சிவாலயத்தில் பரிவார அணிவகுப்பில் உள்ள விஷ்ணுவையும், சைவர் கிருகங்களிற் ( வீடுகளில்) உள்ள சிவ வடிவ படங்களோடும், திரிபுண்டர இடப்பட்டனவாக உள்ள ( விபூதி ருத்திராக்க அணிந்த ) விஷ்ணு வடிவங்களே சைவர் வணங்கவும் அர்ச்சிக்கவும்
தகுதியானது. சித்திரோர்த்துவ புண்டரஞ் (நாமம்) சாத்தப்படாததாய் விபூதி தாரண உள்ளோரால் அர்ச்சிக்கப்படும் அனந்த சயனத்துப் பத்மநாபமூர்த்தி போன்ற (கேரளாவில் உள்ள கோயில்) விஷ்ணு மூர்த்தங்களைச் சைவர் தரிசிக்கலாம்.
~பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சைவ சமய சரபம்
பக்கம் 68
Dec 15, 2023 • 9 tweets • 4 min read
திருவேங்கடம் (திருப்பதி) முருகன்!
Thread
தேம் கடல் ஆய பராபர சண்முகன் சேத்திரம் ஆம்
வேங்கடம் தன்னை ஐந்து ஆயுதற்கு ஆக்கி அவ்வேங்கடத்தில்
புங்கடம் கொள் அரியைக் குகன் பூசித்ததாப் பொறித்தோர்
தாம் கடம் விட்ட பின்பு ஏது அடைந்தாரோ சழுக்குடனே.
விளக்கம்:
இன்பக் கடலான பராபர சண்முகனின்
திருத்தலமாகும் வேங்கடத்தைப் பஞ்சாயுதம் ஏந்துபவர்க்குரியதாக்கி, அந்த வேங்கடத்தில் அழகிய உடம்பு கொண்ட திரு மாலைக் குகப்பெருமான் பூசித்ததாகவும் எழுதிவைத்தோர், தாம் உடம்பைவிட்ட பின்னர் பொய்யினால் ஏது அடைந்தாரோ? ( அதாவது நல்லகதி ஏதும் அடையமாட்டார் என்பது குறிப்பு)
உலகிலேயே மிகப்பெரிய யானைப்படையை கட்டி ஆண்ட சோழ மன்னன், தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் - இப்படி பல சிறப்புக்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட
ராஜராஜசோழனின் தலையாய சிறப்பு என்ன தெரியுமா?!!!
இன்று நாம் படித்து உருகும் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் ராஜ ராஜ சோழனே!
ராஜ ராஜ சோழன் என்கிற மன்னன் ஒருவர் இல்லையென்றால் சைவத் திருமுறைகளே நமக்கு கிடைத்திருக்காது!
Nov 3, 2022 • 7 tweets • 5 min read
திருமணத்தடையை நீக்கும் திருச்செந்தூர் திருப்புகழ்!
நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும் கூறுகிறார்!
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும்!
இதற்கு அருணகிரி நாதர் முருகனைப்பற்றி பாடி அருளிய மந்திர திருப்புகழை
திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம், 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமண தோஷங்கள் இருந்தாலும் அத்தனையும் நீங்கி 48 நாள் முடிவதற்குள் நல்ல பதில் கிடைக்கும்!
Oct 22, 2022 • 5 tweets • 4 min read
12 வருடம் சிவபெருமானை வழிபட்ட பலன் கிடைக்க (இன்று) சனி மஹா #பிரதோஷம் வழிபாடு செய்யுங்கள்!
பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும்போது தோன்றிய ஆலாலம் எனும்
விஷத்தால் தேவாசுரர்கள் அங்குமிங்கும் ஓடியதை நினைவுறுத்தும் வண்ணம் இந்த பிரதட்சிணம் நடைபெறுகிறது!
முதலில் நந்நிகேஸ்வரரை வணங்க வேண்டும். நந்தியிடமிருந்து இடமாக(ஆண்டி க்ளாக் வைஸ்) சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அங்கிருந்து வலமாக(க்ளாக் வைஸ்) நந்தியிடம் வந்து அவரை
வணங்க