எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
-தமிழீழ தேசிய தலைவர்-
Dec 29, 2021 • 25 tweets • 4 min read
சிறிலங்கா அரசிற்கு இன்று உலகநாடுகளின் கடனஉதவித்திட்டங்கள், சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகள் என அனைத்தும் கிடைத்தே பெரும் பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள மக்கள் உண்ண உணவின்றி வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் புலிகளோ உலகநாடுகளின் எந்த உதவியுமின்றி தம் சொந்தக்காலில் தமது பெரும்
பொருளாதரத்தை வளர்த்து தமது மக்களை வாழவைத்தார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை: 01. இராணுவம் 02. கடற்புலிகள் 03. வான்புலிகள் 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
Nov 20, 2021 • 5 tweets • 2 min read
நினைத்துப் பார்க்கின்றேன்!
ஒரு துப்பாக்கி கூட அறியாத தமிழனை, வேலோடும் வில்லோடும் களமாடிய கதைகளே வரலாறாக கொண்ட தமிழர் பரம்பரையை, உயிரை ஆயுதமாய் ஊதிவிடும் தியாகத்தை உலகுக்கு தந்த தலைமையை,
இலக்கை நோக்கிச் செல்ல தடைகளை உடை அல்லது அதை தாண்டி பாய் அல்லது இன்னொரு பாதையை பார் என எப்போதுமே ஓயாமல் சுழலும் அர்ப்பணிப்பை,
என்குடும்பம் என்பதும் எங்கள் மக்கள் என்பதும் ஒன்றே என தனது பிள்ளைகள் இருவரை களத்திலே எதிரியை பொருதவிட்ட ஒப்பற்ற மாவீரத்தை,