How to get URL link on X (Twitter) App



தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு. (2/4) 



இதனையடுத்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பயனாளிகளுக்கும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், நவீன கழிவு நீரகற்றும் வாகனம் வாங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த 12.08.2024 மற்றும் 19.08.2024 தேதிகளின் இடையே ஒரே வாரத்தில், ரூ. 65 லட்சம் வீதம், 54 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. (2/6)

He expressed his happiness over the brisk progress of the nationwide movement named #PLANT4MOTHER, which was to plant trees with their mother or in her name to honour her. (2/8) 




பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி சேலையில் 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று தொடங்கிய திமுக அரசு இந்த ஆண்டு கொடுத்த இலவச வேட்டி வழங்குவதில் செய்த மாபெரும் விஞ்ஞான ஊழலை சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம். (2/12)





தமிழகத்தில், பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் வண்ணத்தில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு, மாரத்தான் போட்டிகளில் ஓடுவது, அமைச்சர் உதயநிதி பின்னால் ஓடுவது, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நடைபயிற்சி செல்வது, உதயநிதி நடித்த படங்களுக்கு விமர்சனம் கூறுவது என இத்தனை வேலைகளுக்கு நடுவில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அதை தடை செய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலமாக விற்பது சத்து மருந்தா? அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்தால், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவை வராது என சுகாதாரத் துறை சான்றிதழ் கொடுக்க முடியுமா? பிறகு ஏன் டாஸ்மாக்கில் சாராய விற்பனையை அரசே செய்து கொண்டிருக்கிறது? (2/10)





கடந்த 1961ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால் ஆவடிக்கு கொண்டுவரப்பட்டது தான் ஆவடி ராணுவ தொழிற்சாலை. காங்கிரஸ் ஆட்சியில், பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. நமது பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, “மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் பெரும் பலனடைவது, இந்தத் தொழிற்சாலையும், இங்குள்ள பணியாளர்களும்தான். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராணுவத்தின் தேவைக்கு சென்னை ஆவடி ராணுவத் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க 7,523 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆவடி ராணுவத் தொழிற்சாலை புத்துயிர் பெற்றுள்ளது. (2/9)




சைவப் பெரியவர் சேக்கிழார் பிறந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூரில் தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்த இவர், சிவபெருமானின் மீதுள்ள பக்தியால் பெரியபுராணத்தை எழுதினார். ஆதிகேசவ பெருமாள் கோவில், குன்றம் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் என பல புகழ்பெற்ற கோவில்களால் நிறைய பெற்ற தொகுதி. ஸ்ரீ பெரும்புதூர் அனைத்து பக்கங்களும் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் தொழில் நகரம். மத்திய அரசின், Production Linked Incentive programme (PLI) திட்டத்தில் அமையப்பெற்ற ஐபோன் தயாரிக்கும் நிறுவனம் அமைந்திருக்கும் தொகுதி. (2/6)





தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, கடந்த 5 வருடங்களாக தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காமல், தற்போது திடீரென வந்து ராமர் கோவிலை ஏன் அதானி திறந்து வைத்தார் என்று குழம்பியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் யார் அதிகமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தனது வெற்றிக்குக் காரணம் திமுக தான் என்று பேசியவர் இவர். தமிழகத்தில் தேர்தலில் இடம் வாங்கவே காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.





அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எஸ்.கந்தசாமி அவர்கள்





மும்பையிலிருந்து சென்னை ராயபுரத்துக்கு வந்த தென்னிந்தியாவின் முதல் ரயில், அரக்கோணம் சந்திப்பு வழியாகவே பயணப்பட்டது. தெற்காசியாவின் மிக நீளமான ரன்வே அமைந்திருக்கும் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலையம் அமைந்திருக்கும் ஊர் என்பதும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய உணவுக் கிடங்கு அமைந்திருக்கும் ஊர் என்பதும் அரக்கோணத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. (2/12)





