இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய- வைதீக கட்டுக்கதைகளை
2/4
Jun 17, 2020 • 4 tweets • 2 min read
யாரும் அச்சப்பட வேண்டாம்!!
ஆனால் விழிப்புணர்வோடு இருப்போம்...
”மதுரையில் செயல்படும் பிரபலமான தனியார் மருத்துவமனையின் கொரோனா வார்டில் படுக்கைகள் நிரம்பிவிட்டன” என்று அதிகாலையிலேயே நண்பர் ஒருவர் சற்றே பதறிய குரலில் தொலைபேசியில் கூறினார். #CoronaUpdatesInIndia #COVIDー19
”அப்படியா?” என்று கேட்டேன்.
”ஐந்து லட்சம் கொடுத்து ட்ரீட்மெண்ட் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கே படுக்கையில்லையா?” என்று திரும்பவும் கேட்டார்.
அவருக்கான பதிலை சொல்லிவிட்டேன். ஆனால் அந்தக் கேள்வி பகிரப்பட வேண்டிய ஒன்று என்று தோன்றியதால் அதனை இங்கே பதிவுசெய்கிறேன்.
Feb 1, 2020 • 7 tweets • 2 min read
“மண் பறித்து உண்ணேல்”
நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார்.
#BudgetSession2020 #பட்ஜெட்2020
"சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார்.
வேத பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்