Author, Writing Coach, Translator. For enquiries & booking: nchokkan@gmail.com
Posts may contain Associate links
Jun 24, 2022 • 9 tweets • 2 min read
நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயல்கிறீர்கள். அப்போது கீழுள்ள இருவரில் யார் உங்களுக்குக் கூடுதலாக உதவக்கூடும் என்று நினைக்கிறீர்கள்?
Thread 🧵
|1
1. அந்த விஷயத்தை மிக நன்றாக அறிந்த வல்லுனர் ஒருவர் (அதாவது, உங்களுடைய Teacher)
2. அந்த விஷயத்தை ஓரளவு அறிந்த (அதாவது, உங்களைவிடச் சற்றுக் கூடுதலாக அறிந்த) நண்பர் (அதாவது, உங்களுடைய Senior மாணவர்)
|2
Jun 21, 2022 • 6 tweets • 1 min read
Stephen King சிறுகதைகள், நாவல் என்று எழுதிப் பழகிக்கொண்டிருந்த நேரம். எதுவும் அவருக்குக் குறிப்பிடக்கூடிய தொடக்கத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். |1
அப்போது, அவருக்கு ஒரு புது யோசனை வருகிறது. அதைக் கதையாக எழுதத் தொடங்குகிறார்.
ஆனால், மூன்று பக்கங்கள் எழுதியதும் அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. கசக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுகிறார்.
|2
Jun 19, 2022 • 12 tweets • 1 min read
பெரும்பாலான தந்தையரைப்போல் என் தந்தையும் என்னைச் சற்று உயரத்திலிருந்துதான் வளர்ந்தார். அவர் காவல்துறையில் பணிபுரிந்ததாலும், எங்கள் குடும்ப வட்டங்களில் அனைவருக்கும் (அவரைவிட வயதில் பெரியவர்களுக்குக்கூட) அவர்மீது மதிப்பு உண்டாகும்படி நடந்துகொள்கிறவர் என்பதாலும் |1
அவருடைய தந்தைமையிலும் ஒரு மிடுக்கு இருந்தது. கடைசிவரை அவர் சொன்னதைத்தான் நாங்கள் எல்லாரும் செய்தோம், அது சரியில்லை என்று எண்ணினாலும் மறுத்துப் பேசியவர்கள் குறைவு. |2
Jun 17, 2022 • 5 tweets • 1 min read
சாலையைக் கடக்க முயன்றேன். வண்டிகள் ஏதும் வருகின்றனவா என்று கவனமாகப் பார்த்துவிட்டுத்தான் கடந்தேன்.
ஆனால், திடீரென்று எதிர்த்திசையில் ஒருவர் வந்துவிட்டார். |1
நல்லவேளை, அவர் என்மீது மோதவில்லை. எப்படியோ சிரமப்பட்டு வண்டியை வளைத்துத் திருப்பி விர்ரென்று சென்றுவிட்டார்.
எனக்குச் செம கடுப்பு. ஆனால், என்ன செய்ய? இனிமேல் ஏழெட்டு ஒலி பெருக்கி வைத்துத் திட்டினால்கூட அவருக்குக் கேட்காது! |2
Apr 17, 2022 • 16 tweets • 2 min read
ஒருவர் எத்தனை முறை மறுக்கப்பட்டார், அந்த மறுப்புகளை எத்தனை முறை வெற்றிகரமாக முறியடித்தார், எத்தனை மறுப்புகள் இன்னும் திறந்திருக்கின்றன என்று வேறு யாரும் கணக்கு வைத்திருப்பதில்லை.
Thread 🧵
|1
ஆம், உலகம் நம்மைச் சுற்றிச் சுழல்வதில்லை என்பதைவிடப் பேரதிர்ச்சியான உண்மை இது: தொடர்ந்து நம்மை மறுக்கிறவர்கள்கூட இதையெல்லாம் கணக்கு வைத்துக்கொள்வதில்லை, அவர்களுக்கு மறுக்க வேறு விஷயங்கள் இருக்கின்றன, வேறு நபர்கள் இருக்கிறார்கள்.
|2
Mar 24, 2022 • 8 tweets • 1 min read
நீங்கள் பயன்படுத்திப் பார்த்து நல்ல பலன் தந்த நல்ல பழக்கங்கள்/உத்திகளைப்பற்றிப் பொதுவில் விளக்கமாக எழுதத் தயங்காதீர்கள். 'இதெல்லாம் எல்லாரும் செய்யறதுதானே? இதுல என்ன புதுசா இருக்கு? மத்தவங்க கேலி செய்வாங்களோ?' என்றெல்லாம் யோசிக்கவேண்டாம்.
