#வில்வம் (Vilvam), சிவனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்வார்கள்.ஏனென்றால், வில்வத்தினுடைய அதிர்வுகள் நாம் சிவலிங்கத்தில்ல் இருக்கும் அதிர்வுகளுடன், பெருமளவிற்கு நெருக்கமாக இருக்கிறது.
இதனால் தான் வில்வ இலைகளை சிவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம். அதன் மூலமாகத் தான் நாம், தெய்வீக சக்திகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.
ஏனென்றால் வில்வத்திற்கு அந்த அதிர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள கூடிய சக்தி, பெருமளவில் இருக்கிறது.
Jul 12, 2022 • 12 tweets • 2 min read
சூக்ஷ்ம திருஷ்டி...
சேஷாத்திரி சுவாமிகள் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது. நமக்கு புலப்படாத சூட்சும உருவங்கள் கூட அவருக்கு தெரியும்.
ஒரு முறை காஞ்சியில் சிறிய தந்தையோடு இருந்த போது, சுவாமிகள் தன் சிற்றப்பாவுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென பாதியில் எண்ணெய் தேய்ப்பதை நிறுத்தி விட்டு முற்றத்தில் நின்று திறந்த வெளியில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார்.
பிறகு எதையோ கைதட்டி தாளம் போட்டு கேட்டார். சிறிய தந்தை வியப்பு மேலிட `என்ன பார்த்தாய்? எதற்கு தாளம் போட்டாய்?` என்று கேட்டார்.
Jul 12, 2022 • 17 tweets • 2 min read
உண்மையான ஜீவ சமாதி எது?
மனம் முழுமையாக இறைத் தன்மையை உணரமுடியாமல்
ஏகாந்த நிலையை
அடைய முடியாமலும்
ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் போக முடியாமல் அதே இடத்தில் நின்று கொண்டு இருப்பதுதான் பித்து நிலை.
அப்படிப்பட்டவர்கள்
தான் என்ன செய்கிறோம்
என்ன பேசுகிறோம் என்பதையும்
அவர்கள் முழுமையாக உணர முடியாமல்
சிறுது நேரம் இங்க இருப்பதும்
சிறிது நேரம் அங்கு இருப்பதுமாக
ஒரு நிரந்தரத் தன்மை இல்லாமல்
அலைந்து கொண்டிருப்பார்கள்.
Jul 11, 2022 • 9 tweets • 1 min read
ஆனி மாத சோமவார பிரதோஷம்...!!
🙏 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
🙏 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம் ஆகும்.