Karthick Ramasamy Profile picture
Nov 25, 2022 11 tweets 2 min read
இதை ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் எழுத வேண்டியது அவசியமாகிறது.

இந்திய சமூக சூழ்நிலையில் பார்ப்பனர்களுக்கு வாழ்க்கையை பற்றிய பயமும் அச்சமும் இருக்காது. எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னைக் காப்பாற்ற தன் இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்கிற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய மன அழுத்தமும் குறைவாகவே இருக்கும்.

ஒரு வேலை போனால்கூட இன்னோரு வேலை வாங்கித்தர ஆட்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கை அவர்களை பல துணிச்சலான முடிவுகளை எடுக்க வைக்கும். அது தனது வேலையில் மேலும்மேலும் முன்னேற உதவும்.
Nov 10, 2022 4 tweets 1 min read
தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்ட அந்த மன்னரு நாள், கிழமை பாக்காம எந்தக் காரியமும் செய்ய மாட்டாராம். ஒருநாள் ஏதோ வெளியூர்ப் பிரயாணம் போனதால அன்னைக்கு ஏகாதசின்னு தெரியாம சாப்பிட்டு முடிச்சதும் வெற்றிலை போட்டுட்டாராம். “அய்யய்யோ ஏகாதசியும் அதுவுமா இப்பிடி பண்ணிட்டேளே”ன்னு வேதம் அறிஞ்ச ஜோஷியக்காரர் ஒருத்தர் பீதியை ஏற்படுத்த, அதுக்கு என்ன பரிகாரம்னு மன்னர் கேட்டிருக்கார்.
Nov 9, 2022 8 tweets 1 min read
2019ல் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழ்க்கின் தீர்ப்பு வந்தபோதும் இப்படிப்பட்ட மனநிலைதான் இருந்தது. அப்பொழுது எழுதியது இந்த பதிவு. நமக்கு சம்மந்தமேயில்லாத எங்கோ ஒரு இடத்தில் கோவில் கட்டினால் என்ன மசூதி கட்டினால் என்ன? அதைப்பற்றி இங்கு பேசி ஏன் அரசியலாக்குகிறீர்கள்? அதனால் யாருக்கு என்ன பாதிப்பு?

இந்தக் கேள்விகள் உங்களில் பலருக்கும் இருந்திருக்கலாம்.இதைப் பேசுபவர்கள் ஏதோ வெறும் அரசியல் காரணங்களுக்காக இதைப் பேசுவது போல தொணலாம்.

மீறி இதைப் பற்றி பேசுபவர்களில், இஸ்லாமியர்களல்லாதவர்களை ஓட்டுக்காக பேசுபவர்களைப் போலவும்,
Nov 8, 2022 11 tweets 2 min read
ஒரு ஊரில் இருந்த ஒரே குடி தண்ணீர் குளத்தில் யாரோ விசம் கலந்து விட்டார்கள். அதைக் குடித்தவர்களுக்குப் பயங்கரம்ன பாதிப்புகள் ஏற்பட்டன; சிலர் இறக்கும் தருவாய்க்குச் சென்றார்கள்; பலருக்கு வாழ்வாதாரமே பாழானது. கோயிலுக்கு அடுத்தவீட்டில் வாழும் பூசாரி, பிறர் தீட்டுப்படாமல், கோயிலின் நல்ல தண்ணீர் கிணத்திலிருந்தே குடிப்பதால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

ஊர் பஞ்சாயத்தில் இருந்த பொதுப் பணத்தைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பைப் பொறுத்து நிவாரணம் கொடுப்பது என்று முடிவானது.
Nov 8, 2022 6 tweets 1 min read
EWS என்கிற அரிய வகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு முன்பு சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட எந்த ஒரு இட ஒதுக்கீடும் ஒரு தனிமனிதன் மீதான சாதிய அடையாளத்தை சட்டப்பூர்வமாக கட்டாயமாக்க்கியதில்லை. இப்பொழுது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை சட்டப்பூர்வமாக மாற்றியிருக்கிறார்கள். முன்பு நான் நினைத்தால் சாதிச் சான்றிதழ் வாங்கவில்லையென்றால் எனக்கு எந்தவிதமான சாதிரீதியிலான ஆவணமும் சட்டப்பூர்வமாக கிடையாது. இப்பொழுது அப்படி இல்லை. ஒரு பேச்சுக்கு எனக்கு எந்த சாதியும் இல்லை, எனக்கு சாதிச்சான்றிதழ் வேண்டாம் என்று நீங்கள்
Nov 6, 2022 6 tweets 1 min read
இது ஒரு ஆண்ட பரம்பரையினரின் கதை.

