பூதம் Profile picture
39 subscribers
Jan 10 23 tweets 7 min read
பக்தி இலக்கியங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாமே குப்பைன்னு பெரியார் சொல்லிட்டாருன்னு நேத்து சீமான் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிட்டு அழுதான். அதனால, ஒரு சில நாயன்மார்கள் பத்தி இந்த த்ரெட்ல பார்ப்போம்.

முதலில் பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் (1/n) Image சிவன் மாறுவேசத்துல சிறுத்தொண்ட நாயனார் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்தாராம். என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டதுக்கு ஒரு சின்ன பையனை அவன் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வெட்டி கறி சமைச்சு கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னு சிவன் சொன்னாராம் Image
Oct 29, 2024 4 tweets 2 min read
புலி படத்தில் நடிப்பதற்காக கணக்கில் காட்டப்படாத 15 கோடி ரூபாய் பணத்தை வருமானமாக பெற்றதாக நடிகர் விஜய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வருமான வரி சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து அவர் இந்த வாக்குமூலத்தை அளித்தார்

Link itat.gov.in/public/files/u…Image
Image
வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதம் காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் Image
Image
Apr 17, 2024 4 tweets 2 min read
நூல் விலை உயர்வால் திருப்பூரில் மூடப்பட்ட நிறுவனங்கள்

பருத்தி இறக்குமதிக்கு மோடி அரசு விதித்த 11% வரி, பருத்தி ஏற்றுமதியை தடை செய்யாதது, பருத்தியை வாங்கி வியாபாரிகளுக்கு விற்று பதுக்கலுக்கு வழி செய்தது போன்றவைதான் விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவன உரிமையாளர்கள் கூறுகிறார்கள் இந்தியாவில் பருத்தி அதிகம் உற்பத்தி ஆவது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில். ஆகவே பருத்தி விலை உயர்ந்தால் அந்த மாநில விவசாயிகளுக்கு லாபம். ஆனால், திருப்பூர் நிறுவனங்களுக்கு இழப்பு. தேர்தல் நெருங்கியதால் மக்களை ஏமாற்ற 19.02.2024 அன்று இறக்குமதி வரியை நீக்கினார். Image
Jan 22, 2024 12 tweets 4 min read
18+

இந்துக்களாகிய நாம் அனைவரும் வேதம் கற்பது மிக அவசியம். ஆகவே இன்று வேதத்தில் உள்ள அசுவமேத யாக மந்திரங்களை படிப்போம்

இந்த யாகம் செய்யும் போது அரசன் இருக்க கூடாது. ராணி, குதிரை, புரோகிதர் 😉 மட்டுமே இருக்க வேண்டும்

முதலில் ராணியையும் குதிரையையும் பட்டாடையால் மூட வேண்டும் Image அழகிய அல்குலையுடையோய்! சிறந்த சேலை தரித்தோய்! நீயும் குதிரையும் சுவர்க்கம் போன்ற இந்த இடத்தில் பட்டு ஆடையால் மூடிக்கொள்வீர்களாக.

கர்ப்பம் தரும் குதிரையே! கர்ப்பம் தாங்கும் இராணியாகிய நான் உனக்கு நேர்முகமாய் வந்திருக்கின்றேன். நீயும் எனக்கு நேர்முகமாய் இருந்து கொள்வாயாக Image
Sep 7, 2023 4 tweets 2 min read
விஸ்வகர்மா திட்டத்தை பத்தி இப்பத்தான் படிச்சேன். அதுல நாம கவனிக்க வேண்டிய பகுதி இதுதான்

"...family-based traditional trades"

18 வயது நிரம்பிய ஆணோ பெண்ணோ கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக தங்கள் குலத்தொழிலை செய்தால் அரசு உதவி கிடைக்குமாம்!

Link pmvishwakarma.gov.in/FileHandling/V…

Image
Image
சரி... எந்த தொழிலை செய்தாலும் அரசு உதவி கிடைக்குமா என்றால் இல்லை.

