தமிழச்சி Profile picture
Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
20 Aug
தலைவர் கலைஞர் மீதும், கழகத்தின் மீதும் மாறாத விசுவாசமும், தீராப் பற்றும் கொண்ட மூத்த முன்னோடி, மேனாள் தமிழக அமைச்சரும்,
கழகத்தின் செய்தி தொடர்பாளர், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான, எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய,

1/7
அத்தா ஏ.ரகுமான்கான் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டுச் செயலற்று அமர்ந்திருக்கிறேன்.
என் தந்தையின் மனமொத்த நண்பராக எங்கள் குடும்பத்தில் ஒன்றானவர்.
அரசினர் தோட்டத்தில் எங்களது வீட்டின் பின்புறத்தில் அவரது வீடு என்பதால் சுக, துக்கங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து,

2/7
இன்று அடுத்த தலைமுறை வரை தொடர்கின்ற அற்புதமான உறவானவர். அவரது அன்பு மனைவி, எனக்கு உடன்பிறவாத ‘நிலவர் அக்கா’.
‘குட்லி’ எனப் பாசத்தோடு அவர் குடும்பத்தார் அழைக்கும் என் மூத்த மகளுக்கு, அன்பான’ பாய் தாத்தா’.

3/7
Read 7 tweets