நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @ INC | Author of 3 books
Nov 22, 2021 • 6 tweets • 1 min read
கரூரில் பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை.
உடனடியாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இதுதொடர்பாக நேற்றே தமிழக முதல்வர் @mkstalin ,டிஜிபி @tnpoliceoffl இருவருக்கும் புகார் அனுப்பியுள்ளேன்.அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சட்டரீதியான உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
Nov 20, 2021 • 6 tweets • 1 min read
கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் காவல்துறை கண்காளிப்பாளர் அவர்களிடம் பேசினேன். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.
நமதுகுழந்தைகள் தங்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கவும்,அச்சமின்றி குற்றவாளிகளை பொதுவெளியில் அடையாளம் காட்டவும் முடியாமல் தற்கொலையை நாடுவது வேதனை அளிக்கிறது.ஒரு சமூகமாகவும்,சட்டப்படியும் நாம் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானசூழலை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மை
Nov 13, 2021 • 10 tweets • 1 min read
பாலியல் துன்புறுத்தலால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டது மனதை கனக்கச்செய்கிறது.குற்றவாளி ஒரு ஆசிரியர். குற்றத்திற்கு துணை நின்றது பள்ளி நிர்வாகம்.எவ்வளவு கொடுமை!ஒரு பெண் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்பற்றி புகார் அளித்த பிறகும் எப்படி ஒரு பள்ளி நிர்வாகம் அதை கடந்துபோக முடியும்?
இந்த பாலியல் கொடுமை ஏதோ ஒரு பள்ளியில்,ஒரு மாணவிக்கு நேர்ந்த சாதரண குற்றமல்ல.பல பள்ளிகளில் ,பல நூறு மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக இந்த கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.இதை ஒரு சமூகமாக நாம் இப்படியே கடந்து போய்விடமுடியுமா? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டாமா?
Nov 12, 2021 • 10 tweets • 2 min read
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ,ராஜீவ் பவனத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்துள்ளோம். நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது.
(1/n)
நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொழுது ,வெற்றி பெற்றால் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தோம்.
(2/n)
Sep 5, 2021 • 4 tweets • 1 min read
ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி.கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,மார்பகங்கள் வெட்டப்பட்டு,தொண்டை அறுக்கப்பட்டு,அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. #JusticeForRabiya
இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார்.அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்படவேண்டும்.
Aug 30, 2021 • 13 tweets • 2 min read
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. எனது அறிக்கை👇 #Save_Women_From_BJP & #Seeman
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் ,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
Aug 26, 2021 • 10 tweets • 2 min read
தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை உடனடியாக ராஜினமா செய்யவேண்டும்.
எனது அறிக்கை.
ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை.குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.
Aug 22, 2021 • 8 tweets • 2 min read
கரூர்,திருச்சி,கோவையில் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அண்ணன் திரு. @Subramanian_ma அவர்களை சந்தித்தேன்
புற்றுநோய் பாதிப்பு கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.குறிப்பாக பெண்களிடம்.
(1/n)
புற்றுநோய் குறித்த பயம்,குடும்ப சூழல், போதுமான விழிப்புணர்வு இன்மையால் ஆரம்பத்தில் கண்டறிய முடிவதில்லை. புற்றுநோய் முற்றிய நிலையில் பெரும்பாலும் குணமாக்க இயலாமல் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.
(2/n)
Jul 10, 2021 • 9 tweets • 1 min read
தமிழினம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான மொழி,வரலாறு,பாரம்பரியம் உடையது. அதை அழிப்பதற்கு பாஜக துடிப்பது நாம் அறிந்ததே .கீழடியில் இருந்து செம்மொழி ஆய்வு மையம் வரை உதாரணங்கள் குவிந்துகிடக்கின்றன.
தமிழக மக்கள் அன்பை,ஒற்றுமையை,அமைதியை,உழைப்பை,சுயமரியாதையை,தைரியத்தை நம்புகிறவர்கள்.ஆகவே பாஜக / ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தை மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலால் வெல்ல முடியவில்லை. அழுத்தத்திற்கும் தமிழகம் பணிவதில்லை.ஆகவே இப்பொழுது புவியியல் ரீதியாக தமிழகத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.
Mar 13, 2021 • 4 tweets • 1 min read
காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய
தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை.
தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற
தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
Oct 17, 2020 • 7 tweets • 1 min read
தரிசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் அமைக்கலாம். வேலை வாய்ப்புகள் உருவாக்கலாம். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால் சிப்காட், சிட்கோ பெயரால் பலநூறுகோடி மதிப்புள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதையும், விவசாயத்தை அழிப்பதையும் ஏற்க முடியாது.
(1/n)
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி R.கோம்பை பகுதியில் இயற்கை வளங்களை அழித்து சிட்கோ அமைப்பதாகவும்,தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தைக் காப்பாற்ற போராடும் தங்களை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் காவல்துறையை வைத்து மிரட்டுவதாகவும் ...
(2/n)
Aug 20, 2020 • 5 tweets • 1 min read
பிஜேபி ஏன் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் குதிக்கிறது?
கொரொனா தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான
குலதெய்வக் கோவில்கள் பக்தர்களுக்கு மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும்,மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறவில்லை. (1/n)
பக்தர்கள் காவடியோடு சாரை சாரையாக நடந்தே மலையேறும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடைபெறவில்லை. மாரியம்மன் பண்டிகைகள் உட்பட மற்ற திருவிழாக்களுக்கும் இதே நிலைதான். மக்கள் இதைப் புரிந்திருக்கிறார்கள். பக்தி பறிபோய் விட்டதாக குதிக்கவில்லை. ஏனெனில் அது உண்மையான பக்தி. (2/n)
Jun 6, 2020 • 5 tweets • 1 min read
மோடி அரசின் துரோகம் (Read the thread)
மருத்துவ நீட் (NEET)
இளங்கலை,முதுகலைத் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட 27% நீக்கிவிட்டு,உயர்சாதியினருக்கான 10% இமாணவர்களுஇடஒதுக்கீட்டைக்கானடஒதுக்கீட்டை சேர்த்து துரோகம் இழைத்துள்ளது மத்திய மோடி அரசு.
இதனால் நாடார் தேவர்,கவுண்டர்,வன்னியர்,யாதவர், முதலியார்,செட்டியார் ,முத்தரையர் உட்பட அனைத்து பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நமது பிள்ளைகளுக்கு மருத்துவ படிப்பு என்பது வெறும் கனவாகவே முடியும்.
May 18, 2020 • 13 tweets • 2 min read
இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! #I_Stand_with_Jothimani
நேர்மையும்,அன்பும்,கண்ணியமுமே எனது அரசியல். "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள்" எனது வம்சம். மலிவான தனிநபர் தாக்குதல் மூலம் என்போன்ற பெண்களை பொதுவாழ்வில் இருந்து வெளியேற்றிவிட முடியுமென கனவிலும் நினைக்காதீர்.