Thread 🧵
|1
லட்சம் பேர் அதைப் பின்பற்றினாலும் அதை அறியாத ஆயிரம் பேர் இருக்கதான் செய்வார்கள், அவர்களுக்கு அது பயன்படும்.
நீங்கள் இதைத் தொடர்ந்து செய்தால் நான்கு நன்மைகள்:
|2
Dec 30, 2021 • 12 tweets • 2 min read
1940களில் Asian Paints நிறுவனம் தொடங்கப்பட்டபோது, பெயின்ட் தொழில் சில விநியோகஸ்தர்களைத்தான் (Distributors) முழுமையாக நம்பியிருந்தது, அவர்களுடைய தயவு இருந்தால்தான் எந்தவொரு பெயின்டும் நாடுமுழுவதும் சென்று சேர இயலும் என்கிற நிலைமை. |1
ஆனால், இந்த விநியோகஸ்தர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின்மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால், தங்களுடைய புதிய நிறுவனத்தையும் அதன் தயாரிப்புகளையும் எப்படி மக்களிடம் கொண்டுசெல்வது என்று தெரியாமல் திகைத்தார்கள் ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனர்கள்.|2
Dec 28, 2021 • 6 tweets • 1 min read
மனிதர்களைப்போல் சுயமுன்னேற்றப் புத்தகங்களிலும் இரண்டு வகைகள் உள்ளன: |1
1. மிக உயரத்தில் இருந்தாலும் பணிவாக, தணிவாக நம்முடன் பேசுகிற, பொறுமையாகக் கற்றுத்தருகிற, தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கிற புத்தகங்கள் 2. 'நீயெல்லாம் என்ன ஆள்? என்னைப் பார், ஏன் அங்கேயே இருக்கிறாய்? உடனடியாக இங்கே வந்துவிடு' என்று அதட்டுகிற புத்தகங்கள்
|2
Nov 21, 2021 • 14 tweets • 2 min read
பேருந்தில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் பையனும் ஆங்கிலம், கன்னடம் கலந்து ஜாவாவில் பேசிக்கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனித்தபோது, அந்தப் பெண் அந்தப் பையனுக்கு Mock Interview (வேலைக்கான மாதிரி நேர்முகத்தேர்வு) நடத்துகிறார் என்பது புரிந்தது. |1
அந்தப் பெண்ணின் கேள்விகளுக்கெல்லாம் அந்தப் பையன் பொறுப்பாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். திடீரென அந்தப் பெண் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு 'தெரியாத கேள்விக்குத் தெரியாதுன்னு பதில் சொல்லு,வேற எதையாவது சொல்லிச் சமாளிக்காதேன்னு எத்தனைவாட்டி சொல்லியிருக்கேன்?'என்றார் சினத்துடன்|2
Nov 21, 2021 • 8 tweets • 1 min read
இரவு எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை அன்றைய வேலைகளை முழுக்கவும் நிறைவாகவும் செய்துவிட்டு அந்தக் களைப்புடன் தூங்கச் செல்வது எனக்குப் பிடிக்கும். மறுநாள் காலை ஒரு புதிய தொடக்கம், புதிய வேலைகள் என்று நினைப்பேன், முந்தைய நாளின் மிச்சம் என்று ஏதும் இருந்தால் பிடிக்காது.|1
பல ஆண்டுகளாக இதைத்தான் வாழ்க்கைமுறையாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், நாளின் முடிவில் தூங்கச் செல்லும்போது உடல் சோர்வு, மூளைச் சோர்வுடன் இருப்பது நல்லதில்லை என்று ஒரு கட்டுரையில் படித்தேன். அதாவது, |2
Mar 8, 2021 • 10 tweets • 1 min read
Thread 👇
