கிருஷ்ணதாசன்🇮🇳 Profile picture
உண்ணும் உணவும், பருகும் நீரும், சுவாசிக்கும் காற்றும், என்னுள்ளும், நான் பார்க்கும் அனைத்தும் கண்ணன். அனைத்தும் மாதவன் செயலே. சர்வம் கிருஷ்ண மயம்.
Dec 5, 2023 9 tweets 2 min read
இதை படித்தால் கிருஷ்ண தரிசனமே கிட்டும்

கிருஷ்ண தரிசனம் கிடைத்தால் மோக்ஷமே தேவை இல்லை என்பர். ஏனென்றால் அதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. திரிதிராஷ்டிரன் மற்றும் சூர்தாஸ் கிருஷ்ண தரிசனம் கிடைத்த உடன் இந்த உலகத்தில் எதையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறினர்.

சரி எதை படித்தால் Image கிருஷ்ண தரிசனம் கிட்டும்?

வேதத்தின் சாரம் பாகவதம். அந்த பாகவத்திற்கும் சாரம் ஒன்று உள்ளது. பாகவதமே தித்திக்கும். அதன் சாரம் எப்படி இருக்கும்? அந்த சாரத்தை கடித்து மென்று சுவைக்க வேண்டாம். நாவில் பட்டாலே சுவைத்தான். அந்த பாகவதத்தின் சாரம் தான் ஸ்ரீமன் நாராயணீயம். பாகவதத்தின்
Sep 11, 2023 4 tweets 1 min read
அனுப்புனர்,
பூலோகத்தில் இருக்கும் நான்,
பூலோகம்.

பெறுநர்,
கோவிந்தன்,
வைகுண்டம்.

Subj: என் தாழ்மையான விண்ணப்பம்.

கண்ணா,

என்ன வாழ்க்கை இது? கூட இருப்பவன் என்னை விட சம்பாதித்தால் மனம் பொறாமை கொள்கிறது. திருமணம் ஆனாலும் வேறொரு பெண் பின்னால் மனம் Image செல்கிறது. யாரேனும் நம்மை தாழ்த்தியோ மனம் வருந்தும் படி பேசினால் அங்கே "நான்" வந்து மனம் கோபம் கொள்கிறது. சண்டை வன்மம் உருவாகிறது. நீ பிரபஞ்சதுக்கு தலைவனாக இருந்தாலும் ஒரு சொட்டு ஆணவம் இல்லாமல் இருக்கிறாய். நாங்கள் சிறிய இடத்துக்கு சொந்த காரணம் ஆனாலும் மனம் ஆணவம் கொள்கிறது..
Mar 17, 2023 6 tweets 1 min read
கண்ணன் விளையாடுகிறானா?

ஒரு தம்பதி கப்பலில் பிரயாணம் மேற்கொண்டனர். அவர்களுள் கணவன் கடவுள் பக்தி கொண்டவன். சில மணி நேரம் நன்றாக சென்று கொண்டு இருந்த கப்பல் புயல் காற்றால் ஆட தொடங்கியது. அந்த தம்பதியில் பெண்ணுக்கு பயம் தொற்றி கொண்டது. ஆனால் கணவனின் முகத்தில் சுத்தமாக பயம் இல்லை. கப்பல் இன்னும் நடுக்கடலை நோக்கி போக போக புயல் காற்று அதிகமானது. கப்பலே சரிந்து விடுமோ என்கின்ற அளவுக்கு ஆட தொடங்கியது. பயணிகள் அனைவரும் அலறினர். ஆனால் அந்த பெண்ணின் கணவனோ சற்றும் பயப்படாமல் இருந்தான். அந்த பெண்
"உங்களுக்கு பயமாக இல்லையா"
"இல்லையே"
"எப்படி பயப்படாமல்
Mar 15, 2023 7 tweets 2 min read
கடவுளை ஏன் வணங்குகின்றோம்

இந்த கேள்விக்கு சரியான பதில் இல்லாததால் தான் நாத்திகமும், மதம் மாற்றமும் ஏற்படுகிறது. ஏன் வணங்குகிறோம் என்ற தெளிவு ஏற்பட்டால் யாரும் மதம் மாற மாட்டார்கள். நாத்திகமும் உருவாகாது. பொதுவாக என்ன சொல்கிறார்கள். இவரை கும்பிடு. நீ கேட்டதை எல்லாம் தருவார். Image ஒருவனை வணங்குவாய். நடந்தால் ஆனந்தம் கொள்வாய். நடக்க வில்லை என்றால் இஷ்ட தெய்வத்தை மாற்றி விடுவது.

