உண்மை கசக்கும் Profile picture
Dr. R.Venkatraghavan | Belongs to the Dravidian Stock | Political analyst | Writer | Traveller | #MKStalinEraBegins #Kalaignar #Anna #Periyar #Kumbakonam #TN68
Dec 20, 2023 9 tweets 2 min read
#கலைஞர்_என்ன_செய்தார்

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கி கொண்டே இருந்தார்

பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார்

பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்

ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்

லேக் ஏரியாவை வள்ளுவர் கோட்டம் ஆக்கினார்

வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார் Image டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார்.

மவுண்ட் ரோட்டை அண்ணா சாலை ஆக்கினார்.

கடற்கரை சாலையில் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரில் கண்ணகி சிலை ஸ்டாப்பிங் என்கிறார் கண்டக்டர்.

காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்.
Oct 26, 2023 4 tweets 1 min read
கேள்வி: 1967-76 ஆட்சிக் காலத்தில் #திமுக ஏன் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டவில்லை.?

பதில்: 1970-களில் மத்திய அரசு ஒரு விதி கொண்டு வந்தது.

அதாவது, இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே உள்ள தூரம் 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். Image மருத்துவ வசதிகள் ஒரு சில நகரங்களில் குவியாமல் பல நகரங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விதி உருவானது.

அந்த காலத்தில் தமிழகத்தில் பின்வரும் நகரங்களில் மருத்துவ கல்லூரிகள் இருந்தன.

சென்னை - 3 கல்லூரிகள்
4. செங்கல்பட்டு
5. சேலம்
6. கோவை
7. தஞ்சாவூர்
8. மதுரை
9. நெல்லை
Jul 12, 2023 4 tweets 1 min read
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பெரியாரிடம் ஒரு பிராமணர் கேட்கிறார்.

"எண்ணிக்கையில் 2% உள்ள பிராமணர்களை எதிர்க்கிறீர்களே. இது நியாயமா?

பெரியார்: உங்களுக்கு சந்தைக்கு போகும் பழக்கம் உண்டா?

ஐயர்: போவேன்

பெரியார்:சந்தைல ஆடு கோழினு வாங்குவீங்களா? ஐயர்: இல்லைங்க நாங்க சைவம் காய்கறி மட்டும் தான் வாங்குவேன்

பெரியார்: பூண்டு வெங்காயம் வாங்குவிங்களா?

ஐயர்: இல்லைங்க அது எங்களுக்கு ஆகாது!

பெரியார்: அப்படினா குறைந்த காசுதான் எடுத்துட்டு போவிங்க! அந்த பணத்தை சுருக்கு பைல போட்டு வெளிய தொங்கவிட்டு போவிங்களா? அப்படித்தானே?"
Jul 11, 2023 17 tweets 2 min read
திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே! தேசியவாதிகளே! தமிழ் தேசிய குஞ்சுகளே! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?

1. 1895-ல் சென்னையில் நடைபெற்ற நாடக விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.? 2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மாகாந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் என்பதும், 1925ல் #பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பின்தான் அவர் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பதுதெரியுமா.?
Apr 26, 2023 18 tweets 6 min read
#சுற்றுலா
மனதை கொள்ளை கொள்ளும் மாவட்டமாக இருக்கும் தேனி அதிகம் செலவில்லாத சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் தான். தேனியில் மலைகள், அருவிகள், ஆன்மீக இடங்கள் என பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் தேனியை அடைவது எளிது. தேனியை பற்றி பார்ப்போம் Image மேகமலை :
பச்சை பசேல் என கடல் மட்டத்திலிருந்து 1,500 மீ. உயரத்தில் உள்ள மேகமலைக்கு செல்ல தேனியிலிருந்து கார் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மற்றொரு வழியாக சின்னமனூரில் இருந்து, அதிகாலை 4.30, காலை 6, மற்றும் காலை 10 மணிக்கு புறப்படும் பேருந்து, தேனியிலிருந்தும் பேருந்தில் செல்லலாம் Image
Apr 25, 2023 4 tweets 1 min read
இந்த புகைப்படங்கள் நினைவிருக்கின்றதா?
கலைஞர் 2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அது கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் Professional கோர்ஸ் அனைத்திற்கும் நுழைவுதேர்வு கிடையாது என்று அறிக்கை அளிக்கப்பட்டது(மருத்துவம், பொறியியல் படிப்புகள் உட்பட) Image இந்த நுழைவு தேர்வு இல்லாமையால் என்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்று சர்வே நடத்தப்பட்டது(அதாவது 2007 முதல் 2015 வரை) அதில் பல ஆச்சரியங்கள் சமூக நீதியின் வெற்றி எப்படி MBC, SC, ST சமூகத்தில் இருந்து பல முதல் தலைமுறை பட்டதாரிகள் சாதித்து உள்ளார்கள் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
Apr 18, 2023 11 tweets 3 min read
கவனம் செலுத்தும் திமுக. மகிழும் கைவினைஞர்கள்

தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது

🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
Apr 17, 2023 6 tweets 2 min read
கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க... ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு. Image ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
Apr 17, 2023 7 tweets 2 min read
ராத்திரி ஆனா போதுமே.. சென்னையில் இரவு நேரங்களில் பாலங்களை மூடுவது ஏன் என தெரியாம பல பேர் குழம்பி போய் இருப்போம். நானும் அதில் ஒருவன். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரிதத போது பல காரணங்கள் வெளிவந்துள்ளன. பாலங்களை மூடுவது ஏன் தெரியுமா? Image சென்னையில பல்வேறு பகுதிகளில் அண்ணா மேம்பாலம், நேப்பியர் பாலம், அடையாறு பாலம், வடபழனி பாலம், தி.நகரில் பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், லூகாஸ் என்று ஏகப்பட்ட பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைஞ்சு இருக்கு.
Apr 17, 2023 8 tweets 3 min read
உழவர் நலன் காக்கும் திமுக அரசு - 4

#திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளிலும் செய்து வரும் சாதனைகள் அளப்பரியது. அதிலும் வேளாண் தொழிலில் திமுக அரசு மேற்கொண்டு வரும் சாதனைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன

1/8 Image வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

➡️பாலூர் பலா ஆராய்ச்சி மையம்

✅பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம்

👉🏼கிள்ளிக்குளம் பனை ஆராய்ச்சி மையம்

➡️கோயம்புத்தூர் பூச்சியியல் அருங்காட்சியகத்தை மேம்படுத்த திட்டம்

2/8
Apr 17, 2023 6 tweets 4 min read
ஈழமும் கலைஞரும்.....

#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை.
1/6 Image 1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்)
2/6 Image
Apr 16, 2023 4 tweets 1 min read
இப்போதெல்லாம் திருமண அழைப்பிதழ்களிலேயே 'தயவுசெய்து அன்பளிப்புகளை தவிர்க்கவும்' என்று சகஜமாக போட துவங்கிவிட்டோம்

குழந்தைகளுக்கே யாராவது ஏதாவது அன்பளிப்பாக கொடுத்தால் வாங்க கூடாது என்று சொல்லி பழக்குகிறோம்

அப்படியிருக்க
உங்கள் வீட்டு வாடகையையும், மாதாந்திர செலவுகளையும் உங்கள் நண்பர்கள் பார்த்துக்கொள்ள (ஒரு வேளை நிஜமாகவே) முன்வந்தாலும்
அதை எப்படி உங்களால் ஏற்க முடியும்?

நீ ஏன் என் செலவுகளை ஏற்க வேண்டும் என்றுதானே முதல் கேள்வி கேட்பீர்கள்?

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒருவர் அப்படி செலவுகளை ஏற்க முன்வந்தால் அவரை அபூர்வமான வேற்று கிரகத்து
Apr 16, 2023 8 tweets 3 min read
🖤❤️உழவர் நலன் காக்கும் திமுக அரசு – 3🖤❤️

வேளாண் தொழில் செழித்தாலே அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும். எனவே தான் @mkstalin வேளாண் தொழிலில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்

அனைத்து தரப்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது #திமுக அரசு
1/8
அந்த வகையில்
🌄 ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கி எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ‘எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்’

➡️ நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்திட 12 கோடி மதிப்பீட்டில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’
2/8
Apr 16, 2023 6 tweets 3 min read
🖤❤️.உழவர் நலன் காக்கும் திமுக அரசு - 2

#திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொலைநோக்குப் பார்வையுடன், நீண்ட கால திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் @mkstalin

1/6
@IlovemyNOAH2019 🌄 சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறுதானிய இயக்கம்

👉🏼 காய்கறி மற்றும் கீரை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கும் திட்டம்

✅ ட்ரோன்கள் மூலம் இடுபொருட்களை வழங்கும் திட்டம்.

