Naveen Prabakaranᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ Profile picture
Jul 4, 2021 7 tweets 3 min read
அடிக்கடி நாம் உபயோகிக்கும் வார்த்தை தான், இந்த 'சும்மா'
அது சரி சும்மா என்றால் என்ன?
பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா!

"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1 . கொஞ்சம் "சும்மா" இருடா?
( அமைதியாக/Quiet)

2. கொஞ்ச நேரம் "சும்மா" இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)
Jun 4, 2021 22 tweets 7 min read
⚫⚪🟡 பூஞ்சைத்தொற்று - இழை
1) கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடாத நிலையில், ⚫, ⚪, 🟡 என்று பல வண்ணங்களில் பூஞ்சைத்தொற்று வரும்பொழுது அது கூடுதல் அச்சத்தையே நமக்கு கொடுக்கிறது. 2) இந்த தொற்றினால் உன்டாகியிருக்கும் அச்சத்தை களைவதும், எவ்விதத்தில் நாம் இந்த நோயிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விளக்குவதே இந்த பதிவின் நோக்கம்.
May 17, 2021 11 tweets 3 min read
உப்பு கரைசலில் வாய் கொப்பளிப்பு (Salt Water Gargling) - இழை
பெருந்தொற்று காலம், மக்களும் 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்று அவர்கள் கேள்விப்படும் வைத்திய முறைகளை எல்லாம் வீடுகளிலே முயற்ச்சித்து வருகின்றனர்.
அதில் ஒன்று தான் உப்பு நீரில் 👄 கொப்பளிப்பது //1 பாட்டி வைத்தியம் என்று அழைக்கப்படுகிற இந்த முறையினால் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா அல்லது தொற்று வந்துவிட்டால் அதை குணப்படுத்த உதவுமா என்பதை பற்றி பார்ப்போம்.
அதற்க்கு முன்னர் தொண்டை கரகரப்பு (Sore throat) என்றால் என்ன என்பதை பற்றிய சிறு குறிப்பு //2
May 9, 2021 7 tweets 2 min read
Mothers Day Special

Mom and Mitochondria

Mitochondria is an intracellular organelle that is present in all Eukaroytic Cells (Animals, Plants and Humans). Popularly knows as the ‘power house’ of the cell. 1/n The number of mitochondria in a cell depends directly upon its physiological functions. For E.g a mature Red Blood Cell carries no mitochondria, on the contrary a single Heart Muscle Cell carries a minimum of 2000 mitochondria. 2/n
Apr 27, 2021 11 tweets 6 min read
அனைவருக்கும் வணக்கம் 🙏.

இந்த பெருந்தொற்றின் ஊடாய் கடந்து சென்று கொண்டிருக்கிற இந்த வேளையில் பலதரப்பட்ட செய்திகள், அதன் விளைவாக மக்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்கள் என்கிற நிலை. இயன்ற அளவிற்க்கு சந்தேகங்களை தகுந்த அறிவியல் ஆதாரத்தோடு களைந்து வருகிறோம். (1) அந்த வரிசையில் இன்று, CRP பரிசோதனை பற்றி தெரிந்து கொள்வோம். தடூப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை கேட்ட மாத்திரத்தில் பலரும் கேட்ட கேள்வி, CRP டெஸ்ட் பன்னனுமாமே. அது அவசியம் செய்யனுமா? அதற்கான பதில் தான் இந்த இழை. (2)
Apr 25, 2021 5 tweets 2 min read
அறிவியல் ஆராய்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய படம். இன்று நாம் உயிரியலில் உச்சத்தை அடைந்திருப்பதற்க்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்தது என்றால் மிகையாகாது.
இன்று #WorldDNADay (1) Image பெருந்தொற்றின் ஊடாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் நாம் கொண்டாட வேண்டியது அறிவியல் ஆரய்ச்சியாளர்களையும், மருத்துவ பணியாளர்களையும் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் மனித குலம் என்றோ நீர்த்து போயிருக்கும். (2)
Apr 20, 2021 7 tweets 2 min read
Remdesvir- இந்த மருந்து முதன் முதலாக ஹெப்பாடைடிஸ் - C நோய் தொற்றை குணப்படுத்த உருவாக்கப்பட்டது. அதன் பின் பரிசோதனை முயற்சியாக எபோலா தொற்றின் போது உபயோகப்படுத்தபட்டது. ஆனால் எந்தவித பயனும் இல்லை. இப்போது கோவிட்-19 குணப்படுத்த வல்லதா என்ற முயற்ச்சி செய்கிறார்கள். (1) இதுவரையில் எந்த பலனும் இல்லை. பல மருத்துவ நிபுணர்கள் இந்த மருந்தை கோவிட்-19க்கு தொற்றிற்கு உபயோகபடுத்துவதை வீண் என்று கூறி வருகிறார்கள். அது முற்றிலும் உன்மை. அநாவசியமான ஒரு தேவை பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். (2)
Apr 20, 2021 4 tweets 1 min read
கேள்வி: ஆவி பிடித்தல் (steam inhalation) கொரணா வைரஸை கொன்றுவிடுமா?

பதில்: நிச்சயமாக இல்லை

நமது நாசித்துவாரத்தின் உட்புற கட்டமைப்பு, நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத திட பொருட்களை வடிகட்டும் தன்மை கொண்டது. (1) சிறு முடி (cilia), பிசின் தன்மை கொண்ட திரவம் (mucus) இந்த இரெண்டும் அந்த வேலையை திறம்பட செய்ய வல்லது.

ஆவி பிடிக்கும் பொழுது, நாசித்துவாரத்தின் இந்த இயற்கை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. (2)
Dec 29, 2020 6 tweets 4 min read
புதிய கொரோனா வைரஸ் தொற்றை இப்பொழுது நடைமுறையில் இருக்கும் COVID-19 RT-PCR முறையில் கண்டறிவது சாத்தியமில்லை. CT ஸ்கேன் அல்லது புனேவில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் வைரஸின் மரபனுவை ஆய்வு செய்வதன் மூலம் கண்டிறியலாம். (1/4) RT-PCR negative என்றால் கோவிட் நெகட்டிவ் என்று அர்த்தமல்ல (இப்போதைய சூழலில்) ஆகவே கட்டாயம் CT ஸ்கேன் செய்தே ஆக வேண்டும். இந்த புதிய வைரஸ் அதிவேகமாக பரவுமே தவிர அதிக உயிரிழப்புக்களை உண்டாக்காது. ஆனால் 14-21 நாட்கள் முதலான தனிமைப்படுத்தல் போன்றவை அவசியமாகிறது. (2/4)
Dec 2, 2020 5 tweets 1 min read
நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த ஒன்று. நம்மில் நிறைய பேர் அதிகம் சொல்லும் குற்றச்சாட்டு; டாக்டர் கிட்ட போனா இந்த டெஸ்ட எடு, அந்த டெஸ்ட எடு. ஸகேன் பன்னு என்று, நீளமா லிஸ்ட் போட்டு 1,000, 2,000, 10,000 வாங்கிடுறாங்க. கடைசியா ஒன்னும் இல்லனு சொல்லுறாங்க. (1/n) இப்படி பல பேர் பல நேரங்களில் பேசி கேட்டதுண்டு. எந்த மருத்துவ பரிசோதனை செய்யும்போதும், அதை பற்றி நோயாளிக்கும் அவரோட உடன் வந்தவருக்கும் விளக்கி கூறிய பின்னரே சோதனை செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. மேலை நாடுகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. (2/n)
Nov 28, 2020 22 tweets 6 min read
Antibiotic Resistance- Thread- Final Part

இந்த தலைப்பின் முதல் மூன்று இழைகளின் இணைப்பு👇🏽

Part-1

Part-2

Part-3 பல நேரங்களில்; நம் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ வீட்டின் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி , இந்த பிள்ளையை மாதிரி எங்க பரம்பரையிலே யாரும் இல்லைங்க, தப்பி இங்க வந்து பிறந்திடுச்சி எப்படி சமாளிக்கறதுனே தெரியல என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள்.(2/n)
Nov 28, 2020 20 tweets 6 min read
Antibiotic Resistance- Thread- Part-3

அனைவருக்கும் வணக்கம்! Antibiotic Resistance என்கிற தலைப்பில் எழுதிய இரண்டு பாகங்களின் இழையை படித்து பகிர்ந்தமைக்கு நன்றி. முதல் இரண்டு இழைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகள் பற்றிய தகவல்களை பாரத்தோம். (1/n) இந்த இழையில் பாக்டீரீயாக்கள் எப்படி பாக்டீரீயா எதிர்ப்பிகளை எதிர்க்கிற திறமையை (Resistance) உருவாக்கி கொண்டன/ கொண்டிருக்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.
பாக்டீரீயாக்கள் இருகூற்றுப்பிளவு ( Binary Fission) முறையில் இனப்பெருக்கம் செய்பவை. (2/n)
Nov 26, 2020 23 tweets 6 min read
Antibiotic Resistance- Thread - Part-2

முதல் இழையில் பாக்டீரீயாக்களை பற்றி எழுதியிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படிக்க இயலாமல் போயிருந்தால் அவசியம் படிக்கவும். இணைப்பு கீழே👇🏽 (1/n)
இந்த இழையில் நோய்த்தொற்றுகளின் வகைப்பாடு மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகளின் (Antibiotic) கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். முதலாவது வகைப்பாடு நோயுண்டாக்கும் கிருமிகளின் மூலத்தை (Source) அடிப்படையாக கொண்டது. (2/n)
Nov 23, 2020 25 tweets 6 min read
Antibiotic Resistance- Thread - Part-1
கொரோனா வைரஸின் முதலாமாண்டு பிறந்தநாளை நாம் சிறப்பாய் கொண்டாடி முடித்திருக்கின்ற இந்த வேளையிலே, இதை விட மிகச்சவாலான நோய் தொற்றுக்களை வருங்காலங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை கூறவே இந்த பதிவு (1/n) எளிய நடையில் எழுத முயற்ச்சித்திருக்கிறேன். சில இடங்களில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலமும்/தமிழும் கலந்து எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். படித்தவர்கள் தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். (2/n)
Aug 21, 2020 16 tweets 3 min read
இழை 👇

2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n) அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
Jul 12, 2020 16 tweets 2 min read
Thread
மருத்துவ மாணவர்களும் சாதி வெறியும்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் எங்கள் பல்கலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பயில்கிறார்கள். அதில் 70% சதவிகிதம் பேர் குஜராத்திகள். சேர்ந்த புதிதில் எல்லா மாணவர்களையும் போல பயபக்தியுடன் (1/n) நடந்துகொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரி செல்ல ஆரம்பித்தது. பொதுவா எல்லா மாணவர்களிடமும் தெரிவதுதான் ஆனாலும் இவர்களின் ஆணவ போக்கை காண முடிந்தது. என்னை பொறுத்தளவில் வகுப்பு அறையில் யார் தொந்தரவு செய்தாலும் வெளியே அனுப்பிவிடுவேன்(2/n)