உளுந்தூர்ப்பேட்டை அருகில் உள்ள எடைக்கல் அருகில் அஜிஸ் நகர் என்று ஒரு குடியிருப்பு பகுதி இருப்பதை இந்த பகுதியில் உள்ளவர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த பகுதிக்கு ஏன் அந்த பெயர் வந்தது? தென் தமிழகத்தில் உள்ள பிறமலைக்கள்ளர் மக்கள் இங்கு ஏன்/எப்படி குடியமர்த்தப்பட்டனர் என்ற கேள்விகளுக்கான விடை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட இன மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை ஆங்கில அரசு விதித்தது.
Nov 4, 2022 4 tweets 1 min read
இரண்டுவிதமான மாடல்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

100 ரூபாய் அர்ச்சனை சீட்டு வாங்கினால் யார் வேண்டுமானாலும் கருவரைக்குள் சென்று கடவுளை வழிபடலாம் என்பது ஒரு மாடல்.

எத்தனை லட்சம் கொடுக்க தயாராக இருந்தாலும், நீ பிறப்பால் இந்த சாதியைச் சேர்ந்தவன் அதனால் உனக்கு அனுமதியில்லை என்பது இன்னொரு மாடல்.

இதில் நம்மில் பலர் முதல் மாடலைத்தான் ஆதரிப்போம். அரிய வகை ஏழைகள் இரண்டாம் மாடலைத்தான் ஆதரிப்பார்கள்.

அதுவரை பிரச்சனையில்லை. இதில் அரைகுறை போராளி வேடதாரிகள் முதல் மாடல் முதலாளித்துவம், அதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொன்னால் எப்படி இருக்கும்.
Nov 3, 2022 6 tweets 1 min read
கனிமொழி MV அவர்களின் பதிவு. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற முழக்கம் இந்திய துணைக்கண்டத்தில் எடுபடவில்லை

ஏனெனில் இங்கு தொழிலாளிகளை ஜாதி பிரித்து வைத்துள்ளது

அதை சரிசெய்யாமல் தொழிலாளர் ஒற்றுமை புரட்சி சாத்தியமாகாது

அதேபோலதான் ,இந்தியப் பெண்களே ஒன்று கூடுங்கள் என்பதும் பெண்ணியம் என்பதில் எவ்வாறு intersection feminism என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டியுள்ளதோ அதேபோல ideological backed feminismமும் இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியது

பெண்கள் பெண்களை பலப்படுத்த வேண்டும் என்பது உண்மை

அதற்காக திராவிடியா பசங்கன்னு எழுதறவங்களையும்
Oct 28, 2022 6 tweets 1 min read
ஹரப்பாவில் அன்டர் கிரவுண்ட் பிளம்பிங் சிஸ்டம் வைத்திருந்தால் அதற்கு நான் ஏன் பெருமைபட வேண்டும்.

இப்படி ஒரு நடுநிலை செக்யூரலிஸ்ட்டின் பதிவை பார்த்தேன். ஞாயமான கருத்து, ஏனென்றால் அதற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த சமயத்தில் உங்கள் முன்னோர்கள் ஸ்டெபி புல்வெளிகளில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் நாங்கள் ஹராப்பா குறித்தும் கீழடி குறித்தும் பெருமிதம் கொள்வோம், ஏனென்றால் அந்த அற்புதமான கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் எங்கள் முன்னோர்கள்.
Sep 17, 2022 6 tweets 1 min read
சங்கராச்சாரியார்:
பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பொறுப்பு உறைக்காமல், கூச்சம், கவலை, பயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் பெண் பெரிய உத்தியோகம் பார்க்கிறாள் என்று பெருமைப்படுகிற அளவுக்கு நம் தர்மம் ஹீன ஸ்திதி அடைந்திருக்கிறது. வீட்டோடு இருந்தால் அடைபட்டுக் கிடப்பது என்று அர்த்தமேயில்லை. நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் பாஷையிலும் ஸம்ஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவேயில்லை. பல பெண்கள் ஸத்ஸங்கமாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டில் இவற்றைப் படிக்கலாம்.
Aug 29, 2022 4 tweets 1 min read
கீழடி அகழ்வாராய்ச்சியில் ஏன் இத்தாலியில் கிடைப்பது போல எகிப்தில் கிடைப்பது போல பல ஆடம்பரமான பிரணமாண்டமான பொருட்கள் கிடைக்கவில்லை, கிடைக்கும் இதற்கெல்லாம் பெருமைப்படலாமா என்று நினைக்கிறார்கள்.

