ராஜ்ராஜே Profile picture
மனம் போன போக்கில்.....
Jan 8, 2021 7 tweets 1 min read
இன்றைக்கு தானே (மும்பை) போலீஸ் கமிஷனர் ஆபீஸில் நடந்தது

உங்கள் பெயர் இவ்வளவு மட்டும்தானா? சர் நேம் ஏன் போடவில்லை?

நாங்கள் சர் நேம் போடுவதில்லை... மேடம்.

ஏன்?

அது பெரிய கதை மேடம், அதற்கு பெரிய வரலாறே இருக்கிறது மேடம்.

ஆனா உங்க அப்பா பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் இருக்கிறதே!... ஆமாம் மேடம், அப்பா, தாத்தா எல்லாம் ஜாதி பெயர் போட்டார்கள் அது அந்தக்காலத்தில் நடைமுறை அதற்குப் பிறகு மாறிவிட்டோம்!

ஏன்? அப்படி செய்தால் யார்? இன்னார் என்று எப்படித் தெரியும்?

அப்படித் தெரியக்கூடாது என்றுதான், ஜாதி பெயர் போடக்கூடாது என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது மேடம்.
Nov 27, 2020 7 tweets 3 min read
ஆரியத்தின் வேரறுக்க...
திரு. முரசொலி மாறன் அரசியலுக்கு வந்த கதை!

மொட்டை மாடியில் போய் அமர்ந்தோம். “இங்க பார்! இப்ப என் இடத்திலே, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு, முரசொலி மாறனை நிறுத்தலாம்னு நான் முடிவு பண்ணியிருக்கேன். சீக்கிரமே பைஎலக்ஷன் வந்துடும், கருணாநிதி ஒத்துக்கலெ! வீட்டிலே அவுங்க அக்கா எல்லாருமே வேண்டாம்ண்ணு சொல்றாங்களாம். நீ அவுங்க எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வக்கணும், அது உன்னாலெதான் முடியும்” என்றார் அண்ணா என்னிடம்.
Nov 26, 2020 5 tweets 1 min read
ஒரே நாடு ஒரே தேர்தல்... ஏதோ காரணத்தால் நாட்டின் பிரதமர் இறந்துவிட்டார் அதனால் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டு ஆளும் கட்சி பிளவுபட்டு அரசு மெஜாரிட்டி இழந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம், அப்போது குடியரசு தலைவர் ஆட்சி தானே வரும்? இல்லை பிளவுபட்ட ஒரு பிரிவிடம் நாட்டை ஆள கொடுப்பார்களா? மீதமுள்ள அத்தனை வருடங்களுக்கு அதாவது அடுத்த தேர்தல் வரும் வரையில்! மெஜாரிட்டி இல்லாமல் அந்த பிளவுபட்ட பிரிவினர் ஆட்சி செய்வார்களா!? இது ஜனநாயகமா?

இல்லை குடியரசு தலைவர் அடுத்த தேர்தல் வரும் வரையில் ஆட்சி செய்வாரா? இது சர்வாதிகார ஆட்சியை கொண்டு வராதா?
Nov 25, 2020 6 tweets 1 min read
பார்ப்பன வீடுகளிலும், குடும்பங்களிலும் புகழப்படும் வீரர்கள், வீராங்கனைகள் எவரும் மனித சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல. ஏனெனில் உண்மையான வீரனோ, வீராங்கனையோ உருவாகக் கூடிய சமூக, பொருளாதாரச் சூழ்நிலையிலிருந்து பார்ப்பனர் வாழ்க்கை முற்றிலும் விலகியுள்ளது. அவர்களுடைய சமுதாய அமைப்பில் சுலோகங்களையும் மந்திரங்களையும் தெளிவாக சொல்வதே முக்கியமானதாகக் கருதப்படுகிறது, இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை போன்றவற்றை மனப்பாடம் செய்வதையே ஒரு மிகப்பெரிய சாதனையாக அவர்கள் கருதுகிறார்கள். பெண் என்பவள் கணவனிடம் பக்தியாக நடந்து கொள்பவளாகவும்...
Nov 25, 2020 4 tweets 1 min read
பேரறிவாளனுக்காக மட்டுமே தொடக்கத்தில் இருந்தே முன்னெடுத்து இருக்கவேண்டும், மற்றவர்கள் நேரடி குற்றச்சாட்டு உள்ளவர்கள் / தெரிந்தே துணைப் போனவர்கள்.

ஆனால் பேரறிவாளன் எதற்கு என்றே தெரியாது ஒரு 9v பேட்டரி வாங்கியது விசாரணை அதிகாரிகளே ஒப்புக்கொண்டதாகும்.