என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் மிக நல்ல திறமைசாலி, ஆனால், தான் எதைச் செய்தாலும், 'அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை' என்பதுபோல்தான் பேசுவார். அடுத்து செய்யவேண்டியது இன்னும் சிறப்பாக, இன்னும் பெரிதாக இருக்கவேண்டும் என்பதில்தான் அவருடைய கவனம் இருக்கும். |1
அவர் பணியாற்றிக்கொண்டிருக்கிற ஏதாவது ஒரு திட்டத்தைப்பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டால், 'ஏதோ போகுதுங்க' என்று அலட்சியமாகச் சொல்வார், 'என்னாச்சுங்க?' என்றால், 'ஒண்ணும் சொல்றதுக்கில்லை. அநேகமா செம சொதப்பலா வந்து நிக்கப்போகுதுன்னு நினைக்கறேன்' என்பார். |2
Mar 6, 2021 • 12 tweets • 1 min read
Thread 👇
யூட்யூபில் ஐந்து நிமிடங்களுக்குக் குறைவான வீடியோக்கள்தான் மிகுதியாகப் பார்க்கப்படுகின்றன என்கிறார்கள். என்னுடைய வீடியோக்களிலும் இதைக் கவனிக்கிறேன். 40 அல்லது 50 நிமிட உரையைக்கூட 4:56க்குமேல் பெரும்பாலானோர் பார்ப்பதில்லை. |1
இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால், மக்களுக்கு எளிதில் கவனம் சிதறிவிடுகிறது என்கிறார்கள். எனக்கென்னவோ அது உண்மையாகத் தோன்றவில்லை. |2
Feb 2, 2021 • 10 tweets • 1 min read
Thread 👇
இன்று நங்கையின் ஆன்லைன் வகுப்பில் ஒரு மாணவன், ‘மேடம், எனக்கு ஒரு Doubt’ என்று பேசத் தொடங்கினான்.
‘சொல்லு சாஹில், என்ன டவுட்?’ என்றார் ஆசிரியை.
சாஹில் சற்றுத் தயங்கினான். பின்னர், ‘இல்லை மேடம், இது ரொம்ப Silly டவுட்டா இருக்கு’ என்றான். |1
ஆசிரியை வாய்விட்டுச் சிரித்தார். ‘சில்லி டவுட்டுன்னெல்லாம் எதுவுமே கிடையாது சாஹில், தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வம் இருந்தாத் தயங்காம கேளு’ என்றார்.
அப்போதும் சாஹில் பேசவில்லை. ‘கமான்’ என்று அவனை ஊக்குவித்தார் ஆசிரியை. ’இதோ பாரு சாஹில், |2
Jan 31, 2021 • 5 tweets • 1 min read
Thread 👇
1841ம் ஆண்டு, தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவர் இங்கிலாந்தின் வரலாற்றை எழுத உட்காருகிறார். அதைப்பற்றி மெக்வே நேப்பியர் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்: |1
‘இந்தப் புத்தகத்தை நான் எப்படிச் சுவையாக எழுதப்போகிறேன், தெரியுமா? இளம் பெண்களெல்லாம் தங்கள் கையிலிருக்கிற புத்தம்புதிய நாவல்களைக் கீழே வைத்துவிட்டு இந்த வரலாற்றைப் படிக்கவேண்டும்.’ |2
Jan 8, 2021 • 18 tweets • 2 min read
என்னுடைய 'ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்' (எளிய ஸ்போக்கன் இங்கிலீஷ் கையேடு) நூலைப் படித்த தினேஷ் என்ற வாசகர் ட்விட்டரில் தனிச்செய்தி அனுப்பியிருந்தார். 'இந்த நூலில் ஆங்கிலப் பேச்சின் அடிப்படை அம்சங்களை நன்கு விளக்கியுள்ளீர்கள். இதைப் படித்தபிறகு வேறு என்ன படிக்கலாம்? |1
எங்களுடைய திறனை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம்?' என்று கேட்டிருந்தார். அவருக்கு எழுதிய பதில் இன்னும் பலருக்குப் பயன்படும் என்பதால் பொதுவில் வெளியிடுகிறேன். உங்களுக்குத் தேவைப்படாவிட்டாலும், தேவையுள்ள மற்றவர்களுக்கு இதை ஃபார்வர்ட்/ஷேர் செய்யுங்கள். |2
Jan 6, 2021 • 5 tweets • 3 min read
6. வீடும் தோட்டமும்
