V.Senthilbalaji Profile picture
Minister for Electricity, Prohibition and Excise, Government of Tamilnadu | MLA from Karur | #DMK - Karur District Secretary |
Oct 4, 2022 5 tweets 1 min read
ஒன்றிய அரசு 2022-23-ஆம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து, @drramadoss (1/5) 6 லட்சம் டன்கள் நிலக்கரியை, டன் ஒன்றுக்கு 143 டாலர் (5% GST உட்பட) என்ற அளவில் இறக்குமதி செய்து உத்தரவு வழங்கியது. முதல் காலாண்டில் எஞ்சிய 1.3 லட்சம் டன்கள் நிலக்கரியை, ஒன்றிய அரசின் மூலம் டன் ஒன்றுக்கு 203 டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்து தர கேட்டுக்கொண்டது. (2/5)
Jul 18, 2022 16 tweets 7 min read
சரியான திட்டமிடும் திறனில்லாத கடந்த அதிமுக அரசு நம் மாநிலத்தின் கஜானாவை காலியாக்கியதோடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடன் சுமையால் தள்ளாட வைத்துவிட்டது. 2011 வரை 43,493 கோடியாக இருந்த மின் வாரியத்தின் கடன் 2021ல் அதிமுக ஆட்சி முடியும் போது 1,59,823 கோடியாக உயர்ந்திருக்கிறது. (1) 2011ல் ரூ. 4,588கோடியாக இருந்த வட்டி சுமை, அதிமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தினால், 2021ல் ரூ. 16,511 கோடியாக உயர்ந்திருக்கிறது. (2)
Oct 21, 2021 5 tweets 1 min read
1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு திரு. அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOனால் 30/3/2012 அன்று (1/5) LANCO நிறுவனத்திற்கு Original proposal வழங்கி, பின்னர் 27/12/2014 அன்று LoA (Letter of Award) வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ. 1700 கோடி செலவாகி, குறைந்த பணிகளே முடிந்த நிலையில், LANCO நிறுவனம் insolvency ஆகிறது. As is where is என்ற அடிப்படையில், எடப்பாடி அரசு 2/3/2019 அன்று (2/5)
Oct 20, 2021 4 tweets 1 min read
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், (1/4) All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். (2/4)
Jul 31, 2021 5 tweets 1 min read
மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது.

1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது)
2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது) (1/5) 3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம்.

இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது (2/5)
Jul 12, 2021 7 tweets 2 min read
தன்னை ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக காட்டிக்கொள்ள விழையும் @KPMunusamy, இல்லை, பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS தோள்களில் குழந்தை போல மாறி மாறி சவாரி செய்யும் பேபி முனுசாமி, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். (1/7) மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் உண்டான விளைவுகள் என்ன என்பதை பலமுறை புள்ளி விவரங்களுடன் விளக்கிவிட்டேன். அப்போதெல்லாம் மூளையை முதுகு பக்கமும், முகத்தை மூடின கதவு பக்கமும் வைத்திருந்திருந்தீர்களோ? (2/7)
Jun 30, 2021 5 tweets 2 min read
13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த @EPSTamilNadu, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். (1/5) முதலில் @EPSTamilNadu 'யின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். (2/5)
Jun 21, 2021 4 tweets 1 min read
மாநிலத்திலுள்ள அனைத்து மின்‌ நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான‌ நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின்‌ தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி (1/n) நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைக்கப்படும். (2/n)
May 18, 2020 6 tweets 2 min read
6,95,697 மக்கள் ( 63%) வாக்களித்து வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி @jothims அவர்கள், 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றிய குழு உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, ( 1/6) கடின உழைப்பால் இன்று நாடாளுமன்றத்திற்க்கு சென்றவர். விவசாய குடும்பத்தில் பிறந்து எளிய முறையில் வாழ்ந்து மக்களின் செல்வாக்கை பெற்ற S.ஜோதிமணி மீது, News 7 தொலைகாட்சி விவாதத்தில் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ள கரு.நாகராஜன் அவர்களின் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது. கொரோனோ ( 2/6)