இதையே காரணமாக காட்டி... என்றோ வெளியே வந்திருக்க வேண்டிய ஆள், அற்புதம் அம்மாவுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போகாத இடமெல்லாம் போனார் தன் மகனுடன் அந்த 6 பேரையும் சேர்த்துக் கொண்டார்.

வழக்கம் போல ஈழ வியாபாரிகள் பேரறிவாளனுக்கு என்று மட்டும் கேட்காமல் தங்கள் ஈழ வியாபாரம் பிசுபிசுத்து விடும்...
Nov 22, 2020 29 tweets 6 min read
யார் இந்த சாணக்கியன்?

கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28 பிறக்கும் போதே எல்லா பற்களுடன் பிறந்தானாம் இதனைக் கண்ட ஒரு ஞானி இவன் இந்த உலகையே ஆள்வான் என்று ஆரூடம் சொன்னாராம், அதைக் கேட்ட சாணக்கியனின் தந்தை அதிர்ந்து பிராமணன் நாடாளுவது தர்மம் இல்லை வேதம் ஓதுதல் தான் பிராமணன் கடமை தர்மம் என்றுச் சொல்லி உடனே சாணக்கியனின் பற்களை… 2/28
Oct 26, 2020 30 tweets 7 min read
தமிழனுக்கு கடவுள் உண்டா?

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, (1/29) உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, (2/29)
Oct 25, 2020 4 tweets 3 min read
லீலா... லீலா... பஞ்சாப் லீலா... அடங்காத லீலா....
Oct 25, 2020 19 tweets 2 min read
நவராத்திரியாம்!

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.
Oct 24, 2020 8 tweets 2 min read
உங்கள் மனைவி திருமணத்துக்கு முன்பு விபச்சாரி ???

மந்திரம்: ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம் பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான்....
Oct 24, 2020 17 tweets 2 min read
பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை. 9.3: இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்.
Oct 24, 2020 9 tweets 8 min read
பெரியார் எழுதிய...

மனு நீதி: ஜாதிக்கொரு நீதி

பட நூலாக jpg format ல்

14 பக்கங்கள் மட்டுமே...

#RejectManu #சனாதனம்_வீழ்த்துவோம் உலகில் எந்த நாட்டிலாவது சொந்தநாட்டு மக்களை, உழைக்கும் மக்களை, வேறு இனத்தவர் தங்களது வைப்பாட்டி மக்கள் என்று அழைக்கக்கூடிய அநீதி எங்காவது உண்டா?

#RejectManu #சனாதனம்_வீழ்த்துவோம்
Oct 22, 2020 36 tweets 8 min read
சமஸ்கிருத சனியன் - தேசீயத் துரோகி

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். 1/25 ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம். 2/25
Oct 21, 2020 12 tweets 1 min read
சனாதனம் பெண்களை மதிக்கிறதா???

\\"எங்கு பெண்கள் மதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக உள்ளார்களோ! அங்கே தெய்வம் உள்ளது " என்பதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படை\\

இதோ உங்கள் சனாதனம் தூக்கிப்பிடிக்கும் "மனுதர்மம்"👇👇👇 இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
அத்தியாயம் 9 செய்யுள் 3
Oct 21, 2020 15 tweets 4 min read
நாலு தலைச் சாமிகள்,
மூன்று கண் சாமிகள்,
மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி,
ஆனை முகச்சாமி, ஆழிவாய்ச்சாமி,
பருந்தேறும் சாமி,
காளை ஏறும் கடவுள்,
காக்கை மீது பறக்கும் கடவுள்,
தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம்,
🔥🔥🔥 ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே.
🔥🔥🔥
Oct 20, 2020 20 tweets 6 min read
இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா?

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது."இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால்,
Oct 19, 2020 8 tweets 2 min read
GST - அறிஞர் அண்ணா அன்றே சொன்னது 👇👇👇

மாநில அரசுகளிடமிருந்து வரி வசூலிப்பதை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொள்ளும் போக்கு ஒரே அரசியல் கட்சி எல்லா இடங்களிலும் ஆண்ட போது சரியானதாக இருக்கலாம்.👇 இப்போழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்து சரியானதாக இருக்காது.

சிலர் "யார் வரி வசூலித்தால் என்ன? அந்தப் பணம் இந்தியாவுக்குள் தானே இருக்கிறது?" என்று விசித்திர வாதம் புரிகிறார்கள்.👇
Oct 18, 2020 8 tweets 1 min read
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.

வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான்.👇 அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை.👇
Oct 1, 2018 28 tweets 4 min read
தோழர்களே இது ஒரு நீண்ட பதிவு திரி நேரம் ஒதுக்கி படிக்கவும்!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு நாளன்று நான் ஒரு ட்வீட் செய்து பின் வருமாறு கேட்டேன்...