இமயவரம்பன் பெருஞ்சேரலாதன் Profile picture
என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்.
Jul 12, 2022 7 tweets 2 min read
@SaalanPaari நிர்வாக வசதிக்காக இந்தியாவை மொழிவாரி நாடுகளாக பிரிக்காத போது தமிழ்நாட்டையும் பிரிக்கக்கூடாது என்பது நமது நிலைப்பாடாக இருந்தாலும், எனக்கு சில கேள்விகள் உள்ளன. எனது புரிதல் தவறாக கூட இருக்கக்கூடும். படித்துப்பார்த்து விளக்கவும். (1/n) பிரிப்பதால் நமக்கு சில/பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டாக பிரித்தபிறகும் பாஜகவுக்கு எதிராகவே உள்ளனர். பிரிப்பதால் திராவிடத்தை எளிதில் வெல்ல வாய்ப்பு. பாண்டிசேரி என்கிற தமிழர் மாநிலம் இப்போதும் இருக்கிறது, அதனால் தமிழர் தேசியம் கெட்டுவிட்டதா?(2/n)
May 12, 2021 10 tweets 2 min read
விக்கி, நீ தமிழ்த்தேசியன் என்பதை விட்டு திராவிடன் என்கிற பாதையில் செல்வதை போல தான் உனது சமீபகால செயல்பாடுகள் உள்ளது. திருட்டு திராவிடர்கள் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு வருகிறாய், அதிமுகவை, திமுகவுக்கு இணையாக எதிர்க்கவேண்டும் என்கிறாய். உனது புரிதல் என்ன? ஆம், தமிழ்த்தேசியர்கள் இரு திராவிட கட்சிகளையும் எதிர்க்கிறோம். ஆனால், ஏன் திமுகவை அதிகம் எதிர்க்கிறோம் என்பது ஒன்னரை லட்சம் ஈழத்தமிழர் இனஅழிப்பு இழப்பையும், அதிமுக அடிமை அரசின் கொடுமைகளையும், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தமிழர் உரிமை இழப்பையும் ஒரே தராசில் வைக்க முடியாது.
May 7, 2021 13 tweets 2 min read


விக்கியின் கேவலமான பேச்சு. வன்மம் தெரிகிறது. கட்சிக்கு நல்லது சொல்வது போல் தெரியவில்லை. காங்கிரஸ் சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. நாம் தமிழர் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி. யார் பரவலாக எல்லா தொகுதியிலும் பலம் உள்ளது என்பது முக்கியம். 2026ல் எதை வைத்து ஆட்சியை பிடிப்பேன் என்கிறது நாதக என்று கேட்கிறார். இரண்டு மாதம் முன்பு வரை நாம் தமிழரை ஆதரித்து காணொளி போட்ட இவர், 2021ல் ஆட்சியை நாதக பிடிக்கும் என்று சொன்னதை ஏன் எதிர்க்கவில்லை? ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே குறிக்கோள், நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது.
Apr 9, 2021 23 tweets 8 min read
@vickykarikalan விக்கியின் கருத்துக்கள் அனைத்திலும் உடன்பாடு இல்லை, சிலவற்றில் அணுகுமுறை சரியில்லை. மற்றபடி, அவரின் பல கருத்துக்கள் சரியானவை, கவனத்தில் எடுத்து கொள்ளபட வேண்டியவை. அதேபோல், அருளினியனின் கருத்துக்களில் சில முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவை முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. @vickykarikalan எங்கவீட்டு காக்கா மஞ்சள்கரு தான் சாப்பிடும் என்ற வெட்டி பந்தா, சீமானுக்கு அந்த கருத்தையே சொல்லணும்னு அவசியமில்லையே, ஏன் வாயை கொடுத்து வாங்கி கட்டவேண்டும்? எதற்கு தனக்கு தானே ஆப்பு வைக்கவேண்டும்? உளறுவாயாக இருப்பது கெடுதலாக முடியும். எதை சொல்லணும், எதை விடணும் என்பது முக்கியம்.
Apr 7, 2021 4 tweets 1 min read


விக்கியின் கேள்விகள் சரியானவை. பேசுவது மட்டுமே தலைமைபண்பு இல்லை. சரியான முடிவை எடுப்பது, எதை பேசுவது எதை பேசாமல் விடுவது என பல. நேர்காணலில் உளறிகொட்டுவது, சீண்டுவதை, போட்டுவாங்குவதை கூட புரிந்துகொள்ளாதன்மை. ராஜா நாடாரை "போனை வையுடா dvd" என்பதா தலைமைபண்பு?

