/1
கலைஞர் சட்டமன்ற தேர்தலில் தோல்வியையே சந்திக்காதவர் என்பார்கள். அதிலும் 13 முறை தொடர்ந்து எம் எல் ஏவாக இருந்திருந்தார் என்பார்கள்...!
ஆனால் அவர் வென்றது பதினான்கு முறை..! அதிலும் அந்த ஒரு கூடுதல் வெற்றியை அவர் ஈட்டியது எம் ஜி ஆரை தோற்கடித்து பெற்ற வெற்றி..!
/2
மயிலாடுதுறை தொகுதி திமுக கோட்டை. அதை சில காரணங்களுக்காக எப்படியாவது வென்றெடுக்க வேண்டுமென்பது MGRஇன் கனவு. 77 & 80 இரண்டு தேர்தலிலுமே திமுகவின் கிட்டப்பா தான் வென்றார். நொந்து போன MGR ஒரு கட்டத்தில் எப்படியோ கிட்டப்பாவை வளைத்து அதிமுகவுக்கு இழுத்து விட்டார்.
Oct 4, 2018 • 10 tweets • 1 min read
விளம்பரமே இல்லாம சேவை செய்யறதுன்னா என்னன்னு தெரியுமா?!
ஒரு மனிதர் முதல்வராக இருக்கிறார். அவரிடம் ஒரு மருத்துவர் வந்து, வீடியோ ஒன்றை காட்டுகிறார். அதில் இரண்டு குழந்தைகள்... ஒன்று காதும் கேளாமல், வாயும் பேச இயலாமல் சைகையில் ஏதேதோ செய்கிறது...
இன்னொரு குழந்தை அற்புதமாக பேசுகின்றது, எதிரில் இருப்பவர் பேசுவதைக் கேட்டு பதில் சொல்கிறது!
முதல்வர் மருத்துவரிடம் இது என்ன என்று கேட்கிறார்...
இரண்டுமே பிறவியில் காது கேளாத, வாய் பேச முடியாமல் பிறந்தவை என்கிறார்!
பிறகு எப்படி ஒரு குழந்தை மட்டும் கேட்கிறது, பேசுகிறது? என்கிறார்!