ஆர் என்றால் அத்தி மரங்கள். அத்தி மரங்கள் அதிகமாக இருந்த காடு என்பதால் ஆற்காடு என்ற பெயர் பெற்றது. 1100 ஆண்டுகள் பழமையான வரதராஜர் கோவில், வடராமேஸ்வரம் ராம நாதேஸ்வரர் கோவில் என ஆன்மீகம் பெருகும் மண். 110 ஆண்டுகளாக துல்லியமாகக் கணக்கிடும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம் இந்தப் பகுதியின் சிறப்பு. தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை பற்றியும், இஸ்ரேல் பாலஸ்தீன் போர் பற்றியும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது சிறப்புக்குரியது. (2/11)





அநியாயமும் அராஜகமும் திமுகவினர் ரத்தத்தில் ஊறியிருப்பது. கடந்த ஆண்டு, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் என்பவர் தன் குடும்பத்துடன், நீண்ட நேரம் உண்ணாமுலையம்மன் கருவறை முன்பு நின்று கொண்டிருந்ததால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒதுங்கி நிற்குமாறு கூறிய பெண் ஆய்வாளரை, கோயில் நிர்வாகமே தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி அடித்து இருக்கிறார். இது சம்மந்தமாக @BJP4Tamilnadu குரல் கொடுத்த பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு மூன்று முறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டும், இன்று வரை கைது செய்யவிடாமல் காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டுவைத்திருக்கிறார்கள். தங்கள் சகோதரிக்கு நியாயம் கிடைக்க, திருவண்ணாமலை காவல்துறையினரால் எதுவும் செய்யமுடியவில்லை என்பது வேதனைக்குரியது. (2/10)





இந்தப் பகுதியை ஆண்டு வந்த நவாப், தீராத வியாதியில் துன்பப்பட்டபோது, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கோவில் தீர்த்தம், துளசி பிரசாதம் உட்கொண்டு பூரண குணமடைந்தார். அதனால் அவர் கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை கட்டி, அங்கு பெருமாளுக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலங்களை எழுதி வைத்தார். இன்றும் ஸ்ரீ முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், நவாப் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் எதிரில் சுவாமியை நிறுத்தி, மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாராதனை செய்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சார்பாக கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள். இதுதான் சனாதன தர்மம். இந்த மாதிரியான மத நல்லிணக்கத்தைத் தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. ஆனால் திராவிடம், மக்களை ஜாதி மத ரீதியாகப் பிரித்து, மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி அரசியல் செய்கிறது. 70 ஆண்டு காலமாக, ஊழல் அரசியலையும், குடும்ப அரசியலையும் மட்டுமே முன்னெடுத்து, தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. (2/6)





சேலம் மாநகரம், பல்லாயிரமாண்டு புகழ் தாங்கி நிற்கும் சுகவனேஸ்வரர் கோவில், நிலத்தை காக்கும் பெருந்தாயான கோட்டை மாரியம்மன் கோவில், ஊத்துமங்கலம் முருகன் கோவில், தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் என வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் நிரம்பியுள்ள பகுதி. எஃகு நகரமாக அறியப்படும் சேலம் மக்களின் உழைப்பும் உறுதியும் எஃகினைப் போன்றதே என்பதை யாராலும் மறுக்க முடியாது. சேலம் கோனேரிப்பட்டியில் ரோம பேரரசின் வெள்ளி நாணயங்கள் கிடைத்ததை வைத்து பார்க்கும் போதே இந்தப் பகுதி சங்க காலத்திற்கு முன்பிருந்தே பெருந்தொழில் நகரம் என்பது உறுதியாகிறது. விவசாயம், நெசவு, கனிமவளம், இயந்திர உற்பத்தி என எல்லா துறையிலும் சேலம் உயர்ந்து விளங்குகிறது. தரமான பட்டுநூல் தயாரிப்பு, உலகப் புகழ்பெற்ற மல்கோவா மாம்பழம், இரும்பு உற்பத்தி என தொழில் நகரமாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நமது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிய சேலம் ஜவ்வரிசியாலும், புகழ்பெற்றது. சேலம் மாம்பழம், சேலம் கத்திரிக்காய் மற்றும் சேலம் கொலுசுக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும். (2/10)





