விஷ்வா I Viswa Profile picture
The lion and tiger may be more powerful, but the wolf dosen't perform in the circus.
Feb 16, 2024 11 tweets 2 min read
"DUCK OR EAGLE
YOU DECIDE" 😍

நண்பர் வெளியூர் செல்ல Call Taxi
ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle
You decide*

அடுத்து அவர் கவனத்தை
கவர்ந்தது (Clean and shiny)பளிச்சென்று சுத்தமாக இருந்த கார். Image டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.

அவரே வந்து கார் கதவை திறந்து
நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.

அழகான டிரைவிங். கேட்டதற்கு
மட்டும் தெளிவான பதில்.

நண்பர் அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்பட்டார்.
Feb 27, 2022 14 tweets 2 min read
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பங்கு சந்தையில் ஒரு மெகா ஊழல் நடந்து இருக்கிறது.

ஆனந்த் சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் சித்ரா ராமகிருஷ்ணன் என்ற NSE யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனரை மத நம்பிக்கையில் வசியம் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டிருக்கிறார். ஒரு போலியான ஈ மெயில் முகவரியை உருவாக்கி இமயமலையில் இருக்கும் யோகியிடம் இருந்து கட்டளைகள் வருவது போன்று இவனே அனுப்பி ஒரு சாதாரண வேலையில் ஆண்டுக்கு 15 லட்சங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் சித்திரா ராமகிருஷ்ணனின் மூலம் 1.68 கோடிகள் சம்பளத்துக்கு போயிருக்கிறான்.
அதுவும் எங்கு?
Oct 18, 2021 9 tweets 3 min read
பிரதமர் #மோடி பற்றிய பேச்சு வந்தால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி இருக்கிறார் என்பது போன்ற வாழ்த்துகள் இந்துத்துவர்களிடையே குவிந்து விடுகின்றன.

சமீபத்தில் கூட 'இந்திய பாஸ்போர்ட்டின் மகிமையை மோடி உயர்த்தி விட்டிருக்கிறார் என்கிறார் நம் உள்துறை அமைச்சர் #அமித்_ஷா.! எப்படி உயர்த்தி இருக்கிறார் என்ற விபரங்கள் எதுவும் ஷா கொடுக்கவில்லை.

பரவாயில்லை. அவர் கொடுக்காவிடில் கொடுக்க நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஒரு பாஸ்போர்ட்டின் மதிப்பு என்பது உலகெங்கும் ஒரே ஒரு அளவீட்டில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

அது என்ன கணக்கீடு தெரியுமா?
Oct 18, 2021 4 tweets 1 min read
புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டிய ஒரு கயவன், அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதைக் கண்டு,

"உனக்குச் சூடு, சுரணையே இல்லையா?" என்று கேட்ட போது புத்தர் கூறினாராம்:

''உன்னிடம் இருக்கும் ஒரு பொருளை எனக்குத் தருகிறாய். அதை நான் ஏற்காவிடின் அது என்னவாகும்.?" அவன்,''நீ ஏற்காவிடின் அது எனக்கே சொந்தமாகும்'' என்றானாம். ''உன் இழிமொழிகளை அப்படித் தான் நான் ஏற்கவில்லை" என்று அவர் 'நெத்தியடி' அடித்தார்.

நம் உடலில் உள்ள இதயம், கெட்ட இரத்தத்தை உள்ளே அனுமதிப்பதில்லை.

சிறுநீரகம் கழிவுப் பொருளை வெளியே தள்ளுகிறது.
நுரையீரல் என்ன செய்கிறது.?
Oct 17, 2021 5 tweets 1 min read
ஒரு சிறிய நகரம்.

அதில் ஒரு சிறந்த வயலின் வித்வான் வாழ்ந்து வந்தார்.

அவர் வயலின் இசைக்கு யாவரும் வசப்படுவர்.

அப்படிப்பட்ட ஞானமுடையவர்.

இந்நிலையில் அவ்வூரில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கூடாரத்திலருந்த புலி ஒன்று தப்பித்து ஊருக்குள் புகுந்து விட்டதாக தகவல் பரவியது. (1) இதைக் கேட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டதோடு அவர்கள் மிகவும் நேசித்த வயலின் வித்வானையும். எச்சரித்தனர்.

இந்த நிலையில் வித்துவானின் கெட்ட நேரம், புலியும் அவர் முன்னே வந்து நின்றது

வித்வான் பயப்படவே இல்லை. பட்டென்று தன் வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். (2)
Oct 16, 2021 6 tweets 1 min read
ஒருவர் தனக்கு பெரிய கஷ்டம் வந்து விட்டது என்றும், அதை எப்படித்தான் சமாளிப்பது என்று தெரியவில்லை தனது நண்பர் ஒருவரிடம் புலம்பி கொண்டே இருந்தார்.

அந்த நண்பர் தினமும் கேட்டு கேட்டு அலுத்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் அவர் நண்பர். கஷ்டப்படுகிற நண்பருக்கு ஒரு அறிவுரை சொன்னார்: "ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணிய எடுத்து உங்க உள்ளங்கையில் வைத்து இருங்கள்" என்று மட்டும் சொல்லி விட்டு மறுநாள் சந்திப்பதாக கூறி சென்று விட்டார்.

கஷ்டத்தில் உழல்பவர் கொஞ்சம் சிந்தித்தார்.

பின்பு ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருக்க ஆரம்பித்தார்.
Sep 29, 2021 11 tweets 2 min read
கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.

வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.

பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சி. இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.

அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல.

நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. வேலைக்கும் போறோம்.
Sep 28, 2021 13 tweets 2 min read
ஒரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார்.

அவர் காலையில் அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே சென்று மெக்கானிக் கடையில் பழுது பார்த்து புறப்பட்டார். அதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குச் சென்றார்.

தாமதமாக வேலைக்கு வந்ததால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக திட்டினார்.

அதனால் மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம்பட்டது.

இது என்னடா நமக்கு இன்று வந்த சோதனை.?
Sep 27, 2021 5 tweets 1 min read
ஒரு முறை ரமண மகரிஷியை ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள் அருளுரை வழங்க வேண்டி.

விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு தயாராகி இருந்தது.

ரமணரின் அருளுரை முடிந்து உணவு இடைவேளை வந்தது.

பெரும் திரளான கூட்டம். எல்லாம் போக பிச்சைக்காரர்கள் வேறு கூட்டமாக உணவருந்த வந்து விட்டனர் அங்கே.! Image நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிட்டது.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.

ஒரு முடிவுக்கு வந்து பிச்சைக்காரர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று மைக்கில் அறிவிப்பு செய்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.

மிகவும் சிரமப்பட்டு பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Sep 26, 2021 10 tweets 2 min read
ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன், தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒரு குடிமகனைக் கைது செய்து "மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளையிட்டான்.

நிரபராதியான அந்த குடிமகன் சிறையில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.

"நான் நிரபராதி அரசே.!" இந்த நாட்டில் கருத்து சொன்னது ஒரு குற்றமா.?
ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?
என்று உரக்கக் கதறினான்.

பின்னர் அவனை "ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளை வந்தது.

மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் அந்தக் குடிமகன்.
Sep 19, 2021 10 tweets 2 min read
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.

இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.

தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.

அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை. ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
Sep 18, 2021 11 tweets 2 min read
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.

சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன். குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.

மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
Sep 17, 2021 10 tweets 3 min read
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."

இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய‌ தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!

"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" Image "கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"

"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"

"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
Sep 17, 2021 10 tweets 2 min read
1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர். அவருக்கா இப்படி ஒரு சிரமம்.? 2) ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! ஒரு ஹெல்ப் பண்ணு எனக்கு.
Aug 31, 2021 15 tweets 3 min read
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ ‌என்று.

'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும்‌ கிடைத்து விடாத பெரும்‌ வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?' லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.

மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.

விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.

சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
Aug 31, 2021 18 tweets 3 min read
1903-ஆம் ஆண்டு.
இடம் லண்டன்.

மேடை நாடகங்கள் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம் அது.

மாலை நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்க நாடகக் கொட்டகைகளுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள்.

லண்டனில் ஏராளமான நாடக குழுக்கள் ஓர் அரங்கில் "ஷெர்லாக் ஹோம்ஸ்' நாடகத்துக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. தினசரி ஒரு சிறுவன் ஒத்திகைக்கு வந்து கொண்டிருந்தான்.

இறுதிக்கட்ட ஒத்திகை அன்று.
மறுநாள் நாடகம்.

'பில்லி' என்ற வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு அன்று காய்ச்சல் என்று தகவல் வந்தது.

பாத்திரம் வேலைக்காரன் என்றாலும், நிறைய வசனம் அந்த கேரக்டருக்கு.
Aug 29, 2021 8 tweets 2 min read
ஒரு நாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான்.

அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.

பின்னாலேயே வந்து திட்டி ஓய்ந்தவனுக்கு அவர் புன்னகை என்னவோ செய்தது. சகிக்க முடியாததாகவும், வியப்பைத் தருவதாகவும் இருந்தது.

என்ன மனிதர் இவர் என்று வியந்தவன் "ஏனப்பா, இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

கௌதமர் அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டார். திரும்பவும் புன்னகை மலர்ந்தது அவர் முகத்தில்.
Aug 16, 2021 15 tweets 2 min read
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.

உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.

அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.

நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.

சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
Aug 15, 2021 16 tweets 3 min read
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.

அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.

5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார். Image குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.

8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
Aug 14, 2021 9 tweets 2 min read
தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே? அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
அவற்றை விரிவாக பார்ப்போம்:

1) எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்கள் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.
இன்றைய நிலையில் தமிழர்கள் சேமிப்பும் பல்லாயிரம் கோடிகள் இருக்கும். இந்தச் சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன.

அந்தப் பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.

உதாரணமாக ஆஸ்த்ரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது தெரிந்திருக்கும்.
Aug 14, 2021 7 tweets 1 min read
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.

அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”

“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார். “மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.

மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.

ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.