முடி வெட்டுவது, செருப்பு தைப்பது, துணி வெளுப்பது உள்ளிட்ட 18 வகையான தொழில்களை செய்தால் மட்டுமே அரசு உதவி கிடைக்கும்.
Image
Image
Oct 11, 2022 4 tweets 2 min read
நூலிபான்கள் பிடியில் இருந்து வடலூர் சத்திய ஞான சபையை மீட்க நடந்த வழக்கு.

வள்ளலாரால் 18.07.1872 அன்று வகுக்கப்பட்ட விதிகளின்படி வழிபாடு நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

indiankanoon.org/doc/1715882/ ஒரு அமைப்பு நூலிபான்கள் கைக்கு போனா என்னவெல்லாம் நடக்கும்னு இதை பார்த்து புரிஞ்சிக்கலாம். அப்படியே அவனுங்க வசதிக்கு மாத்திடுவானுங்க. ஒரிஜினலா அங்க என்ன இருந்ததுன்னு எல்லாருக்கும் மறந்து போயிடும்.
Oct 8, 2022 4 tweets 2 min read
"ஆண்களை பார்த்த உடனேயே பெண்களின் பிறப்புறுப்பில் வழவழப்பான திரவம் கசியும்"

- சிவபுராணம், பாகம் 3, உமா சம்ஹிதை, அத்தியாயம் 24, சுலோகம் 30

மொழிபெயர்த்தவர் JL சாஸ்திரி

archive.org/details/SivaPu… எத்தனை ஆண்கள் கிடைத்தாலும் பெண்கள் திருப்தி அடைவதில்லை என்று சிவபுராணம் கூறுகிறது

பாகம் 3, உமா சம்ஹிதை, 24ஆம் அத்தியாயம், 29ஆம் சுலோகத்தில் இந்த வரி இருக்கிறது

Link archive.org/details/SivaPu…
Sep 24, 2022 18 tweets 9 min read
வர்ணம் பிறப்பால் வருவதல்ல... குணத்தால் வருவதுன்னு உருட்டுவாங்க. நம்பாதீங்க! பச்சை பொய்!

அது பிறப்பால்தான் என்பதற்கு சிம்பிள் லாஜிக் இதுதான்

உபநயனம் என்கிற பூணூல் சடங்கு பிராமண சிறுவர்களுக்கு 8 வயதிலும், சத்திரியர்களுக்கு 11 வயதிலும், வைசியர்களுக்கு 12 வயதிலும் செய்யணும் (1/n) சூத்திர சிறுவர்களுக்கு எந்த வயசுல பண்ணனும்னு எங்கேயும் குறிப்பு இல்ல. ஏன்னா சூத்திரர்களுக்கு உபநயனம் கிடையாது!

எல்லா தர்ம சாஸ்திரங்களிலும் இந்த சட்டம் இருக்கு.

இது ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்

srimatham.com/uploads/5/5/4/…
Sep 18, 2022 6 tweets 3 min read
பெண்கள் விபச்சார தோஷமுள்ளவர்கள்னு மனு அவராகவே சொல்லல... வேதம் அப்படி சொல்லுதுன்னு சொல்றாரு. அது இன்னும் அசிங்கம்.

"மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன" - இதுதான் மனு சொல்றது ("சுருதி" என்றால் வேதம்) இந்திய ஒன்றிய அரசு வலைத்தளத்துல வலைத்தளத்துல இருக்கிற மனுஸ்ம்ரிதி நூல் "proneness to unchastity" என்கிற பதத்தை பயன்படுத்துகிறது. அதாவது பெண்கள் கற்பு நிலை இழக்க அதிக வாய்ப்புள்ளவர்கள்னு சொல்லுது

அப்படி வேதத்துல என்னதான் சொல்லியிருக்குன்னு அடுத்த சுலோகமான 9.20ல வருது
Sep 13, 2022 5 tweets 3 min read
பிரம்ம சூத்திரம்

சூத்திரற்கு சமீபத்தில் அத்தியயனம் (வேதம் ஓதல்) செய்ய ஒண்ணாது. "வேதத்தை கேட்குங்கால் உருக்கிய ஈயத்தினாலும் மெழுகினாலும் நிறைக்க. வேதங்களை உச்சரிக்குங்கால் நாவை இரண்டாக சேதித்தல் (வெட்ட) வேண்டும். மனசிற்றரித்து (மனப்பாடம் செய்து) வைத்திருந்தால்... (1/5) ...சரீரம் பேதிக்கப்படல் (துண்டாக்க) வேண்டும்" என்னும் ஸ்ம்ரிதியானது வேதத்தை சிரவணம் செய்யும் (கேட்கும்) சூத்திரற்கு தண்டம் விதிக்கின்றது.