உதாரணமாக ஒருவன் ஒரு கடவுளை வணங்குவான். அவனுக்கு நோய் ஏற்படலாம். பண கஷ்டம் ஏற்படலாம். இந்த நேரத்தில் இன்னொரு மதம் வந்து "நாங்கள் இருக்கிறோம்" என்பார்கள். அவனும் அதை நம்பி சென்று
Mar 13, 2023 11 tweets 2 min read
விக்ரக வழிபாடு

விக்ரக வழிபாடு உலக பிரசித்தம். ஆனால் பலர் "அது இறைவனை அடைய முதல் படி என்பர்". சிலர் "அதையெல்லாம் விட்டுவிட்டு ஆன்மீகத்தில் முன்னேற பார்". "விக்ரகத்தையே பிடித்து தொங்காதே" என்றும் கூறுவர். "சிலர் ஒளியை தியானம் செய். உருவத்தை உருவாக்குவது மனம்" என்பர். சிலர் Image "இறைவன் உருவமற்றவன். விக்ரகம் மனிதன் உருவாக்கியது" என்பர். சிலர் கேலியும் செய்வர். இப்படி பல பல விஷயங்கள் கூறுவர். அப்படியென்றால் ஏன் இத்தனை கோவில்கள், உருவங்கள். குல தெய்வ வழிபாடு ஏன்?

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். விக்ரகத்தை உருவாக்குவது மனம் என்றால், ஒளியை தியானிக்கவும்
Dec 9, 2022 11 tweets 4 min read
கண்ணன் - என் தோழன்.

ஒருவனுக்கு அமைந்த உயிர்த்தோழன் அவனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் உதவி செய்வானோ அங்ஙனமெல்லாம் கண்ணன் தோழனாய் உதவி செய்கிறானாம். அப்படி கண்ணனைத் தோழனாய் அடைந்தவன் பார்த்தன் அல்லவா? அவன் சுபத்திரையை மணம் செய்ய என்ன வழி, அண்ணன் பலராமன் தடையாக இருக்கிறாரே என்று கேட்டதற்கு அவளை சிறையெடுத்துச் செல்ல ஓர் உபாயம் உடனே சொல்லி உதவி புரிகிறான். வில்வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணனைப் போரில் எப்படி வெல்வது, அவன் தர்மங்கள் அவனைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றனவே இதற்கு நீதான் ஓர் உபாயம் சொல்லவேண்டுமென்று அவனைத் தஞ்சமடைந்தால் கண்ணன்
Aug 25, 2022 5 tweets 2 min read
திட்டத்தை கண்ணனிடம் விட்டு விடு

கிருஷ்ணா : என்னப்பா சோகமாக இருக்கிறாய் ?
பக்தன் (அழுது கொண்டே) : இல்லை கிருஷ்ணா. பல திட்டங்கள் தீட்டினேன். ஆனால் எதுவும் நடக்க வில்லை. நான் நினைப்பதற்கு எல்லாம் மாறாக நடக்கிறது. ஏன் இப்படி என்று அழுகையாக வருகிறது. நீ ஏன் துணைக்கு வரவில்லை. நான் என்ன பாவம் செய்தேன். கெட்டவர்கள் சிரிக்கிறார்கள். நல்லவர்கள் அழுகிறார்கள்
கிருஷ்ணா : நீ திட்டம் தீட்டியதால் நான் தலையிடவில்லை. இல்லையென்றால் நான் உனக்கு திட்டம் தீட்டி உதவி இருப்பேன்.
பக்தன் : ஆம் கிருஷ்ணா, நான் திட்டம் திட்டியதால் நானே எனக்கு துணை. ஆனால் நான் திட்டம்
Aug 23, 2022 5 tweets 2 min read
பெற்றோர்களை பழிக்காதே

பக்தன் : இந்த அம்மா அப்பா தொல்லை தாங்கவில்லை. வளர்த்தார்கள். இப்போது வயதாகி விட்டது. குழந்தை போல் நடக்கின்றனர். அறிவு இல்லையா என்ன? என்னை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள். வயது ஆன உடன் ஒதுங்க வேண்டாமா ?
கிருஷ்ணா : நீ குழந்தையாக பிறந்த போது அவர்கள் ஒதுங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். நீ இவ்வாறு பேசி இருக்க மாட்டாய்.
பக்தன் : கிருஷ்ணா. என்னை மன்னித்து விடு. ஒரு ஆதங்கத்தில் உளறி விட்டேன்.
கிருஷ்ணா : ஆதங்கமானாலும் பார்த்து பேச வேண்டும். பார்த்து எண்ண வேண்டும். என்னை பலித்தாலும் பெற்றோர்களை பழிக்காதே. ஏனெனில் நான்
Jul 29, 2022 7 tweets 3 min read
புண்ணியங்களை அர்ப்பணம் செய்

