தளபதி விஜய் அவர்களின் ரசிகன், கல்வியே சிறந்த ஆயதம்🔥
அனைவரும் சமம் நான் ஆக சிறந்த பணக்காரன்
Jul 23, 2021 • 25 tweets • 8 min read
எம்ஜிஆரை திமுக காரர்கள் விமர்சிப்பது விந்தையாக உள்ளது வெறும் படித்த மக்களிடம் இருந்த திமுகவை கிராம புறங்களிலும் போய் சேர்ந்ததற்கு எம்ஜிஆரும் காரணம் , 1967ல் திமுக வெற்றி பெற்றதற்கு எம்ஜிஆரும் ஒரு காரணம் , இந்திராவிடம் எம்ஜிஆர் நெருக்கமாகவே இருந்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு
அதற்கு காரணம் மாநிலத்தில் ஒரு ஆளுட்கட்சியுடன் மோத வேண்டும் என்றால் ஒன்றியத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுடன் நெருக்கம் காட்ட வேண்டும் ஏன் கலைஞரே எம்ஜியாரை வீழ்த்த தன் மைந்தன் மிசாவால் பாதிக்கப்பட்டாலும் இந்திராவுடன் கூட்டு வைத்து நேரு மகளே வருக நல்லாட்சி தருக என்றார்