ஸ்ருதி, ஸ்ம்ரிதிகளினால் சூத்திரர் சமீபத்தில் அத்தியயனம் முதலியன செய்வது நிஷேதிக்க படுகின்றமையின் (தடை செய்யப்பட்டதால்) அவர்க்கு... (2/5)
Sep 12, 2022 4 tweets 3 min read
"The Dravidas have become degraded into the status of Sudras through the wrath of Brahmanas"

The Mahabharata book on your party website says so
library.bjp.org/jspui/bitstrea…

The Mahabharata book on Indian culture website says "Sudras should serve the Brahmanas and should not study" The Mahabharata book on the BJP website says Dravidas are Shudras. The Ramayana book on the BJP website says Shudras are the lowest of the four castes.

library.bjp.org/jspui/bitstrea…
Aug 28, 2022 4 tweets 2 min read
தலித்துகள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவர்தான் இந்த பூரி சங்கராச்சாரியார். இதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

www-naidunia-com.translate.goog/national-ban-o… 2006ஆம் ஆண்டு வரைக்கும் பூரி ஜகந்நாதர் கோவிலில் தலித்துகள் நுழைய முடியாத நிலைதான் இருந்தது. கோவில் சுவற்றில் இருக்கும் ஒன்பது துளைகள் வழியாகத்தான் தலித்துகள் வழிபட்டு வந்தனர்.

thehindu.com/news/national/…
Aug 17, 2022 4 tweets 2 min read
குலக்கல்வி திட்டத்தை ஆதரித்து ராஜகோபாலாச்சாரி பேசியது

“...அந்தந்த சாதிகள் இருப்பதால்தான் மாடு மேய்த்தல், செருப்பு தைத்தல், துப்புரவு போன்ற வேலைகள் ஒழுங்காக நடைபெறுகிறது…"

Source: Speeches of C. Rajagopalachari

archive.org/details/in.ern… "இந்த அமைப்பை பைத்தியக்காரர்கள்தான் மாற்ற நினைப்பார்கள். குழந்தைகளை தங்கள் குடும்ப தொழில் பயிற்சியில் இருந்து விலக்கி முழு நேரமும் அவர்களை பள்ளியிலேயே இருக்க வைப்பது சரியாகுமா?"

- ராஜகோபாலாச்சாரி
Nov 23, 2021 5 tweets 1 min read
2011 கணக்கீட்டின் படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை - 7.2 கோடி
உத்திர பிரதேசத்தின் மக்கள் தொகை - 19.98 கோடி. அதாவது 2.75 மடங்கு

வரி வருமானத்தில் தமிழ்நாட்டின் பங்கு - 3878 கோடிகள்
உத்திர பிரதேசத்தின் பங்கு - 17056 கோடிகள். அதாவது 4.4 மடங்கு பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை - 10.4 கோடி. தமிழ்நாட்டை போல் 1.4 மடங்கு

வரி வருமானத்தில் பீகார் மாநிலத்தின் பங்கு - 9563 கோடிகள். தமிழ்நாட்டை போல் 2.47 மடங்கு
Aug 22, 2021 4 tweets 2 min read
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவில் இருந்தவர்கள் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உட்பட அனைவரும் இறை நம்பிக்கையாளர்களே. கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. அவர்கள் உருவாக்கிய வரையறையின் படியே அர்ச்சகர் நியமனம் நடைபெறுகிறது.

stationeryprinting.tn.gov.in/extraordinary/… இத்தனை நாட்களாக ஆகம விதிகள் பற்றி எதுவும் தெரியாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது ஆகம விதி மீறலாக தெரியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்படும் போதுதான் நூலிபான்களுக்கு ஆகம விதிகள் ஞாபகம் வருகிறது.
Aug 11, 2021 4 tweets 3 min read
உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்று திமுக வழக்கு தொடுத்தது.

