்தக் கா..ஆ..ஆ..லத்துல.....*
*அப்படின்னா ஒரு 30-35 வருஷத்துக்கு முன்னாடி..*
*ஒரு ஊர்ல ஒரு மக்கு பையன் இருந்தான் . அவன் பெயர் ஜக்கு.*
*க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் ஜக்கு.*
*படிப்புல எப்பவுமே முட்டை வாங்குற அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது.
சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்.
*சங்கடத்தோட அவனோட அம்மா அந்த ஊர்ல வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.*
Apr 3, 2023 • 8 tweets • 2 min read
"நோக்கியா" கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது. அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள் -
"நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம். "
இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர் மட்டும் அல்ல, அவருடைய மொத்த நிர்வாக குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர்.
நோக்கியா ஒரு உலகப் புகழ் பெற்ற மரியாதைக்குரிய நிறுவனம்.
தொழில்ரீதியாக அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.
Mar 18, 2023 • 14 tweets • 2 min read
ஜென் தத்துவம்
எப்போதெல்லாம் மனம் வெதும்பி தோல்வி பற்றி யோசிக்கிறேனோ அப்போதெல்லாம் ஜென் கதைகள் படிப்பேன். அதில் மிகவும் பிடித்தது அதில் வரும் தத்துவங்கள் மட்டுமே.
அதில் எனக்கு மிகவும் பிடித்த தத்துவம் : "உன்னை விட உயர்ந்தவர் இல்லை" - என்ற தத்துவம்.
இதற்கு ஒரு கதை இருக்கிறது :
அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார்.
அந்தக் கதை இதுதான்.
அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக இருந்தது.
Mar 2, 2023 • 14 tweets • 2 min read
மக்னா யானை என்றால் என்ன?
மக்னா யானை என்றால் கூறப்படும் பொதுவான கருத்தொன்று நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா எனப்படுகின்றது" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல்.
இந்தப் புரிதலில் முன்னோடியாக இருப்பவர்கள் காட்டில் வாழும் மக்கள்தான்.
காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதை காணலாம்.
Feb 26, 2023 • 7 tweets • 1 min read
படித்ததில் பிடித்தது:-
மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்.
ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான்.
“ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப் போல இருக்க வேண்டும்,
கோழியைப் போல இருக்க வேண்டும், உப்பைப் போல இருக்க வேண்டும், உன்னைப் போல இருக்க வேண்டும்” என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றான்.
“கொக்கு, ஒற்றைக் காலில் நீண்ட நேரம் பொறுமையாக நிற்கும்.
Feb 17, 2023 • 5 tweets • 1 min read
யார் முட்டாள்...
ஒரு சிறுவன் ஒரு முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்தான். அப்போது அந்த கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார் “இந்த உலகிலேயே இவன்தான் மிக முட்டாள் குழந்தையென்றும் .அதை இப்போது நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்றார்.
பின் அந்த கடைக்காரர் ஒரு கையில் 5 ரூபாய் நாணயத்தையும் மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு அந்த பையனை அழைத்து உனக்கு எது வேண்டும் என்று கேட்டார்?.
அந்தப் பையன் 2 ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான்.
Feb 15, 2023 • 4 tweets • 1 min read
❤️💕❤️ அன்பு ❤️💕❤️
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்.
ஏனென்று கேட்டபோது சொன்னாள்:
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது.
Feb 3, 2023 • 11 tweets • 2 min read
நண்பரின் பதிவு🌺
ஒரு நாள்
கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து
"தம்பி பக்கத்துல ஆள் வருதா?"
" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"
சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"
" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.
ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான்.
Jan 14, 2023 • 11 tweets • 2 min read
முழுமை.. அதாவது Perfection.. அப்படின்னா என்னா.. நிறையப் பேருக்கு அதில ஒரு தெளிவு இருப்பதில்லை. சரியாக புரிவதும் இல்லை.
ஒவ்வொருவரின் பார்வையிலும் முழுமைக்கு ஒரு அர்த்தம் உண்டு. இப்படி இருந்தால் முழுமை என்று சிலர் சில விஷயங்களை நினைக்கலாம்.
சிலருடைய பார்வையில் வேறு சில விஷயங்கள் இருந்தால் அதை முழுமை என்று அவர்கள் சொல்லலாம் என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொருவரின் பார்வையிலும் முழுமை வேறு படுகிறது, மாறுபடுகிறது.
வாழ்க்கையில் யாருமே முழுமையாக இருக்க முடியாது. எல்லாமே சரி என்பதற்கு வாய்ப்பே இல்லை.
Jan 13, 2023 • 5 tweets • 1 min read
குருடன் கையில் விளக்கு!
காரிருள் படர்ந்திருக்கும் இராத்திரி வேளையில் ஒரு குருடன் தன் கையில் விளக்கைப் பிடித்து கொண்டு போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் நடந்து போய்க் கொண்டிருந்தான்.
வழியில் அவனைப் பார்த்தவர்கள் எல்லாம் ஏளனமாய் தங்கள் கைகளை மடக்கித் தலையில் வைத்து நெட்டி முறித்துக்கொண்டே, “அடே குருட்டுக் கழுதை உன் அழகுக்கு லாந்தர் விளக்கு ஒன்றுதான் குறைவாக இருந்ததோ?” என்றார்கள்.
Jan 12, 2023 • 6 tweets • 1 min read
ஒரு கருவுற்ற மான்,
தன் மகவை ஈனும் ஒரு தருணம்.
அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.
அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.
இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.
அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்?
Jan 11, 2023 • 12 tweets • 2 min read
''தாத்தா, எங்க டீச்சர் இன்னிக்கும் ''உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியலை. உனக்கு தெரியுமா. சொல்லு'' என் தாத்தாவை கேட்டான்.
''அடே பயலே, எனக்கு தெரிந்த ஏழு அதிசயங்கள் வேறே . புத்தகங்களில் இல்லாதது. தனியாக அதற்கு படமும் கிடையாது'' என்றேன்.
''அது என்ன தாத்தா அப்படிப்பட்ட 7 அதிசயங்கள்?
''உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்து தானே ஆகவேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்.
1. உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில், அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம்.
Jan 10, 2023 • 6 tweets • 1 min read
கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...
மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம்,
Jan 9, 2023 • 9 tweets • 2 min read
படித்ததில் பிடித்தது:-
எளிமையம் (Minimalism மினிமலிசம்)
மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.
மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் தேவையான அளவில் கொண்டு வாழுதல்.
உதாரணமாக ஏழு செட் ஆடைகள் இருந்தால் ஒரு வாரத்தை கழிக்கலாம். வார இறுதியில் அதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
இந்த அடிப்படை ஆடைகள் இல்லாமல் பெரும் நிகழ்ச்சிக்குச் செல்ல ஒரு உயர்ந்த ரக ஆடையும் இரவை கழிக்க இரண்டு மிக சாதாரணமான ஆடையும் வைத்திருந்தால் போதுமானது.