2/6
Mar 26, 2023 7 tweets 2 min read
ஒலிம்பிக்கே இலக்கு.. புதுப் பாய்ச்சலில் விளையாட்டுத்துறை🖤❤️

தமிழ்நாட்டின் ஒப்பற்ற இளைய சமுதாயத்தின் நலன் ஒன்றே இந்த அரசின் தலையாய கொள்கை என்று செயலாற்றி வருகின்றார் முதலமைச்சர் @mkstalin

தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகளாவிய போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. @Udhaystalin

🌄 200 நாடுகள், 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் என மிகப் பிரம்மாண்டமாக இந்தியாவிலேயே முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்

👉🏼 மாமல்லபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழா
Mar 25, 2023 12 tweets 3 min read
🐕🐕🐕 அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்!

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது?

இந்த உலகில் அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை? சாலையோர கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என ஏக்கத்துடன் பார்த்து ஏன் இடையூறு செய்கிறது?

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போது அவன் மட்டும் வரவில்லை. தனக்கு பயன்படக்கூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய
Mar 25, 2023 4 tweets 1 min read
🖤❤️கூட்டுறவே நாட்டுயர்வு🖤❤️

கூட்டுறவில் சமத்துவம் என்ற உயர்ந்த கொள்கையோடு செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 🌄 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை எளிய மக்கள் அடகு வைத்துள்ள 5 பவுன் தங்க நகைகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

👉🏼 இத்திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 16 லட்சம் பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Mar 24, 2023 25 tweets 3 min read
கலைஞர் பெயரைக் கேட்டாலே மோசமானவர், ஊழல்வாதி, மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறிவந்தவர் என்றெல்லாம் தோன்றுகிறதா? உங்கள் தப்பில்லை. கலைஞரின் தப்புதான். நிற்க.

வனவாசம், மனவாசம் என கண்ணதாசன் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் தன்னைத்தானே "அவன் அவன்" எனக் குறிப்பிட்டிருப்பார். அதை முன்னுரையில் தெளிவாக சொல்லியும் இருப்பார். ஆனாலும் வனவாசத்தில் கண்ணதாசன் கிசுகிசு பாணியில் கலைஞரைத்தான் குறிப்பிடுகிறார் என இன்னமும் பலர், கலைஞரின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அந்தப் புத்தகத்தை ஒரு ஆதாரமாகத் தூக்கிக் கொண்டு வருவார்கள்.
Mar 24, 2023 5 tweets 1 min read
சூழலியல் பாதுகாப்பில் திமுக அரசு

ஒரு அரசு மக்களோடு மாநிலத்தின் இயற்கை வளத்தையும் காப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதில் இந்தியாவின் அத்தனை மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin 👉🏼திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு வன உயிரின சரணாலயங்களும், அருகி வரும் உயிரினங்களுக்கான காப்பகங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

✅இந்தியாவிலேயே முதல் முறையாக 👇🏼

➡️கடவூர் தேவாங்கு சரணாலயம்

🦭 மன்னார் வளைகுடா கடற்பசு பாதுகாப்பகம்

இது தவிர
🐘அகத்தியர் மலை யானைகள் காப்பகம்
Mar 18, 2023 5 tweets 1 min read
🖤❤️இன்னுயிர் காக்கும் திராவிட மாடல் அரசு🖤❤️

சொன்னதைச் செய்வது மட்டுமல்ல. சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம் என்பது தான் @mkstalin தாரக மந்திரம்.

தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை என்றாலும் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது இன்னுயிர் காப்போம் திட்டம்*. ✅சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் – 48 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉🏼விபத்தில் சிக்கியவர்களின் முதல் 48 மணிநேர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு
👉🏼இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் 683
Mar 17, 2023 8 tweets 2 min read
முதல்வருக்கு தெரிந்தே தான் நடக்கின்றதா?இயற்கைவழி வேளாண்மைக்கான ‘அங்கக வேளாண்மைக் கொள்கை’ தமிழ்நாடு வேளாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் தான் தமிழை தாழ்த்திட எவ்வளவு மெனக்கெடல். குழுவில் இருந்த சங்கி யார்? எல்லாவற்றிலும் சங்கிகளை வைத்து ஆட்சி செய்கிறதா திமுக? 'அங்ககம்’ என்கிற வடமொழிச் சொல் இந்த அறிக்கையின் தலைப்பிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு உழவர் அமைப்புகள், தமிழ்ப் பற்றாளர்கள் ‘உயிர்ம வேளாண்மை’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்திவருகின்றனர். தமிழ்ப் பற்றுக் கொண்டதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு எப்படி கோட்டை விட்டது?