Arignar Anna | அறிஞர் அண்ணா Profile picture
Writings & Speeches of Founder, Former CM of Tamilnadu, Champion of Federalism,Language Rights & Self Determination,Dr.C.N.Annadurai, belongs to Dravidian stock
Nov 26, 2021 19 tweets 3 min read
பல நாடுகளின் “கதம்பம்” ஒரு கண்டம், இந்தியாவை, எவரும் ஒரு துணைக் கண்டம் சிறு அளவினதான கண்டம் என்றே கூறினர்- கூறுவர். அதன் நிலப்பரப்பைக் கவனித்து மட்டுமல்ல, மக்களின் நிலை, வரலாற்று நிலை, ஆகியவற்றினையும் கவனித்து, அப்படிப்பட்ட துணைக் கண்டத்துக்கு இப்போது, தயாரிக்கப் படும் ஆட்சி முறைத் திட்டம், என்ன? ஒரு புதிய ஏகாதிபத்தியத் திட்டம் தயாரிக்கப்படுகிறது!
Oct 30, 2021 70 tweets 7 min read
இந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் நவம்பர் 1, 1956 பற்றி , 4–11–1956 திராவிட நாடு இதழில் "வாழ்க தமிழகம், வருக திராவிடம்" எனும் தலைப்பில் தம்பிக்கு அண்ணாவின் கடிதம்.

தமிழக அமைப்பு - நேரு பண்டிதரின் திறமை -பாரதத்தில் தமிழ்நாடு தமிழகம் திருநாள் கொண்டாடுகிறது - தாயகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது - திருநாட்டைப்பெற்றோம், இனி இதன் ஏற்றம் வளரத்தக்க வகையிலே பணிபுரிதலே நமது தலையாய கடன் என்று,தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் உறுதிகொண்டிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது -
Jun 18, 2021 5 tweets 1 min read
புராண இதிகாச "மனுதரும" ஒழிப்பு

கம்ப ராமாயணம் பெரிய புராணம், மனுநீதி முதலிய புத்தகங்களைச் சுயமரியாதைக்காரர்கள் தீ வைக்கப் போவதை குறித்து, இந்து பத்திரிகை 17.01.43-ல் ஓர் உபதலையங்கத்தில் ஓர் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறது. உனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்த உனக்குச் சுதந்திரமிருக்கும்போது, எனக்கு வேண்டாதவைகளை நான் கொளுத்தினால் நீ என்ன கேட்பது, பாலம் கட்டினால் இருகரைக்கும்தானே? உனக்கொரு வழக்கு மற்றவர்களுக்கு ஓர் வழக்கா? இதற்குச் சர்க்கார் உதவி தேடுவது வேறா?
Jan 30, 2021 13 tweets 2 min read
காந்தி பார்ப்பன கோட்ஸேவால் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி,
உலகப்பெரியார் காந்தி என்னும் தலைப்பில் அண்ணாவின் வானொலிப் பேச்சு, 1948

உலக உத்தமர்,மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது. 1/ இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து, உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை, எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் – ஏக்கம். எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். 2/
Dec 22, 2020 10 tweets 2 min read
231.நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை,
Dec 17, 2020 11 tweets 1 min read
அறிஞர் அண்ணாவின் நீதிக்கட்சி பொன்விழா உரை

நீதிக்கட்சியின் வரலாறு, ஓர் அரசியல் கட்சியின் வரலாறு அல்லது தமிழக அரசியல் வாழ்க்கையின் ஓர் ஆராய்ச்சியேயாகும். உப்பு பல பண்டங்களுடன் கலந்து சுவை கூட்டுவதைப்போல நீதிக்கட்சியின் பண்பாடு, இன்று பல கட்சிகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. நீதிக் கட்சியினர் 17 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் “கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும்” என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
Nov 14, 2020 10 tweets 1 min read
தீ....வாளி!

தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர், மடைத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு. முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்குவதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனந்திக்கும் எருமைபோலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள்
Oct 25, 2020 21 tweets 2 min read
எண்ணிப்பார்...கோபியாமல்

எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ கிராம போன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் போக விமானம்
Sep 6, 2020 15 tweets 2 min read
அவர்களில் எவருமோ உயிருடனில்லை! அத்தனை பேரும் மடிந்துவிட்டனர்! மண்ணோடு மண்ணாகிவிட்டனர்!

மடிந்தனர்! மறைந்தனர்! ஆனால் அவர் வாழ்ந்த பொழுது வழங்கிய மொழி மட்டும் அழியாது பாதுகாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

பேசியோர் இல்லை-பேசப்பட்ட மொழி இருக்கிறது! மடிந்த மக்கள்-எனினும் அவர்கள் வாழ்விலே இருந்த மொழியை அழியாது நிலைக்கச் செய்யப் புதுமுறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!
Jul 3, 2020 23 tweets 3 min read
இந்தியும் திராவிட நாடும்

(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)

சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம். தாங்கள் இந்திமொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாக கேள்விப்பட்டோம். இந்தி ஆரிய மொழி என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தியாகும் இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையிலிருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக
Jun 26, 2020 20 tweets 2 min read
அறிஞர் அண்ணா Communal G.O ( Law made by Justice party grants reservation in Madras State ) ரத்து செய்யப்பட்டதை ஒட்டி அதை எதிர்த்து எழுதியக் கட்டுரையின் ஒரு பகுதி

சட்டம்,திட்டமாகக் கூறுகிறது, ‘ஜாதி காரணமாக,யாரையும்,கல்வித் துறையிலே அனுமதிக்க மறுக்கக் கூடாது என்று, இது, பரந்த நோக்கமாம்.ஜனநாயகப் பண்பாம். புதிய இந்தியாவின் இலட்சணமாம். இராமராஜ்யக் கோட்பாடாம்! இதன் விளைவு என்ன ஆகும் என்று எண்ணும் போதே நேர்மையாளர்களின் நெஞ்சம் நடுக்கமெடுக்கிறது.