நமது பெருமை ஆடம்பரத்தில் இல்லை. அதற்கு மாறாக நம்மிடம் அடிமைத்தனமும் சு்ரண்டலும் இருந்தற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களை ஏமாற்றிப் பிழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
Aug 20, 2022 8 tweets 1 min read
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று பொறாமையில் வயிற்றெரிச்சலில் ஒரு அடிமுட்டாளாக எடப்பாடி பழனிச்சாமி உளறினார். WhatsApp மூலம் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தி அது. ஆட்சி மாறிய பிறகும் அதிகாரிகள் மட்டத்தில் அந்த பொதுப்புத்தி தொடர்வது நல்லதல்ல. கலைஞர் ஆசிரியர்களை மதித்த அளவிற்கு வேறு எந்த தலைவரும் இந்தியாவில் மதித்திருப்பார்களா என்று தெரியவில்லை. வக்கற்றவன்தான் வாத்தியார் வேலைக்கு போவான் என்று பழமொழியே இருந்த ஊர் இது. அதை மாற்றியவர் கலைஞர். இன்று தமிழ்நாடு உயர்கல்வி படிப்போர் சதவிகிதம் உயர்ந்து இருப்பதற்கு கலைஞரும்
Aug 19, 2022 9 tweets 1 min read
என் சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போதெல்லாம் அது யாராக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறேன். IT துறையில் இதுவரை என் சுயமரியாதைக்கு இழுக்கு வருவது போல இருந்ததில்லை. ஓரிருமுறை நடந்தாலும் என்னால் எதிர்த்து கேட்க முடிந்திருக்கிறது. பள்ளியில் பாரபட்சம் காட்டிய சில ஆசிரியர்களை நேரடியாக எதிர்த்து கேள்விகேட்டிருக்கிறேன். கல்லூரியில் அந்த நிலைமையே இல்லை. அரசுப் பணிக்கு செல்லவேண்டும் என்று சிறுவயதில் நினைத்ததுண்டு, ஆனால் என்னால் சமாளித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் காவல் துறையில் மட்டும்தான் உயரதிகாரிகள் தங்களுக்கு கீழே வேலை
Aug 19, 2022 4 tweets 1 min read
இந்நாட்டின் வளங்கள் மீது குடிமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு. மக்களின் உழைப்புதான் ஒரு நாட்டின் வளங்களாக மாறுகிறது. மக்களின் உழைப்புதான் ஒருநாட்டின் பொருளாதாரம். காலங்காலமாக அந்த வளங்களை ஒரு சிறுகூட்டம் மட்டும் சுரண்டித்திண்கிறது. அந்த வளங்களை ஓரளவிற்கேனும் பகிர்ந்தளிக்கும் செயல்தான் சமூக நலத்திட்டங்கள். உங்கள் வீட்டில் உங்கள் தேவைக்காக பெற்றோர் செய்யும் செலவை இலவசம் என்று மறுக்கிறீர்களா? ஒரு குடம்பத்தின் வளம் குடும்ப உறுப்பினர்களுக்கு செலவழிப்பது போலத்தான் ஒரு நாட்டின் வளங்களை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதும். நம் வரிப்பணம் பல லட்சம் கோடிகள்
Aug 18, 2022 7 tweets 1 min read
திமுக வட இந்தியாவிற்கும் செல்லவேண்டும் என்று சொன்னால் பல நண்பர்கள் நாம் முதலில் இருப்பதை காப்பாற்றிக்கொள்வோம், தமிழ்நாட்டில் முழுகவனம் செலுத்தினால் போதும் என்கிறார்கள். இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் வட இந்தியாவில் சங்கிகளின் ஆதிக்கம்தான் இருக்கும். நாம் தமிழ்நாட்டில் அத்தனை தொகுதிகளையும் வென்றாலும், திமுகவே தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஒன்றியத்தில் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் நமக்கு ஒருநாளும் முழுஅதுகாரம் இருக்காது. தமிழ்நாட்டில் அவர்களால் ஒருநாளும் வெல்ல முடியவில்லையென்றாலும் அவர்களுக்கு எந்த இழப்பும் கிடையாது.
Aug 18, 2022 4 tweets 1 min read
ஏன்டா எச்சக்கல சீமான், அறிவுகெட்ட முண்டம், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தினால் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க முடிந்தது. இலவச பஸ் பாஸ் கிடைத்ததால்தான் பல ஏழைக்குழந்தைகள் அடுத்த ஊரில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு படிக்கச் சென்றார்கள், இன்று தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் இளைஞர்கள் உலகெங்கும் சென்று வேலை பார்க்கிறார்களே,அதிலிருந்து உமக்கு மாதா மாதம் கட்சிப்பணி என்கிற பெயரில் உன் வீட்டு வாடகைக்கு பணம் கொடுக்கிறார்களே, அதெல்லாம் எப்படி நடந்தது. இன்று பெரிய மாநிலிங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களில் மிக குறைந்த
