சுந்தரேசன்/सुंदरेसन/Sundaresan 🇮🇳 हिन्दुस्तानि Profile picture
तु 13 देख, நற்றுணையாவது நமச்சிவாயவே! சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை!
Feb 29, 2020 23 tweets 5 min read
எழுத்தாளர் ஜெயமோகன் :-
1980களில் நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பாதிப்பேர் இந்துக்கள் அடங்கிய எங்கள் கல்லூரியில் உச்சகட்ட மதமாற்றப் பிரச்சாரம் நிகழும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இருசாராருமே இந்துக்களை நோக்கி ‘உங்களுக்கு வெறும் சடங்குகளும் ஆசாரங்களும் மட்டுமே உள்ளன.+ உங்கள் மதத்தில் ஞானநூல்கள் இல்லை. எங்களுக்கு மெய்நூல்கள் உள்ளன’ என வாதிடுவார்கள்.
நான் உட்பட எந்த இந்து மாணவனுக்கும் இந்துமதநூல்களைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இந்து தத்துவமோ ஆன்மீகமோ தெரியாது. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும்.
+
Feb 24, 2020 20 tweets 5 min read
கும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் !!!

கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.

கும்பாபிஷேகத்தின் வகைகள்:-
+ ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. +
Jan 24, 2020 12 tweets 4 min read
சமஸ்க்ருதத்தில் ஏன் ? தமிழில் மந்திரம் ஓதக்கூடாதா ...? .....என பேசும் புரட்சி மேதாவிகளுக்கு சமர்ப்பணம்!!

விஞ்ஞானமும் மெய்ஞானமும் வெவ்வேறல்ல என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். Yes..

அதை உறுதி செய்யும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் ரிஸர்ச் செய்வேன். Yes./1 சமீபத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த திவசத்தில் கலந்து கொண்டேன். அந்த உறவினர் கொஞ்சம் மேதாவீ + புரட்சிச் சிந்தனைகள் (என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்) கொண்டவர்.

சாஸ்திரிகள் சொல்கிற மந்திரங்களை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்./2
Jan 22, 2020 11 tweets 3 min read
எம்.ஜி.ஆர் கூடத் துணியாத, தயங்கிய செயலைத் தமிழகத்தில் செய்யத் துணிந்து விட்டார் ரஜினி... சோசியல் மீடியா, பிரிண்டிங் மீடியா, காட்சி ஊடகம் என ஒட்டுமொத்த மீடியாவும் அலறுகிறது... /1 திமுகவில் இருந்த காலத்திலேயே இந்த கருஞ்சட்டை கூட்டத்தில் ஒட்டியும் ஒட்டாமலும்தான் தனது அரசியலை முன்னெடுத்தார் எம்.ஜி.ஆர். பெரியாரையும் திமுக, திகவின் இந்து மத எதிர்ப்பு அராஜக செயல்களையும் பெரியளவில் எதிர்க்காமல் இலைமறைக் காயாகவே தனது இறை நம்பிக்கையை நிறுவினார். /2