கிருஷ்ணா : என்னிடம் இருக்கும் மலர்கள் எல்லாம் என் பக்தர்கள் எனக்கு அர்ப்பணித்த புண்ணியங்கள். எவ்வளவு பூக்கள். அழகாக இருக்கிறது பார்த்தாயா.
பக்தன் : ஓ அப்படியா. கிருஷ்ணா, இந்த ஜென்மத்தில் நான் உனக்கு அர்ப்பணித்த புண்ணியங்கள் எவ்வளவு?
கிருஷ்ணா (சிரித்து கொண்டே) : இதோ இந்த ஒரு மலரின் அளவு.
பக்தன் : என்ன ஒரு மலரின் அளவுதானா? நான் எவ்வளவு புண்ணிய காரியங்கள் செய்தேன் தெரியுமா ?
கிருஷ்ணா : அதன் பலனை அனுபவித்து கொண்டுதானே இருக்கிறாய்.
பக்தன் : ஆனால் நீ ஒரு மலரை மட்டுமே காண்பிக்கிறாய்.
கிருஷ்ணா : நான் கூறிய வார்த்தையை
Jun 3, 2022 6 tweets 1 min read
தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விமானம்...
கடவுளை நம்பாத ஒருவர் விமானத்தில் ஏறுகிறார்.
பக்கத்து சீட்டில் ஒரு சிறுமி பேப்பரில் விநாயகர் படம் வரைந்து கொண்டிருக்கிறாள்.
பேசத் துவங்கினார் அவர், “என்னம்மா பண்ற படம் வரையறாப்ல இருக்கு?
இதுக்கு பதிலா நாம பேசிக்கிட்டே சென்னை வரைக்கும் போனோம்ன்னு வை நல்லா பொழுது போகும்ல...”
சிறுமி கொஞ்சம் புன்னகைத்து பேப்பரை மூடி வைத்து விட்டு கை கட்டி கொண்டு கேட்டாள்.
“என்ன பேசலாம் அங்கிள்..? சொல்லுங்க...”
“என்ன வேணா பேசலாம்மா. கடவுள் அப்படீங்கறத பத்தி பேசலாம்.
அது எவ்வளவு முட்டாள்தனம்னு பேசலாம். முன்
May 31, 2022 9 tweets 4 min read
இறைவனை பற்றிய ஞானம்

கண்ணனை யாரும் நம்புவது இல்லை. "எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன். அவனே எல்லாம் இயக்குகிறான்" என்று வாய் சொல்லுமே தவிர மனம் நம்புவதில்லை. கோவிலுக்கு செல்லும்போது மனம் நம்பும். அடுத்த கணம் அந்த ஞானம் மறைந்து போகும். உதாரணமாக ஒருவனின் இறுதி சடங்குக்கு Image செல்கிறாய் என்று வைத்து கொள்வோம். "அப்போது உலகம் நித்தியம் இல்லை. கடவுளே சத்தியம்" என்று கூறுவாய். ஆனால் வீட்டிற்கு வந்த உடன் அதை மறந்து மறுபடியும் உலக விஷயங்களில் முழ்குவாய்.

நாமும் கோவிந்தனை வணங்குகிறோம். ஆனால் மனதில் நம்பிக்கையும் இல்லை. அன்பும் இல்லை.

கடவுளிடம் போய் Image
Apr 28, 2022 5 tweets 2 min read
கண்ணனின் பரிசு

கிருஷ்ணா : நீ என் நாமத்தை ஜெபிப்பதற்காகவும், என் மீது நம்பிக்கை வைப்பதினாலும், என் மீது நீ வைத்து இருக்கும் அன்பினாலும் உனக்கு ஒரு பரிசளிக்க எண்ணுகிறேன். என்ன பரிசு வேண்டும். பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா ?
பக்தன் : வேண்டாம் கிருஷ்ணா.
கிருஷ்ணா : ஏன் ? பக்தன் : நீ கூறும் பொருட்கள் இன்பம் அளிப்பது போல் தோன்றும். ஆனால் பெரிதும் துன்பம் விளைவிப்பவை. உன் மாயையில் சிக்க வைப்பவை. எனக்கு அது வேண்டாம்.
கிருஷ்ணா : என்ன இப்படி சொல்லி விட்டாய். என்னிடம் அனைவரும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் உன் முன்னால்
Apr 27, 2022 10 tweets 2 min read
கடவுள் நம்பிக்கை

ஒருவன் பாலத்தில் தொங்கி கொண்டு கடவுளே காப்பாற்று என்கிறான். கடவுளோ "கீழே குதி. நான் காக்கிறேன் என்கிறார்". அவனுக்கோ நம்பிக்கை இல்லை. "வேறு யாரவது இருக்கீங்களா " என்று கேட்கிறான்.

மேலும் கடவுள்,
கிருஷ்ணா : என்னிடம் சரணடை. நான் உனக்கு தேவையானதை செய்கிறேன்
நாம் : நீ முதலில் செய். அப்புறம் சரணடைகிறோம்.

இதற்கு காரணம் நாம் அவனை நம்பவில்லை என்று அர்த்தம். கீழே உள்ள கதையை படியுங்கள். அவன் மீது நம்பிக்கை வரும்

பிரசாத் மும்பையில் ஒரு பெரிய டாக்டர். ஒரு நாள் கொல்கத்தாவில் ஒரு conference மீட்டிங் என்று அவருக்கு ஒரு