கடந்த மாதம் 25-ந் தேதி #தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சேர்ந்த 17 வயது சிறுமி. இவருடன் படிக்கும் தோழிக்கு ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சொகுசு ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார்.
பிறந்தநாள் விழா முடிந்து சிறுமி வெளியே வர அவரை பின்தொடர்ந்து வந்த 5 வாலிபர்கள்...
சிறுமியை தூக்கி காரில் கடத்திச் சென்றனர். சிறுமி தன்னை விட்டுவிடும்படி கும்பலிடம் கெஞ்சியும் வலுக்கட்டாயமாக சிறுமியை காரில் வைத்தே 5 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்...
சுமார் 2 மணி நேரம் இந்த கொடூரம் நடந்துள்ளது...
Mar 3, 2022 • 15 tweets • 13 min read
வராலற்று புத்தகங்களில் மிகத்தவறாகவே இடம் பெற்றிருக்கும் இவர், ஒரு #மிகப்பெரிய#சாம்ராஜ்யத்தின்#சக்ரவர்த்தி, #எளிமையானவர், தன்னுடைய மதத்தின் மீது தீராத பற்று கொண்டவர், பிற மதத்தின் கலாச்சாரத்தை மதித்தவர், மாறாக 'சதி-உடன்கட்டை ஏறுவது' போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்கிய..
சமூகசீர்திருத்தவாதி, ஹிந்துக்களின் கோயில்களுக்கு பல இடங்களில் அவரது அரசு தரப்பில் நிலம் கொடுத்தவர் #முழு#இந்தியாவையே ஆண்ட பேரரசின் சொந்தக்காரர் #ஒளரங்கசீப்#மறைந்த#தினம்#இன்று அவர் பற்றி சில உண்மைகள்...
Sep 18, 2021 • 17 tweets • 7 min read
ஹைதராபாத் ரத்தம் மற்றும் வன்முறையால் சரணடைய செய்யப்பட்ட நாள் இன்று!...
பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுமார் 500 ராஜ்யங்களில் ஹைதராபாதும் ஒன்றாக இருந்தது...
விடுதலைக்கு பின்னர், பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின.
ஆனால் ஹைதராபாத் நிஜாமோ, தனி ராஜ்யமாக இருப்பதை வலியுறுத்தினார். இது புதுடில்லியிலுள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது...
Sep 18, 2021 • 16 tweets • 9 min read
சட்டசபையில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்:
22.08.1924-இல் சட்டசபையில் ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.
(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,...
Sep 17, 2021 • 4 tweets • 6 min read
பெரியாரைப் பற்றி பெரியாரே கூறியது!...
ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ,...
இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும்,...
Aug 7, 2021 • 7 tweets • 5 min read
ஒலிம்பிக்கில் வென்ற #தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசிய நாக்-அவுட் நாயகன்!...
1960 ரோம் ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காகக் களமிறங்கினார் #முஹம்மத்_அலி தொடக்க சுற்றிலேயே அனைவரும் அஞ்சும் வகையில் பெல்ஜியம் நாட்டு வீரரை குத்தி வீழ்த்தினார்...
அடுத்த சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்தார். கடைசியாக வலிமையான போலந்து நாட்டு வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
அப்போதே அவர் அதைப் பெரிய பெருமையாகக் கருதிக் கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது...
இடியப்ப நாயக்கர் பரம்பரை”. ”எல்லப்பச்செட்டி பரம்பரை”.
"கறியார பாபுபாய் பரம்பரை",
இவை வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுத்து வளர்த்தெடுத்த மையங்கள் ஆகும்.
சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் சல்பேட்டா பரம்பரை என பெயர் பெற்றது...
அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர்...
Apr 8, 2021 • 18 tweets • 3 min read
"ராவுத்த குமாரசாமி"
ஊர் எல்லையிலும் தமிழ் நிலமெங்கும் நிற்கும் குதிரைச் சிலைகளின் மேல் சுடலை மாடன், அய்யனார், கருப்பண்ணசாமி ஆகியோர் அமர்ந்திருப்பதுபோல ஒரு முஸ்லிமான ‘ராவுத்த குமாரசாமி’ அமர்ந்திருப்பதைக் கொங்கு பகுதியில், சிவகிரியை அடுத்துள்ள காகம் கிராமத்தில் பார்க்கலாம்.
காகம் கிராமத்தில், கண்ணன் கூட்டத்தினரால் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படும் ‘ராவுத்த குமாரசாமி’ சற்றே வேறுபடுகிறார். சிறு மினாராக்கள், விமானம் என்று கோயிலின் அமைப்பே, மதங்களைக் கடந்து இங்கு மனிதநேயம் வெழிபடப்படுவதை பார்க்கலாம். கோயிலின் நுழைவாயிலி லிருந்து...
Apr 8, 2021 • 4 tweets • 2 min read
தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது காங்கிரசை சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை.
ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது
அதை பொருட்டாக மதிக்காது அப்போதைய பிரதமர் நேரு பிடலை சந்தித்தார். முதன் முதலாக #என்னைக்#கௌரவித்த உலக #தலைவர்#நேரு என #பிடல் அச்சமயத்தில் நன்றி தெரிவித்தார்.