நீதிமன்றமும் விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, 31.12.2016 தேதிக்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டது

indiankanoon.org/doc/90068215/ அதன் பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து ஒரு வழியாக 2019இல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது அதிமுக அரசு. இந்த முறை 5 மாவட்டங்களை பிரித்து புதிதாக மாவட்டங்களை உருவாக்கி அங்கு வார்டு எல்லை மறு வரையறை செய்யாமலேயே சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது
Aug 10, 2021 4 tweets 3 min read
2011ல் ஆட்சிக்கு வந்த உடன் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது அதிமுக அரசு.

அதன் பிறகு 2018ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை பேருந்து கட்டணத்தை உயர்த்தியது அதிமுக அரசு.

அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் ஒரு முறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை!

tnsta.gov.in/pdf/Stage_carr… 2017ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் வரிகளை உயர்த்தியது எடப்பாடி பழனிசாமி.

முந்தைய திமுக ஆட்சியில் ஒரு முறை கூட பெட்ரோல் டீசல் வரிகள் உயர்த்தப்படவில்லை. மாறாக குறைக்கப்பட்டது!

ctd.tn.gov.in/documents/1018…
Aug 5, 2021 4 tweets 3 min read
அதிமுக ஆட்சில சென்னைல பவர் கட்டே இருந்ததில்லைன்னு கூவுறது எல்லாம் ஓவர் விசுவாசம் More...
Jul 12, 2021 5 tweets 2 min read
பட்ஜெட்டில் இரண்டு விதமான செலவுகள் இருக்கிறது

1. வருவாய் செலவுகள் (அரசு ஊழியர் சம்பளம் மற்றும் சமூக நல திட்டங்கள்)
2. முதலீட்டு செலவுகள் (எ.கா: மின் உற்பத்தி நிலையம்)

இதில் முதலீட்டு செலவுகளுக்காக கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால் அதிமுக அரசு வருவாய் செலவுகளுக்கே கடன் வாங்கியது 2005-06 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் 57,457 கோடி
2010-11 ஆண்டு முடிவில் 1,01,541 கோடி

44,084 கோடி கடன் அதிகரித்தது. ஆனால், இதே காலகட்டத்தில் அப்போதைய திமுக அரசு செய்த முதலீட்டு செலவுகள் 44,667 கோடி

அதாவது வாங்கிய கடனை விட முதலீடுகள் அதிகம்

tnbudget.tn.gov.in/tnweb_files/Bu… (P.55)
Jul 10, 2021 4 tweets 2 min read
ஒன்றிய அரசின் 2019-20 ஆண்டு வரி வருமானம் 20 இலட்சம் கோடி. இதில் தோராயமாக 8.5% அதாவது 1.7 இலட்சம் கோடி தமிழ்நாட்டில் இருந்து வசூல் ஆகிறது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் தொகை 54 ஆயிரம் கோடி. மீதி 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசே செலவு செய்கிறது 2019-20 ஆண்டு ஒன்றிய அரசு நாட்டின் பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை 3 இலட்சம் கோடி. இதற்கான தமிழ்நாட்டின் பங்கு 8.5% என்று வைத்துக்கொண்டாலும் 25 ஆயிரம் கோடிதான் வரும். இதர செலவுகளையெல்லாம் சேர்த்து 40 ஆயிரம் கோடி கூட நமது பங்காக கொடுக்கலாம். ஆனால் 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடி அதிகம்!
Jun 21, 2021 4 tweets 2 min read
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய வருவாயை தனது பக்கம் மடை மாற்ற பாஜக அரசு செய்த ஏமாற்று வேலை

பெட்ரோல் டீசலுக்கான Basic Excise Duty வரியை குறைத்து புதிதாக Agriculture Infrastructure and Development Cess என்ற வரியை அறிமுகம் செய்தது

pib.gov.in/PressReleseDet… இது நாள் வரை பெட்ரோல் டீசலுக்கான Basic Excise Duty லிட்டருக்கு முறையே ரூ. 2.98/- மற்றும் ரூ. 4.83/- என்று இருந்ததை ரூ. 1.4/- மற்றும் ரூ. 1.8/- என்று குறைத்தது

pib.gov.in/PressReleasePa…
pib.gov.in/PressReleseDet…