GAVASKAR Profile picture
Journalist at Theekkathir Daily @theekkathir Journalist Welfare Board Member at Tamilnadu Government.
Apr 27, 2023 17 tweets 3 min read
'விடுதலை' படத்தில் காவல்துறை வன்முறையை அதிகமாக காட்டுகிறார்கள் என கொந்தளித்த சமூகத்துக்கு ஒரு சம்பவம்:

அரவிந்த்சாமி என ஓர் இளைஞர். இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுத் தலைவர். திருவிடைமருதூர் இடையநல்லூரை சேர்ந்தவர். ஊரிலேயே M Phil படித்த முதல் நபர் அவர்.
1/17 Image பட்டமளிப்பு விழாவில் Silver Medal வழங்கப்பட இருந்ததால் உற்றாரையும் கடந்த 24/4/23 அன்று நிகழ்வுக்கு அழைத்து செல்கிறார். விழா அரங்குக்குள் கிட்டத்தட்ட 1500 மாணவர்கள். அரவிந்தசாமி அவர்களுக்கு நடுவே சென்று அமர்கிறார். நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
2/17
Jan 12, 2023 36 tweets 5 min read
முடிவுக்கு வரட்டும் ஆளுநரி(யி)ன் அநாகரீகச் செயல்பாடுகள்

- கே.சந்துரு, உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

ஜன. 12, 2023
தமிழ்நாட்டில் குப்பை கொட்ட வந்த ஆளுநர் கள் பல விதம். ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பரம்பரையின் எச்சங்களுக்கு ஆளுநர் பதவியை அளித்து புது மாப்பிள்ளைபோல்
01 இம்பாலா கார்களில் பவனி வரவும், ஆளுநர் மாளி கையில் ஓய்வெடுத்துக்கொள்ளவும் அமர்த்தப்பட்டார் கள். மைசூர் மாநிலத்தின் மேனாள் மகாராஜா ஜெய சாமராஜ உடையார் இந்த வகையில் சேர்ந்தவர். இப்படி யானவர்களால் மாநில அரசுக்குச் செலவினங்களைத் தவிர வேறு பிரச்சனைகள் எழவில்லை.
02
Jul 10, 2022 11 tweets 2 min read
பாென்னியின் செல்வன்: கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு!

- அருணன்

 மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள். கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான். அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் 

ஆதித்த கரிகாலனின் படுகொலை
01 அதைச் செய்தவர்கள் பற்றி உடையார்குடிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. "அக் கொலைக்கு காரணமானோர் பிராமணர்கள் என்பதையும் அக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் பின்வரும் நால்வராவார்: சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராசன்,
02
Apr 14, 2021 24 tweets 3 min read
தமிழ்ப்புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா?

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும்

001 பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து
002
Aug 27, 2020 9 tweets 3 min read
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதமான உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதனை #CPIM சார்பில் வரவேற்பதுடன்
01 இதன் மூலம் அருந்ததியர் மக்களது கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பட்டியலின மக்களில் ஒரு பகுதியினராக உள்ள அருந்ததிய சமூகப் பிரிவினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கான உரிய ஒதுக்கீட்டை பெறமுடியாத நிலை
02