இரண்டு வருடங்களுக்கு முன்பு NLC ஷேர் பரிந்துரைத்து இருந்தேன்.. அப்போது அதன் விலை அறுபது ரூபாய், அதில் நம் நண்பர் ஒருவர் ஆயிரம் ஷேர் வாங்கி அறுபதாயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தார்.. அடுத்த வாரமே அது 80க்கு வந்துவிட்டது.
ஒரு வாரத்தில் 20000 லாபம் என்பது பெரிய விஷயம்.. உடனே பங்குகளை விற்றுவிட்டார்.. அந்த நாளில் இருந்து NLC ஷேர் இறங்கி 68 ரூபாய்க்கு வந்துவிட்டது.. நண்பருக்கு சந்தோசம்.. நான் மட்டும் விக்கலன்னா வந்த லாபம் போயிருக்கும் என்று தன அறிவை மெச்சிக் கொண்டார்..
Sep 16, 2021 • 11 tweets • 2 min read
ஷேர் மார்க்கெட் ஏன் ஆபத்தானது ?
பத்தாயிரம் இருபதாயிரம் அம்பதாயிரம் இல்லன்னா ஒரே ஒரு லட்ச ரூபாய் வச்சுக்கிட்டு ஷேர்ஸ் வாங்கி டிரேடிங் பண்ணனும்.. அதுக்கு மேல காசு உள்ள போடக்கூடாது.. அது சம்பாதிக்கிற காச மறுபடியும் ட்ரேடிங்ல போட்டு மேற்கொண்டு சம்பாதிக்கலாம் என்று எண்ணம் இருந்தால்
உங்களுக்கு ஷேர் மார்கெட் ஒத்து வராது.. எல்லா பணத்தையும் நஷ்டப்பட்டு தான் வெளில வருவிங்க. ஏன்னா இந்த டிரேடிங் இருக்கே அது மனதை ஸ்திரமாக வைக்காது..
Sep 15, 2021 • 5 tweets • 1 min read
பங்குச் சந்தைக்கு வருபவர்கள் ஒருநாளும் யார்கிட்டயும் போயி எனக்கு டிப்ஸ் கொடுங்க நல்ல ஷேர்ஸ் சொல்லுங்கன்னு கேட்காதிங்க.. அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கவே செய்யாது.. ஏன்னா மார்கெட் எப்பயும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்..
இப்ப நான் ஒரு ஸ்க்ரிப்ட் சொல்லி இது நல்லாருக்கும்ன்னு பரிந்துரை செஞ்சு அதை கண்ண மூடிக்கிட்டு நீங்க வாங்கிட்டா என்ன ஆகும்ன்னா அதோட பாயின்ட் இறங்கும் போது கேபிடல் போயிடுமோன்னு பயந்து லாஸ்புக் செஞ்சு நஷ்டத்துல வித்துட்டு வெளில வந்துடுவிங்க..