வசிஷ்ட முனிவருக்கு, சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி தந்த காயநிர்மாலேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் அற்புதமான பூமி. ஆத்தூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. தமிழகக் கடற்கரைப் பகுதியையும் மைசூரையும் இணைக்கும் வணிகப் பெருவழியில் ஆத்தூர் கணவாயும் ஒன்று. இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனத்தால், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி அதிகமான, உலகிலேயே உயரமான 146 அடி உயர முத்துமலையில் முருகன் கோவில் அமைந்துள்ள தொகுதி. (2/7)





சுதந்திரப் போராட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று, கும்பகோணம் காங்கேயன் குளத்தின் கரையில், 1942 ஆகஸ்ட் 16 அன்று, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 23 பேரை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு, கும்பகோணம் போர்ட்டர் ஹால் வெளிச் சுவரில் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, இந்த வரலாறு சொல்லப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஜாலியன் வாலாபாக் போல, கும்பகோணம் தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்தப்படும். (2/6)





இந்த திருச்செங்கோடு அடுத்துள்ள புதுப்பாளையத்தில் மகாத்மா காந்தி ஆசிரமம் உள்ளது. காந்தி அவர்கள் இரண்டு முறை இங்கே தங்கி உள்ளார்கள். இந்த ஆசிரமத்தின் முக்கிய பணி மதுவிலக்கு பிரச்சாரம் மற்றும் கைத்தறி வலியுறுத்தும் பிரச்சாரம். ஆனால், காந்தி ஆசிரமம் இருக்கும் இதே திருச்செங்கோட்டில் தான் டாஸ்மாக்கில் குடிபோதையில் ஒருவர் இன்னொருவரை வெட்டிக் கொலை செய்தார். இப்படி மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருப்பது தான் திராவிடம் மாடலின் சாதனை. (2/5)





கடந்த முப்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்குச் சீர்குலைந்து இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்குப் பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் சாராயத்தைக் குடித்தவர்களால் பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு லட்சம் மட்டுமே நிவாரண நிதி கொடுக்கிறார். கோவை தற்கொலைப் படை தாக்குதலை, தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து, தீவிரவாதிகளைக் கைது செய்த பிறகும், சிலிண்டர் வெடிப்பு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். (2/8)





மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து அரிசியை 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதில் 32 ரூபாய் மானியம் கொடுத்து இங்குள்ள ரேஷன் கடைகளுக்கு கொடுக்கிறது. ஆனால், தஞ்சை நெற்களஞ்சியத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் ஒரு மூட்டை நெல்லை கொண்டு போனால் 60 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டே நெல் கொள்முதல் செய்கிறார்கள். விவசாயிகள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களுக்கு என்று தனி கூட்டுறவு வங்கி தொடங்கும் என்று சொன்னார்கள். பள்ளி சீருடை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. மின் கட்டண உயர்வால் நெசவுத்தொழில் செய்ய முடியவில்லை. அது போக, மூலப்பொருட்கள் விலை உயர்வும் நெசவாளர்களை வாட்டுகிறது. தமிழக பாஜக மட்டுமே, நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, பஞ்சு, நூல் விலை என்று ஒவ்வொன்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறது. (2/5)





மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான உதகையின் நுழைவு வாயிலாக இருப்பது மேட்டுப்பாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பவானி ஆறு சமவெளியை அடைந்து மேட்டுப்பாளையம் வழியாகவே ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. பவானி ஆற்றின் கொடையால் வேளாண்மை இங்கு முக்கிய தொழிலாக நடைபெறுகிறது. விவசாய தொழிலுக்கு அடுத்த படியாக கைத்தறி நெசவுத் தொழிலை அதிகம் பேர் செய்து வருகின்றனர். கொங்கு பகுதியின் காஞ்சிபுரம் என்ற பெருமை கொண்டது சிறுமுகை. 5000 நெசவாளர்கள் உள்ள பகுதி இந்த சிறுமுகை. பட்டு புடவைகளுக்கு பெயர் போன ஊர். சிறுமுகை பட்டுக்கு தமிழகம், இந்தியா, வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது

