thangachi_anni Profile picture
2 subscribers
Dec 15, 2020 10 tweets 2 min read
டெல்லில கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்தபோது அப்ப எங்க போனீங்க,அத ஏன் கேக்கல,இத ஏன் கேக்கலனு கட்சி தொடங்கும் முன் நடந்த பிரச்சனைகள சொல்லி மக்கள் அவங்கள வெறுக்கல. இப்ப 2வது தடவ ஜெய்ச்சிருக்காங்க.கட்சி ஆரம்பித்த பின்தான் எல்லாம் பேச முடியும்.அதுவரை என்ன பேசனும் என்பதற்கு வரையறை கிடையாது. பாஜகவை எதிர்க்கும் பாய்ண்ட் களை மட்டும் ரஜினியிடம் கேட்கும் ஊடகங்கள்,நபர்கள் 2017க்கு முன் நடந்த திமுக,அதிமுக ஆட்சி குறைகளை சொல்லி ஏன் கேள்வி கேக்கல? 2ஜி,மின்வெட்டு,நில அபகரிப்பு பத்திலாம் ரஜினிகிட்ட அப்போ ஏன் கேட்கல? தினகரன் பேப்பர்,தர்மபுரி மாணவிகள் எரிப்பு,பல கலவரங்கள்..
Dec 13, 2020 5 tweets 1 min read
மக்களுக்கு ஏதும் செய்தாரா... அந்த பிரச்சனைல, இந்த பிரச்சனைல குரல் கொடுத்தாரா.. அப்போ ஏன் பேசல,வரல...
இப்டியான கேள்விகள ரஜினியை நோக்கி கேட்பதே வெற்றிடம் இருப்பதற்கான உறுதியையும், அதைவிட ரஜினிக்கான தேவையையும் உறுதிப்படுத்துகிறார்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய எண்ணமிருந்தால் போதும். மக்களுக்கு நல்லது செய்ய எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். கவுன்சிலர் முதல் MLA,MP வரை பெரும்பாலான வேட்பாளர்கள் அதுவரை கட்சில,தொகுதில, ஏரியால இல்லாம புதுசா நிறுத்துறாங்க.அவங்கள யாரும் இப்ப வரல,அப்ப பேசலனு கேக்குறது இல்ல. பலர் ஜெய்ச்சிருக்காங்க.
Dec 5, 2020 8 tweets 2 min read
கட்சிகளின் தவறுக்காக திராவிட கட்சிகள் என சித்தாந்தத்தை குறைசொல்வது, சாடுவது தவிர்க்கப்பட வேண்டும்....
கட்சியை,கட்சி தலைமையை, தலைவர்களின் செயல்களை குறைகூறுங்கள்... கருத்தியல்,அரசியல் ரீதியாக...
மதம் வேறு... ஆன்மீகம் வேறு...
திராவிட கட்சிகள் வேறு..
திராவிடம் வேறு... இந்த கட்சிகளின் நோக்கம் பெரியாரை,அம்பேத்கரை, திராவிடத்தை தங்கள் எதிர்க்கட்சியினர் திட்ட வேண்டும் என்பதே... அதற்காகவே அதை தூக்கிப்பிடிப்பார்கள், மதத்தை திட்டுவார்கள்.. தனிப்பட்டவகையில் திட்டுவார்கள். அதனால் வெறுப்பு அரசியலை கைவிட்டு எல்லாவற்றிலும் உள்ள நல்லதை மட்டுமே பேசுவோம்.
Mar 12, 2020 8 tweets 2 min read
ஒரு நோய் இருக்குன்னா அத சரிசெய்யும் வழிகள்:
1.சாப்பாடு மூலம்..
2.வீட்டு வைத்தியம்..
3.சித்தா,ஆயுர்வேதா..
4.அலோபதி-மருந்து,மாத்திரை,ஊசி..
5.இறுதியாக ஆப்பரேசன்.
ரஜினி சொல்லிருக்கிற மாற்று அரசியல் பாதை இதுதான்.. நோயை குணப்படுத்த முடிவெடுத்த ரஜினி ஆப்பரேசன் செய்யவும் தயங்கமாட்டார். ரஜினி எதார்த்தத்தை உணர்ந்து உண்மையாக மக்களை மாற்ற எண்ணி இத சொல்லியிருக்கிறார். அரசியல்வாதிகள் பாணி மாறனும்னா மக்கள் முதலில் மாறனும்.. கேரள மக்கள் அப்டி இருப்பதால்தான் அரசியல்வாதிகள் அப்டி இருக்காங்க... அதை நோக்கி மக்களை திருப்ப முயற்சிக்கிறார் ரஜினி.
Feb 2, 2020 4 tweets 1 min read
பார்ப்பனீயம் ஆபத்து-பிரசாந்த் கிஷோருடன் இணைவோம். திராவிடம் ஆபத்துனு சொல்ர பார்ப்பனீயம் திமுக ஜெய்க்க உதவும்.பெரியாரை எதிர்ப்பர், ராஜாஜியுடன் சேர்வர்,காமராஜரை எதிர்ப்பர், பாஜகவோடு சேருவர், சாதிகட்சிகளோடு கூட்டணி அமைக்கும்,ஆட்சிக்காக யாருடனும் சேரும்/விலகும். எல்லாம் ராஜதந்திரமாம். 50 ஆண்டு கட்சி மொழி, சித்தாந்தத்துக்காக போராடிய கட்சி கார்ப்பரேட் கம்பெனியுடன் கைகோர்க்கிறது தேர்தல் வெற்றிக்காக. இதை எந்த மீடியாவும் பேசாது..ரஜினியை கேள்விகேட்கும் பலரும் கேட்க மாட்டார்கள்.ஏன்னா ஆல்ரெடி அவங்க ட்ரெயல் பாக்க தொடங்கியதன் சாம்பிள்தான் இவர்களின் ரஜினி எதிர்ப்பு.
Apr 22, 2019 10 tweets 2 min read
ஏன் @rajinikanth மீது கோபம்?
தன் அபிமான நடிகரை விட புகழ் பெற்றிருப்பதால்...
ரஜினி யார் வாய்ப்பையும் பறிக்கவில்லை. மக்களுக்கு பிடிச்சா படம் ஓடும் இல்லன்னா ஓடாது. ரஜினிக்கும் ஒரு சில தோல்வி படங்கள் உண்டு.1 தன் ஆதரவு கட்சியின் வெற்றியை தடுத்துடுவாரோ என்ற பயம்? ஒரு கட்சி வெற்றி/தோல்வி அடைய அந்த கட்சியின் கடந்த/நிகழ் கால செயல்பாடுகள்.. தொண்டர்களின் அத்துமீறல்,மக்கள் விரோத செயல்கள், அதை கண்டு கொள்ளாத தலைமை,etc இவைகள் தான் காரணம். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.2
Dec 21, 2018 8 tweets 3 min read
எல்லா நடிகர்களும் ரஜினி மாதிரி ஆகனும்,ரஜினி மாதிரி மக்கள் செல்வாக்கு பெறனும்னு தான் விரும்புறாங்க... அதுக்கு தான் உழைக்கிறாங்க... எல்லா ரசிகர்களுமே தன் அபிமான நடிகர் ரஜினியை போல தனக்கு திருப்தியை தரனும்னு தான் விரும்புறாங்க.எல்லாத்துக்கும் பெஞ்ச் மார்க் ரஜினிதான்.1 ரஜினியை,ரஜினி பட வியாபாரத்தை பென்ச் மார்க்கா வச்சுட்டுதான் திரையுலகமே ஓடிட்டு இருக்கு. ஆனால் ரஜினி மற்றவர்கள் போல அல்ல... அவர் ஒரிஜினல்.அவர்கிட்ட இருக்கும் மேஜிக் வேற யார்கிட்டயும் இல்ல.
திகட்டாத நடிகர்.ஆயிரம் பேர் இருந்தாலும் தன்னை மட்டுமே பார்க்கவைக்கும் வசீகரம் உள்ளவர்.2