நர்சிம் Profile picture
Feb 25, 2023 5 tweets 1 min read
நண்பகல் நேரத்து மயக்கம். ஒரு நல்ல காட்சியனுபவம். குறிப்பாக செவிக்கின்பம். நாம் ரசித்த அத்தனைப்பாடல்களும் மிகச் சரியான காட்சிகளுக்கு பக்கபலமாக் அமைகிறது. குறிப்பாக டிவியில் ஓடும் வசனங்கள் எல்லாமே கதையோட்டத்தின் அம்சம்தான்.
கலைநேர்த்தியில் இன்னுமொரு நகர்வு, இப்படம். தேசிய விருத எடுத்து வைக்கச்சொல்லு, குளிச்சிட்டு வந்துர்றேன்' என்பதுபோல் மம்முட்டியின் நடை,நிகழ்வுகள். நடிப்பு என எழுதமுடியாத அளவு இயல்பான ஒன்று. ஆனால் அவ்வளவு மெதுவாக நகரும் படமாக இருந்தாலும் ஈர்க்கவைத்தது எனில் அது, துணை நடிகர்கள்தான்.அனைவருமே அவ்வளவு நேர்த்தி.மகள்,டிவி பாட்டி
Oct 15, 2022 6 tweets 1 min read
"எனக்குக் கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காகக் கொன்றேன்" -
இதுதான் வாக்குமூலம். கொலைபாதகச் செயல். நிறைய எழுதி இருக்கிறோம். ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது மாறப்போவதில்லை போல, ஏனெனில் இந்த எண்ணம் அத்தனை நூற்றாண்டுகளாக ஆண் மனதின் ஆழத்தில் படிந்த அமிலம் வேட்டைச் சமூகத்தின் எந்த ஆணை தனக்கான அன்றைய ஆணாக இருக்கலாம் என தீர்மானிக்கும் சக்தியாக இருந்தாள் தாய்வழிச்சமூகப் பெண். ஓர் ஆணின் இந்த "எனக்கு மட்டுமே" என்ற இச்சையின் பொருட்டு குடும்ப அமைப்பாக அது அமையத் துவங்கியதில் இருந்து இந்த 'எனக்குக் கிடைக்காத' வரை ஆகியிருக்கிறது
Jul 14, 2022 5 tweets 1 min read
பொன்னியின் செல்வன்- ஐந்து ட்விட்டில்

சுந்தர சோழன்- இவருக்கு 2 மகன்கள், ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், ஒரு மகள், குந்தவை.
சுந்தரசோழனை வீட்டுக்காவலில் வைத்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள் பழுவேட்டரையர் & அவர் தம்பி.
ஆ.கரிகாலன் காஞ்சியிலும், அருள் இலங்கையிலும் வசிக்கிறார்கள் பழுவேட்டரையரின் இளம் மனைவி- நந்தினி. ஆதித்த கரிகாலனால் வெட்டி வீழ்த்தப்பட்ட பாண்டியனின் காதலி. இதனால் நந்தினி சோழர்குலத்தை அழிக்கவேண்டும் என நினைத்து பழுவேட்டரையருக்கே தெரியாமல் பாண்டியர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறாள்.
Mar 28, 2022 7 tweets 1 min read
அச்சம் மடம் நாணம் பயிர்ப்புனு ஒரு..அதாவது..ஒரு பருவப்பெண் தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் போக்கும்விதமாக ஆணுறை வாங்கி தன் ஆளுடன் கூடுவது எனும் கதையை, ஏதோ புதிய, இன்றைய தலைமுறையினரின் பிரச்சனையை அப்படியே காட்டிவிட்டதாக நினைத்து..நினைத்து? பாவத்த..எவ்வளவு நல்ல ஸ்க்ரிப்ட்டுகளுடன் ஒருவேளை காப்பி,டீ என அல்லாடிக்கொண்டு வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவேன். இப்படி..கதையாக எந்த புதுமையும் இல்லாமல் காட்சியமைப்பில் எந்தக் கவித்துவமும் இல்லாமல்..இதை எப்படி இவ்வளவு பொருட்செலவில் எடுக்க சம்மதிக்கிறார்கள் !