Aug 17, 2022 5 tweets 1 min read
பேரறிஞர் அண்ணா அவர்கள் நேருவைவிட சிறந்த தலைவர். உலகத்தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டிருக்க வேண்டியவர். இட ஒதுக்கீடு, மொழியுரிமை போன்ற விவகாரங்களில் நேரு பிற்போக்குத்தனமான ஆதிக்க மனப்பான்மையுடன்தான் இருந்தார். ஏற்கனவே கட்டமைப்புடன் இருந்த காங்கிரஸில் நேரு தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். அதற்கு அவருடைய குடும்ப பாரம்பரியமும் ஒரு வகையில் உதவியது. ஒரு கட்சியை சாமானியர்களை கொண்டு கட்டமைத்து 20 வருடங்களுக்குள் ஆட்சிப்பொறுப்புக்கே கொண்டுவந்தவர் அறிஞர் அண்ணா. அவருடைய கொள்கைகளை உலகின் எந்த நாட்டிலும் எந்த மேடையிலும் உங்களால் பேச முடியும். உலக அளவிலான மாற்றங்களை
Aug 17, 2022 6 tweets 1 min read
தாலியறுப்பு கூட்டம். இப்படி ஒரு வார்த்தை பிரயோகத்தை நம் நண்பர்களில் சிலரே சக திமுக உடன்பிறப்புகளை குறிக்க பயன்படுத்துகிறார்கள். இது மிகத்தவறான வார்த்தை பிரயோகம். வலி அவரவருக்கு வந்தால்தான் தெரியும். கள்ளக்குறிச்சி பிரச்சனையின் போது முதல் நான்கு முதல்வர் மருத்துவமனையில் இருந்தார். நான் இரண்டாம் நாளே பிரச்சனையின் தீவிரத்தை வலியுறுத்தி கோரிக்கை வைத்தேன். என்னால் முடிந்த வரை தகவலை அரசுக்கு தெரியப்படுத்த முயற்சித்தேன். பொதுவெளியில் கோரிக்கையும் வைத்தேன். ஏதாவது பிரச்சனை என்றால் அரசிடம் முறையிட பொதுவில் பேசத்தான் செய்வார்கள். அந்தக் குரல்களை கேலி கிண்டல்
Aug 16, 2022 6 tweets 1 min read
கலைஞர் இவ்வளவு எல்லாம் செய்திருக்கிறாரா? இதை எல்லாம் கலைஞர்தான் செய்தார் என்றால் மற்றவர்கள் என்னதான் செய்தார்கள்? 2018ல் கலைஞர் மறைவிற்கு பிறகு பல இளைஞர்கள் கேட்டது இவை. அதுவரைகூட கலைஞர் மீதான புரளிகளை நம்பிய பல இளைஞர்கள் உண்மை உணர்ந்து மாறத்துவங்கிய காலக்கட்டம் அது. அந்த மாற்றம் தானாக நடந்துவிடவில்லை. News7 உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றிய திராவிடக் கொள்கைபிடிப்புள்ள சில இளம் ஊடகவியலாளர்கள் தொடரந்து கலைஞரைப்பற்றிய செய்திதொகுப்புகளை வெளியிட்டார்கள். கலைஞரின் அத்தனை சாதனைகளும் காணொளித்தொகுப்புகளாக வந்தன. தான் மறைந்து பல லட்சக்கணக்கான இளைஞர்களை
Aug 14, 2022 8 tweets 1 min read
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் சியாமளா கோபாலன் அவர்கள் 1958லேயே சென்னையிலிருந்து அமெரிக்கா சென்று உயர் கல்வி படிக்கும் அளவிற்கான வாய்ப்புகளை பெற்றிருந்தார்.

அது எப்படி சாத்தியமென்றால் சியாமளா கோபாலனின் தந்தை கோபாலன் அவர்கள் ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அளவிற்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.கல்வி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட உயர் பொறுப்புகளை அடைய முடியும்.

சரி அந்த சமயத்தில் எனது தாத்தா என்ன செய்து கொண்டிருந்தார்? எங்கள் ஊர் பாளையக்காரர்கள் நிலத்தில் கிணற்றில் மாடுகளை
Apr 5, 2022 14 tweets 2 min read
உலகெங்கும் உள்ள நாடுகளில் இந்தியாவிற்கு நூற்றுக்கணக்கான தூதரகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். உங்களுக்கு தெரிந்தவர்களோ இல்லை உறவினர்களோ யாராவது தூதரகங்களில் வேலை பார்க்கிறார்களா? இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றங்களிலும் ஆயிரக்கணக்கான நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள், உங்களுக்கு தெரிந்தவர்களோ இல்லை உறவினர்களோ யாராவது அங்கு நீதிபதிகளாக இருக்கிறார்களா?