சீமான் கோவத்தில் பேசிவிட்டார் என்பது சிறுபிள்ளைத்தனம். ஒருவர் தன்னை சீண்டுகிறார் என்று தெரிந்தால், தொடர்பை துண்டித்துஇருக்கலாமே, அதைவிடுத்து அசிங்கமாக பேசினால் அதை பொதுவெளியில் வெளியிடதான் செய்வார்கள்? இதை மாற்றிக்கொள்ளாவிட்டால் பாதிப்பு கட்சிக்கு தான்.
Jan 4, 2021 12 tweets 2 min read

@Jeba_here தவறான பார்வை.
பாஜவை எதிர்கொள்ள சரியான வழி இருவேறு தத்துவங்களை தமிழ்நாடு முன்னிறுத்துவதே. அதாவது திராவிடம், தமிழ்த்தேசியம். பாஜகவை திராவிட, தமிழ்த்தேசிய கட்சிகள் சேர்ந்து முதல் எதிரியாக இந்த தேர்தலில் எதிர்ப்பதால் அவர்கள் ஓடி போய்விடுவார்களா? 1/n அடுத்த தேர்தலில் பணத்தை கொண்டு அடித்து இன்னும் பிரபலமான முகங்களை அழைத்து வரத்தான் போகிறார்கள். அதிகாரம், பணம் இருக்கும் வரை அவர்களை தவிர்க்க முடியாது. இனமாக, மதநல்லிணக்கம் பேசி, அனைவரின் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைவதே பாஜகவை வீழ்த்தும் கொள்கை. (2/n)
Sep 9, 2020 22 tweets 4 min read
இதுவரை பல காணொளிகளை பொறுமையாக பார்த்துவிட்டேன். இது தான் எனது சாராம்சம். கல்யாணசுந்தரம் மீது பல *சரியான* குற்றசாட்டுகள் உள்ளன (சில தவறானவை). ஆனால், அவற்றை சீமான் ஏன் கல்யாணசுந்தரத்திடம் பகிர்ந்துகொள்ளவில்லை? 5 மாதம் வரை ஏன் அவரின் அழைப்புகளை எடுக்கவில்லை, வந்தவரை சந்திக்கவில்லை? இடும்பை காணொளியோ, துரைமுருகன் காணொளியோ, சீமானின் காணொளியோ இந்த பிரச்சனையை சரிவர பேசவில்லை. அதில், பல குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. நான் பார்த்த செந்தில்நாதனின் காணொளியும், தடம் காணொளியும் இதை சரியாக அணுகி இருந்தனர். கல்யாணசுந்தரத்தின் மீதான குற்றசாட்டை சரியாக சொல்லியிருந்தனர்.
Sep 7, 2020 39 tweets 5 min read
அண்ணன் கொடுத்ததுதான் எல்லாம் என்றால், அண்ணனுகான வெளிச்சத்தை கொடுத்தது தேசியதலைவர் பிரபாகரன். ஆம், சீமான் எல்லோரும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்ள பயந்த நேரத்தில் அதை முன்னிறுத்தினார். அவர் பிரபாகரனை முன்னிறுத்தியதால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இனஅழிப்பு நடந்ததால் வந்த கோபத்தின் விளைவு தான் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீமானுக்காக வந்த கூட்டம் அல்ல. அது ஈழ தமிழருக்காக வந்த கூட்டம், தேசிய தலைவருக்காக தானாக சேர்ந்த கூட்டம். அதிதி புகழ்ச்சி சீமானுக்கு கொடுக்கவேண்டாம். அவர் ஒருங்கிணைத்தார்.