‘எழுத்தாளர்களில் இரண்டு வகை’ என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜார்ஜ் R. R. மார்ட்டின், ‘சிலர் வீடு கட்டுகிறார்கள்; வேறு சிலர் தோட்டம் போடுகிறார்கள்.’ |1
வீடு கட்டுகிற ஒருவருக்கு அந்த வீட்டைப்பற்றி எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருக்கும்: அறைகள், கூரை, மின் இணைப்புகள், குழாய்கள் என்று அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டுவிட்டுதான் அவர் கட்டத் தொடங்குகிறார். |2
Jan 6, 2021 • 5 tweets • 1 min read
கேரட் என்பது அப்படியே எடுத்துக் கழுவிக் கடித்துச் சாப்பிடவேண்டிய ஒரு காய். அதைப் பொரியலாக்கவேண்டும் என்று நினைத்த மனிதர் நிச்சயம் ஒரு பொழுது போகாத பொம்முவாகதான் இருந்திருக்கவேண்டும். |1
சொல்லப்போனால், கேரட் பொரியல் என்பது கேரட்டின் இயற்கையான சுவையைக் கெடுத்துவிடுகிறது. அல்வாவைத்தவிர வேறெதற்காகவும் கேரட்டை அடுப்பில் ஏற்றக்கூடாது என்று மதிப்பிற்குரிய அரசாங்கத்தார் ஒரு சட்டம் போடவேண்டும். |2
Jan 5, 2021 • 5 tweets • 3 min read
5. தேநீர்ப் பிரியர்
எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலுக்குத் தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக, இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த தேநீர் என்றால் அவ்வளவு பிடிக்கும்! |1
ஆனால், தேநீரில் சர்க்கரை போடுவது அவருக்குப் பிடிக்காது. ‘நீங்கள் உண்மையான தேநீர்ப் பிரியராக இருந்தால், தேநீரில் சர்க்கரையைப் போட்டு அதன் உண்மையான சுவையைக் கெடுக்காதீர்கள்’ என்று எழுதியிருக்கிறார் அவர். |2
Nov 17, 2020 • 15 tweets • 2 min read
எனக்கு அலுவலக வெள்ளைப் பலகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதன்முன் நின்று ஒரு பேனாவைத் திறந்துகொண்டால் போதும், 'கவித அருவிமாதிரி கொட்டுது' ஃபீலிங்தான். |1
இத்தனைக்கும் என்னுடைய கையெழுத்து திராபையானது, சுமாரான கோட்டுப்படங்களைக்கூட வரையத் தெரியாது. ஆனாலும் எதையும் வெண்பலகையில் சிந்திப்பதையே விரும்புவேன். எப்பேர்ப்பட்ட பிரச்னையை எடுத்துக்கொண்டாலும் சரி, அதைப் பலகையில் விரித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டால் போதும், |2
Nov 16, 2020 • 8 tweets • 1 min read
Bonafide Certificate என்ற சொல்லைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். 'இவர் எங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தைச் சேர்ந்தவர்' என்று அந்தப் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தின் நிர்வாகத்தினர் வழங்கும் சான்றிதழ் இது என்று தெரியும், ஆனால், |1
அதை ஏன் 'Bonafide Certificate' என்று அழைக்கிறார்கள் என்றோ, இதிலிருக்கும் 'Bonafide' என்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்றோ யோசித்ததில்லை.
இன்றைக்கு ஒரு கட்டுரையில் 'Mala fide' என்ற சொல்லைப் பார்த்தேன். இதை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதே என்று யோசிக்கும்போது, |2
Nov 6, 2020 • 21 tweets • 2 min read
ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2