Nov 26, 2021 5 tweets 1 min read
இன்று அரசு மற்றும் தனியார் துறைகளின் உயர்பதவியில் இருப்பவர்களில், 75% (ஆம்!) அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் 12 வது வரை தமிழ்வழிக் கல்வியிலும் பயின்றவர்களாக இருப்பார்கள்..இருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக பெருகி வரும் தனியார்,ஆங்கில வழி சந்ததியினர்க்கும் முந்தையவர்களுக்குமான ஆகப்பெரிய வேறுபாடு, ஆழம். முன்பிருந்த தாய்மொழிக் கல்வியின் வழியே கிடைத்த ஆழமான அறிவு, தமிழ் இலக்கணத்தின் அடிப்படை இவை இப்போது மேம்போக்காக இருப்பதை, உற்று நோக்கினால் உணரலாம். இதை எல்லாம் விடுங்கள், தனியார், ஆகா ஓஹோ பள்ளிகளில் மாணவர்கள் பிஞ்சுப்பழங்களாக அவசரமாக உருமாறுகிறார்கள்
Oct 15, 2021 4 tweets 1 min read
பிழியப்பிழிய வசனமும் மியூசிக்கையும் போட்டுட்டா மட்டும் பாச உணர்ச்சி வந்துறாது உடன்பிறப்பே, இரத்தம் தெறிக்கக் தெறிக்க கொலைகளைக் காட்டிட்டே வந்தாலும், அம்மா, மகள், தம்பி, மகன் அப்டீன்ற உணர்வின் ஆதாரத்தை,நம் மனதை அசைத்துப்பார்க்கும் தருணங்களைத் தர, அடிப்படை கட்டமைப்பு..முக்கியம். இதுபோன்ற மரணவிளையாட்டுகளில் அடிப்படையான ஒன்று நட்பு. அதையும் மிக நேர்த்தியாகவே கையாண்டிருக்கிறது இத்தொடர். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தொடங்கி பணம் மட்டுமே எல்லாமும் அல்ல என முடித்து, அப்படி முடிந்திடுமா என இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தோடு முடிந்திருக்கிறது
May 19, 2021 5 tweets 1 min read
கி.ரா குறித்த விமர்சனம் எழுப்பிய வண்ணநிலவன். எவ்வளவு பிடித்த எழுத்து. எஸ்தர் ஒன்று போதும். எவ்வளவு எழுதினாலும் எவ்வளவு வாசித்தாலும் மனதை குளிர்கூழாங்கல்லை வைக்காமல் போனால் இப்படித்தான் சொற்கள் வந்து விழும்.
ஒருவர் இறந்த அன்று விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்பைக் கட்டவிழ்த்தல் எழுத்தின் மீது விமர்சனம் வைப்பது, இறந்துவிட்டால் விமர்சனம் செய்யக்கூடாதா என்பதெல்லாம் சரிதான். எப்போது எதைச் செய்ய வேண்டும் எனும் அடிப்படை நாகரீகம் கற்றுத்தந்திடாத இந்த இலக்கியம்,எழுத்து வாசிப்புகள் எல்லாம் இருந்தென்ன பயன்?
May 8, 2021 6 tweets 1 min read
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' அப்டீன்னு சொல்லிட்டு நிமிர்ந்து பாத்ததற்கு இங்க பல காரணங்கள் சொன்னாங்க..எனக்கு கேட்டதெல்லம் "த்தா நாந்தாண்டா அது" என்பதே. தெய்வத்தால் ஆகாதெனும் ஜாதகக் கைவிரிப்புகளுக்கு, அவரின் உழைப்பு எனும் மெய்வருத்தத்தின் கூலிதான் இந்த வெற்றி பக்குவம் எனும் சொல், முதல்நாளில் இருந்தே வேறு தளத்தில், எதிர்கட்சியுனருடன் அமர்ந்து உணவருந்தும் காட்சியில் இருந்து துவங்கி இருக்கிறது,மகிழ்ச்சி.
பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றவுடன் சீமாட்டிகள் நினைவிற்கு வந்தால், நல்லது நீங்கள் வளர்ந்த வளமான சூழல் அப்படி.